»   »  இளமி... ஜல்லிக்கட்டுக்காக ஒரு படம்!

இளமி... ஜல்லிக்கட்டுக்காக ஒரு படம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஜல்லிக்கட்டு, அதன் வரலாற்றைப் பின்னணியாக வைத்து ஒரு புதிய படம் உருவாகிறது, இளமி என்ற பெயரில்.

ஜோ புரொடக்ஷன்ஸ் என்ற பட நிறுவனம் அதிகப் பொருட் செலவில் இந்தப் படத்தை தயாரிக்கிறது.

Ilami, a movie on Jallikkattu

இந்த படத்தில் சாட்டை யுவன் கதாநாயகனாக நடிக்கிறார். 1700 ஆண்டு கால கட்டத்தில் வாழ்ந்த இளைஞர்களின் தோற்றம் வர வேண்டும் என்பதற்காக யுவன் ரொம்பவே மெனக் கெட்டிருக்கிறார்.

நாயகியாக அனு கிருஷ்ணா நடிக்கிறார். முக்கிய வேடத்தில் கிஷோர் நடிக்கிறார். கல்லூரி அகில் இந்த படத்தில் வில்லனாக நடிக்கிறார்.
ஒளிப்பதிவு - யுகா.எம்.

பழனிபாரதி, ஜீவன் மயில், ராஜா குருசாமி பாடல்களுக்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார்.

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் ஜூலியன் பிரகாஷ். இவர் இயக்குநர் ரவிமரியாவின் உதவியாளர். இவர் இயக்கும் முதல் படம் இது.

இளமி பற்றி இயக்குநரிடம் கேட்டோம்...

"எதையும் தியாகம் செய்து ஜல்லிக்கட்டில் ஜெயிக்க வேண்டும் என்று போராடுவது வழக்கம். ஏன் தங்களது உயிரே போனாலும் பரவாயில்லை என்கிற போர் குணம் உள்ள இளைஞர்களை பற்றிய கதை இது.

மின் கம்பங்கள், செல்போன் டவர் போன்றவற்றை தவிர்ப்பதற்காக பல இடங்களில் அலைந்து திரிந்து படப் பிடிப்புக்கான இடங்களை தேர்வு செய்தோம். இளமி இளமை ததும்பும் காதல் கதையாகவும், அதிரடி ஆக்ஷன் படமாகவும் உருவாகிறது.

படப்பிடிப்பு தேனிமாவட்டத்தில் குரங்கணி, தலக்கோணத்தில் நரபைலு என்ற இடத்திலும் இரண்டு ஊர் அரங்குகளை அமைத்து பிரமாண்டமாக படப்பிடிப்பை நடத்தி உள்ளோம்.

மறக்கடிக்கப் பட்டுக் கொண்டிருக்கும் ஜல்லிக்கட்டை மீண்டும் திரையில் புதுப்பிக்கிறோம்," என்றார் ஜூலியன் பிரகாஷ்.

English summary
Ilami is a new movie directed by debutant Julien Prakash based on Jallikkattu.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil