For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  இசைஞானிக்கு வயது 72!

  By Manjula
  |

  சென்னை :இசைஞானி இளையராஜாவின் 72 வது பிறந்ததினம் இன்று. இந்தியா முழுவதுமே அவரின் பிறந்த நாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் அவரின் பிறப்பு மற்றும் சிறப்புகளைப் பற்றிப் பார்க்கலாம்.

  தமிழ்நாட்டில் உள்ள தேனி மாவட்டம் பண்ணைப்புரம் என்னும் சிற்றூரில் டேனியல் ராமசாமி மற்றும் சின்னத்தாயம்மாள் தம்பதியருக்கு மகனாக ஜூன் மாதம் 2 ஆம் தேதி, 1943 ஆம் ஆண்டில், கிறிஸ்துவ மதத்திற்கு மாறிய ஒரு இந்து குடும்பத்தில் பிறந்தார். அவரது இயற்பெயர் ஞானதேசிகன். இவருக்கு பாவலர் வரதராஜன், டேனியல் பாஸ்கர், அமர் சிங் என்று மூன்று சகோதரர்களும், கமலாம்மாள், பத்மாவதி என்ற இரு சகோதரிகளும் உள்ளனர். அவரது சகோதரரான அமர் சிங் என்ற கங்கை அமரனும் ஒரு இசையமைப்பாளர் மற்றும் பாடலாசிரியர்.

  ஞானதேசிகனாகப் பிறந்த அவர், டேனியல் ராசய்யா என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு, பள்ளியில் சேர்க்கப்பட்டார். சிறு வயதிலிருந்தே வாத்தியங்கள் வாசிப்பதில் மிகவும் ஆர்வமாக இருந்த அவர், தன்ராஜ் மாஸ்டரிடம் வாத்தியங்கள் கற்கத் தொடங்கினார். ஆர்மோனியம், பியானோ மற்றும் கிட்டார் போன்ற இசைக்கருவிகளை மேற்கத்திய பாணியில் வாசிப்பதில் தேர்ச்சிப் பெற்ற அவரது பெயரை, அவரது மாஸ்டர் ‘ராஜா' என்று மாற்றினார்.

  வீட்டில் வறுமைக் காரணமாகத் தனது பள்ளிப்படிப்பைப் பாதியிலே நிறுத்திக்கொண்டார். தனது 14வது வயதில் நாட்டுப்புறப் பாடல்களால் ஈர்க்கப்பட்ட அவர், 19வது வயதில், அதாவது 1961 ஆம் ஆண்டில் தனது சகோதரர்களுடன் நாடகக்குழுவில் சேர்ந்து, இந்தியாவில் உள்ள பல இடங்களுக்கு சென்று சுமார் இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட கச்சேரிகளிலும், நாடகங்களிலும் கலந்து கொண்டார். பின்னர், லண்டனில் உள்ள டிரினிடி இசைக்கல்லூரியில் சேர்ந்து, கிளாஸ்ஸிக்கல் கிட்டார் தேர்வில் தங்கப் பதக்கமும் வென்றார்.

  இசையுலகப் பிரவேசம்

  இசையுலகப் பிரவேசம்

  நாடகக்குழுவில் இசைக் கச்சேரிகளும், நாடகங்களும் பங்கேற்று வந்த அவர், 1970களில் பகுதிநேர வாத்தியக்கலைஞராக சலில் சௌத்ரியிடம் பணிபுரிந்தார். பின்னர், கன்னட இசையமைப்பாளரான ஜி. கே. வெங்கடேஷ் அவர்களின் உதவியாளராக சேர்ந்த அவர், அவரது இசைக்குழுவில் 200க்கும் மேற்பட்ட படங்களில் பணிபுரிந்திருக்கிறார். இந்தக் காலக்கட்டங்களில் தான், அவருக்குக் கிடைத்த ஓய்வு நேரங்களில் அவர் சுயமாகப் பாடல்கள் எழுதி, அவர் இருந்த இசைக்குழுவில் உள்ள சக வாத்தியக்கலைஞர்களை அதற்கு இசை அமைக்குமாறு கேட்டுக் கொள்வார். மேலும், அவர் ஏ. ஆர். ரகுமான் அவர்களின் தந்தையான ஆர். கே. சேகரிடம் வாத்தியங்களை வாடகைக்கு எடுத்தும் இசையமைப்பார்.

  திரையுலக வாழ்க்கை

  திரையுலக வாழ்க்கை

  அவரைத் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகம் செய்தவர், பஞ்சு அருணாச்சலம் அவர்கள். 1975ல் பஞ்சு அருணாச்சலம் தனது படமான ‘அன்னக்கிளி' திரைப்படத்தில் இசையமைப்பாளராக அவரை ஒப்பந்தம் செய்தார். இப்படத்தில், மேற்கத்திய இசையோடு தமிழ் மரபையும் புகுத்தி, அவர் உருவாக்கிய ‘மச்சானப் பாத்தீங்களா?' என்ற பாடல் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்ததால், அவர் தொடர்ந்து ‘ஆறிலிருந்து அறுபது வரை', ‘16 வயதினிலே', ‘24 மணி நேரம்', ‘100வது நாள்', ‘ஆனந்த்', ‘கடலோர கவிதைகள் ‘சின்ன கவுண்டர்', ‘சின்ன தம்பி', ‘சின்னவர்', ‘தர்ம துரை', ‘பாயும் புலி', ‘பணக்காரன்', ‘எஜமான்', ‘குணா', ‘இன்று போய் நாளை வா', ‘இதயத்தை திருடாதே', ‘காக்கி சட்டை', ‘காதலுக்கு மரியாதை', ‘பயணங்கள் முடிவதில்லை', ‘அக்னி நட்சத்திரம்', ‘நாயகன்', எனப் பல நூற்றுக்கணக்கானப் படங்களுக்கு இசையமைத்துப் புகழின் உச்சிக்கே சென்றார்.

  பாடல்கள் 5௦௦௦ படங்கள் 1௦௦௦

  பாடல்கள் 5௦௦௦ படங்கள் 1௦௦௦

  தமிழ் சினிமாவில் பல படங்கள் இவரின் பாடல்களாலும், இசையாலும் 100 நாட்களை சர்வசாதாரணமாகக் கடந்தன. இதுவரை 5௦௦௦ மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்து இருக்கிறார். சுமார் 1௦௦௦ படங்களுக்கு இசையமைத்து விட்டார். இன்னும் எத்தனை இசையமைப்பாளர்கள் வந்தாலும் ராஜாவின் சாதனையை ஒருவராலும் முறியடிக்க முடியாது. பாலாவின் தாரை தப்பட்டை படம் இசைஞானியின் 1௦௦௦ மாவது படமாக அமைந்து உள்ளது.

  பிற இசைகளிலும் பாய்ந்த ஆர்வம்

  பிற இசைகளிலும் பாய்ந்த ஆர்வம்

  ராயல் ஃபில்ஹார்மோனிக் ஆர்கெஸ்டிராவில், அவர் ‘சிம்பொனி' ஒன்றை இசையமைத்தார். அந்த ஆர்கெஸ்டிராவில் இசையமைப்பவர்களை "மேஸ்ட்ரோ" என்று அழைப்பர். ஆனால், அவர் இசையமைத்த சிம்பொனி இன்றளவும் வெளியிடப்படவில்லை என்றாலும், அவரைத் தமிழ் திரைப்படக் கலைஞர்கள் "மேஸ்ட்ரோ" என்று அழைக்கின்றனர்.

  உருவாக்கிய ராகங்கள்

  உருவாக்கிய ராகங்கள்

  "பஞ்சமுகி" என்ற கர்நாடக செவ்வியலிசை ராகத்தினை உருவாக்கினார்.இசை ரசிகர்களுக்கு ஒரு புதிய பரிமாணத்தை அறிமுகம் செய்த ‘ஹவ் டு நேம் இட்' ("How to name it") என்ற இசைத்தொகுப்பினை முதலில் வெளியிட்டார்."இளையராஜாவின் கீதாஞ்சலி" என்ற தமிழ் பக்தி இசைத்தொகுப்பினையும், "மூகாம்பிகை" என்ற கன்னட பக்தி இசைத் தொகுப்பினையும் வெளியிட்டார்.ஆதி சங்கரர் எழுதிய "மீனாக்ஷி ஸ்தோத்திரம்" என்ற பக்திப்பாடலுக்கு இசையமைத்தார்

  இளையராஜா ஒரு சிறந்த எழுத்தாளரும் கூட

  இளையராஜா ஒரு சிறந்த எழுத்தாளரும் கூட

  இந்து மதத்தின் ஆன்மீகத்திலும், இலக்கியத்திலும், புகைப்படக்கலையிலும் மிகுந்த ஆர்வமுள்ள இளையராஜா , ‘சங்கீதக் கனவுகள்', ‘வெட்ட வெளிதனில் கொட்டிக் கிடக்குது', ‘வழித்துணை', ‘துளி கடல்', ‘ஞான கங்கா', ‘பால் நிலாப்பாதை', ‘உண்மைக்குத் திரை ஏது?', ‘யாருக்கு யார் எழுதுவது?', ‘என் நரம்பு வீணை', ‘நாத வெளியினிலே', ‘பள்ளி எழுச்சி பாவைப் பாடல்கள்', ‘இளையராஜாவின் சிந்தனைகள்' போன்றமிகச்சிறந்த புத்தகங்களை எழுதியுள்ளார்.

  இல்லற வாழ்க்கை

  இல்லற வாழ்க்கை

  ஜீவாவை தனது வாழ்க்கைத் துணையாக ஏற்றுக் கொண்டார், இந்த தம்பதியினருக்கு கார்த்திக்ராஜா , யுவன் ஷங்கர்ராஜா என்ற இரு மகன்களும், பவதாரிணி என்ற மகளும் உள்ளனர் . மூவருமே தமிழ்த் திரையுலகின் இசைத்துறையில் இசையமைப்பாளர்களாகவும், பாடகர்களாகவும் இருந்து வருகின்றனர். இளையராஜாவுக்கு உற்றதுணையாக விளங்கிய ஜீவா 2011 ம் ஆண்டு இவ்வுலகை விட்டு மறைந்து ராஜாவின் வாழ்வில் நீங்காத சோகத்தை ஏற்படுத்திச் சென்று விட்டார்.

  “அ” என்னும் எழுத்தே ஆரம்பம்

  “அ” என்னும் எழுத்தே ஆரம்பம்

  இளையராஜா இசையமைக்க ஆரம்பித்தது அன்னக்கிளி திரைப்படத்தின் மூலம், கார்த்திக் ராஜா இசையமைத்த முதல் படம் "அலெக்ஸாண்டர்", பவதாரிணி இசையமைத்த முதல் படம் "அஞ்சலி" இன்று திரையுலகைக் கலக்கி வரும் யுவன்சங்கர் ராஜா இசையமைத்த முதல் படமும் "அ"வில் தான் ஆரம்பித்தது "அரவிந்தன்"

  விருதுகளால் நிறைந்த வாழ்க்கை

  விருதுகளால் நிறைந்த வாழ்க்கை

  1988ம் ஆண்டு தமிழ்நாடு அரசு அவருக்கு ‘கலைமாமணி விருது' வழங்கி சிறப்பித்தது. 2010 - இந்திய அரசின் மிக உயரிய விருதான ‘பத்ம பூஷன்' வழங்கிகௌரவிக்கப்பட்டார்.2012 - ‘சங்கீத நாடக அகாடமி விருது' வென்றார்.1988 - மத்திய பிரதேச அரசின் ‘லதா மங்கேஷ்கர் விருது' வழங்கப்பட்டது. இசையில் அவர் புரிந்த சாதனைக்காக, 1994ஆம் ஆண்டில் அண்ணாமலை பல்கலைக்கழகமும், 1996ஆம் ஆண்டில் மதுரை காமராசர் பல்கலைக்கழகமும் அவருக்கு ‘முனைவர் பட்டம்' வழங்கி கௌரவித்தது.

  நான்கு தேசிய விருதுகள்

  நான்கு தேசிய விருதுகள்

  தேசிய விருதுகளை ‘சாகர சங்கமம்' என்ற படத்திற்காக 1984லும், ‘சிந்து பைரவி' என்ற படத்திற்காக 1986லும், ‘ருத்ர வீணா' என்ற படத்திற்காக 1989லும், ‘பழசி ராஜா' என்ற படத்திற்காக 2௦௦9லும் பெற்றார்.

  பிலிம்பேர் விருதுகள்

  பிலிம்பேர் விருதுகள்

  1989ல் அவரது சிறந்த பங்களிப்பிற்காகவும், 1990ல் ‘போபிலி ராஜா' என்ற தெலுங்கு திரைப்படத்திற்காகவும், 2௦௦3ல் ‘மனசினக்கரே' என்ற மலையாளத் திரைப்படத்திற்காகவும், 2௦௦5ல் ‘அச்சுவிண்டே அம்மா' என்ற மலையாளத் திரைப்படத்திற்காகவும் ஃபிலிம்ஃபேர் விருதுகளைப் பெற்றார்.

  தமிழக அரசின் விருதுகள்

  தமிழக அரசின் விருதுகள்

  தமிழ்நாடு மாநிலத் திரைப்பட விருதுகளை 1977ல் ‘16 வயதினிலே' படத்திற்காகவும், 1980ல் ‘நிழல்கள்' படத்திற்காகவும், 1981ல் ‘அலைகள் ஓய்வதில்லை' படத்திற்காகவும், 1988ல் ‘அக்னி நட்சத்திரம்' படத்திற்காகவும், 1989ல் ‘வருஷம் 16' மற்றும் ‘கரகாட்டக்காரன்' படங்களுக்காகவும், 2009ல் ‘அஜந்தா' படத்திற்காகவும் வென்றார்.

  கேரள அரசின் விருதுகள்

  கேரள அரசின் விருதுகள்

  கேரள மாநிலத் திரைப்பட விருதுகளை, 1994ல் ‘சம்மோஹனம்' என்ற படத்திற்காகவும், 1995ல் ‘கலபாணி' படத்திற்காகவும், 1998ல் ‘கள்ளு கொண்டொரு பெண்ணு' என்ற படத்திற்காகவும் பெற்றார்.

  விருதுகள் மொத்தம் 24

  விருதுகள் மொத்தம் 24

  தனது நாற்பது வருடங்களைக் கடந்த திரை வாழ்க்கையில் இதுவரை சுமார் 24 விருதுகளை வென்றிருக்கிறார்.

  English summary
  Regarded as one of the finest music composers of India, Ilayaraja celebrates his 72nd birthday today. He has won four national awards, three for music direction and one for best background score. In 2010 he was awarded the Padma Bhushan for his contribution in the field of music.Ven as predominantly, he has scored music in the south, there are also some fine works in Bollywood. He has composed ad jingles and nurtured quite a few talented music directors, including AR Rahman. In 1993, he became the first Indian to compose a full symphony performed by the Royal Philharmonic Orchestra in London.Here is a compilation of some of his best works. Do have a listen to this and enjoy the beauty of his music.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X