»   »  25 வருடங்களுக்குப்பின் கமல் படத்திற்கு பெயர் சூட்டும் இளையராஜா

25 வருடங்களுக்குப்பின் கமல் படத்திற்கு பெயர் சூட்டும் இளையராஜா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தனது அடுத்த படத்தின் தலைப்பை இளையராஜா தேர்வு செய்திருப்பதாக கமல் தெரிவித்திருக்கிறார்.

கமல்-ஸ்ருதி ஹாசன் முதன்முறையாக இணையும் படம் வருகின்ற 29 ம் தேதி நடிகர் சங்க நிலத்தில் தொடங்குகிறது.

இந்தப் படத்தின் மூலம் 11 ஆண்டுகளுக்குப்பின் இளையராஜா-கமல்ஹாசன் கூட்டணி மீண்டும் இணைகிறது. இந்நிலையில் இப்படத்தின் தமிழ் தலைப்பை இளையராஜா தேர்வு செய்துள்ளதாக கமல் தெரிவித்திருக்கிறார்.

Ilayaraja Give Kamal's Next Movie Title

இதுகுறித்து கமல் "என்னுடைய அடுத்த படத்திற்கு எளிமையான மற்றும் சிலிர்ப்பூட்டும் ஒரு தலைப்பை கண்டுபிடித்துவிட்டேன்.

தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் தயாராகும் இப்படத்தின் தமிழ் தலைப்பை இளையராஜாவும், இந்தி தலைப்பை சுரபாஜியும் தேர்ந்தெடுத்துள்ளனர்" எனக் கூறியிருக்கிறார்.

25 வருடங்களுக்கு முன் கமல் நடிப்பில் வெளியான 'குணா' படத்தின் தலைப்பை இளையராஜா தேர்வு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
Kaml Haasan says "I found a simple and exciting title for my new trilingual MI moving images.The Hindi title came from Saurabhji .The Tamizh from illayaraja".

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil