twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஏ.ஆர்.ரஹ்மானுடன் கரம் கோர்க்கும் இளையராஜா...Request accepted...தீயாய் பரவும் ட்வீட்

    |

    சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான் கோரிக்கையை ஏற்பதாக இளையராஜா கூறி இருப்பது இசை பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது. இது கனவா இல்லை நிஜமா என பலர் ஆச்சரியமாக கேட்டு வருகின்றனர்.

    ஏ.ஆர்.ரஹ்மான் நடத்தும் இசைக்குழு சார்பில் துபாய் எக்ஸ்போ 2020ல் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதே போல் இசை நிகழ்ச்சி ஒன்றிற்காக இசைஞானி இளையராஜாவும் துபாய் சென்றுள்ளார். அப்போது துபாயில் உள்ள ஏ.ஆர்.ரஹ்மானின் ஃபிர்தோஸ் ஸ்டூடியோவுக்கு இளையராஜா திடீர் விசிட் அடித்துள்ளார். இளையராஜாவை பார்த்ததும் சந்தோஷமாக வரவேற்றார் ஏ.ஆர்.ரஹ்மான்.

    அட செம...பீஸ்ட் பட நடிகையுடன் ஜோடி சேரும் பிக்பாஸ் கவின் அட செம...பீஸ்ட் பட நடிகையுடன் ஜோடி சேரும் பிக்பாஸ் கவின்

    இளையராஜாவிடம் ஏ.ஆர்.ரஹ்மான் வேண்டுகோள்

    இளையராஜாவிடம் ஏ.ஆர்.ரஹ்மான் வேண்டுகோள்

    இளையராஜா தனது ஸ்டூடியோவுக்கு வந்ததை போட்டோவுடன் சோஷியல் மீடியாவில் பகிர்ந்த ஏ.ஆர்.ரஹ்மான், அதோடு இளையராஜாவிற்கு கோரிக்கை ஒன்றையும் வைத்தார். மேஸ்ட்ரோ எங்கள் ஸ்டூடியாவிற்கு வந்ததில் பெரு மகிழ்ச்சி. எங்களின் இசைக்குழுவினருடன் எதிர்காலத்தில் அவர் இசையமைப்பார் என நம்புகிறேன் என தனது ஆசையை கோரிக்கையாக குறிப்பிட்டிருந்தார்.

    Request accepted

    Request accepted

    ஏ.ஆர்.ரஹ்மானின் இந்த பதிவிற்கு யாரும் எதிர்பாராத விதமாக இளையராஜா இன்று ட்விட்டரில் பதிலளித்துள்ளார். இளையராஜா தனது ட்வீட்டில், Request accepted...விரைவில் இசையமைப்பு துவங்கும் என பதிவிட்டிருந்தார். இளையராஜாவின் இந்த ட்வீட் தீயாய் பரவி வருகிறது. இசை ரசிகர்கள் இதை திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர். இது உண்மை தானா என பலர் ஆச்சரியமாக கேட்டு வருகின்றனர்.

    இது நிஜமா இல்லை கனவா

    இது நிஜமா இல்லை கனவா

    இது கனவா இல்லை நினைவா...இது உலக அமைதிக்கான விதை. உலகத்திற்கே இது தான் தேவை. மேட்ஸ்ரோ மற்றும் ஏ.ஆர்.ரஹ்மானிற்கு நன்றி. இது விஜய்-அஜித் சேர்ந்து நடிக்கும் படம் மாதிரி மாஸா இருக்குமே. அது தான் இசை. அனைவரும் கனவு கண்டது இதைத் தானே. ஏதோ ஒன்று ஆத்ம பூர்வமாக நடந்து வருகிறது. இசை ராஜாவும், இசை கடவுளும் இணையும் இந்த சங்கமத்திற்காக காத்திருக்கிறோம் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

    ரசிகர்களின் நீண்ட நாள் கோரிக்கை

    ரசிகர்களின் நீண்ட நாள் கோரிக்கை

    ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராக அறிமுகமாவதற்கு முன் இளையராஜாவிடம் கீ போர்ட் வாசிப்பாளராக இருந்து வந்தார். இளையராஜா உடன் இணைந்து ஏறக்குறைய 500 படங்களில் ஏ.ஆர்.ரஹ்மான் பணியாற்றி உள்ளார். ஆனால் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராக ஆன பிறகு இருவரும் இணைந்து ஒரு படத்தில் கூட பணியாற்றவில்லை. இவர்களுக்கு இடையே என்ன பிரச்சனை என பலரும் கேட்டு வந்தனர். இந்நிலையில் ரசிகர்களின் நீண்ட கால கோரிக்கைக்கு இளையராஜா இன்று ஓகே சொல்லி உள்ளார்.

    English summary
    Yesterday, Ilayaraja-A.R. Rahman's meeting was held in Dubai. A.R. Rahman shared this info with a photo on social media. He also requested Ilayaraja to compose with his arcestra in the future. Surprisingly, Ilayaraja accepted A.R. Rahman's request today. Music lovers celebrate this as a festival mode.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X