»   »  இளையராஜாவின் இசையில் "அம்மா கணக்கு"!

இளையராஜாவின் இசையில் "அம்மா கணக்கு"!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தனுஷ் தயாரிக்கவுள்ள புதிய படமான அம்மா கணக்கிற்கு இளையராஜா இசையமைக்க இருக்கிறார்.

அஸ்வினி ஐயர் இயக்கத்தில் 'அம்மா கணக்கு' என்ற படத்தை தயாரிக்க இருக்கிறார் தனுஷ். அம்மா - மகள் இருவருக்கும் இடையே நடைபெறும் பாசப் போராட்டத்தை கதைக்களமாக கொண்டது இப்படம்.

அஸ்வினி, இதற்கு முன்பு நில் பேட்டே சனாட்டா என்கிற படத்தை இயக்கியுள்ளார். இது பல சர்வதேசப் பட விழாக்களில் விருதைப் பெற்றுள்ளது. அந்தப் படம்தான் தற்போது அம்மா கணக்காக உருவாகிறது.

அமலா பால்...

அமலா பால்...

இப்படத்தில் அமலாபால், சமுத்திரக்கனி, ரேவதி ஆகியோர் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்கள். இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்க இருக்கிறார்.

புதிய கூட்டணி...

புதிய கூட்டணி...

தனுஷும் இளையராஜாவும் இணைந்து பணியாற்றுவது இதுவே முதல்முறை ஆகும். ஆரம்பத்தில் இளையராஜாவின் மகனான யுவன்சங்கர் ராஜா இசையில் நடித்து வந்தார் தனுஷ்.

அனிருத்...

அனிருத்...

பின்னர் அனிருத் இசைக்கு மாறினார் தனுஷ். இவர்களின் கூட்டணியில் வெளியான பாடல்களும் வெற்றி பெற்றது. அனிருத்தை வளர்த்து விட்டதே தனுஷ்தான்.

பீப் பாடல்...

பீப் பாடல்...

இந்நிலையில், சமீபத்தில் பீப் பாடல் பிரச்சினையில் சிக்கினார் அனிருத். அதனைத் தொடர்ந்து அவரது பல பட வாய்ப்புகள் பறிபோயின. இப்போது தனுஷும், அனிருத்தை விட்டு விலகியுள்ளார், வேறு வழியில்லாமல்.

இளையராஜா...

இளையராஜா...

தனுஷ் தற்போது நடித்து வரும் கொடி படத்திற்கு சந்தோஷ் நாராயணனை இசையமைக்க வைத்தார் தனுஷ். அதன் தொடர்ச்சியாக தான் தயாரிக்கும் அம்மா கணக்கு படத்திற்கு இளையராஜாவை அவர் நாடியுள்ளார்.

தனுஷ் பெருமை...

தனுஷ் பெருமை...

இது தொடர்பாக தனுஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘இளையராஜா சாரின் இசை ஆசிர்வாதம் அம்மா கணக்கு படத்திற்கு இருப்பதைப் பற்றி அறிவிப்பதில் மிகவும் பெருமைப்படுகிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.

தாரை தப்பட்டை...

தாரை தப்பட்டை...

பொங்கலன்று தான் இளையராஜாவின் 1000வது படம் என்ற பெருமையுடன் பாலாவின் தாரை தப்பட்டை படம் ரிலீசாகி, திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Maestro Ilayaraja has been roped in to compose the music for actor Dhanush’s next Tamil production venture “Amma Kanakku”, under his home banner Wunderbar Films.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil