Don't Miss!
- News
நான் கிரிக்கெட் வீரர்! பவுலர்களை பார்த்து பயந்தால் வேலைக்கு ஆகுமா! அமமுக வேட்பாளர் சிவபிரசாத் பளிச்!
- Technology
யூஸ் பண்றீங்களோ இல்லயோ.. உங்க லேப்டாப்பில் இந்த வெப் ப்ரவுஸர் இருக்கா? அப்போ அலெர்ட் ஆகிக்கோங்க!
- Lifestyle
வாய் துர்நாற்றத்திற்கு குட்-பை சொல்லணுமா? இதோ அதை தடுக்கும் சில இயற்கை வழிகள்!
- Sports
"அந்த ஒரு விஷயம்.. உலகில் சூர்யகுமாரிடம் மட்டுமே உள்ள திறமை.. ரிக்கிப் பாண்டிங் புகழாரம் - விவரம்
- Automobiles
டாடாவை கதையை முடிக்க பிளான்... ரயிலைபோல் அடுத்தடுத்து ஆறு எலெக்ட்ரிக் கார்களை களமிறக்கு போகிறது மாருதி சுஸுகி!
- Finance
2 நாளில் 12 லட்சம் கோடி ரூபாய் அவுட்.. சென்செக்ஸ் 800 புள்ளிகளுக்கு மேல் சரிவில் முடிவு..!
- Travel
சூரிய சுற்றுலாவா? இது என்ன புதிய சுற்றுலாவா இருக்கே – இதை பார்க்க எங்கு செல்வது?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
ரஜினி, கமல் பெயர் இருக்கக் கூடாதுன்னு சொன்னேன்... சிவாஜிக்கு மரியாதை இல்லை: இளையராஜா ஓப்பன் டாக்
சென்னை: நடிகர் திலகம் சிவாஜி கணேசன் குறித்து முனைவர் மருது மோகன் 'சிவாஜி கணேசன்' என்ற நூலை எழுதியுள்ளார்.
சென்னை சேத்துப்பட்டில் நடைபெற்ற இந்த நூல் வெளியீட்டு விழாவில் இளையராஜா, பாரதிராஜா, பாக்யராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
சிவாஜி கணேசன் நூலை இளையராஜா வெளியிட, அதனை சிவாஜியின் மகன்களான ராம்குமாரும் பிரபுவும் பெற்றுக் கொண்டனர்.
பாபா ரீ-ரிலீஸுக்கு முன் சிவாஜி தி பாஸ்... ரஜினி ரசிகர்களுக்கு திடீரென ட்ரீட் கொடுத்த ஏவிஎம்!

சிவாஜி கணேசன் நூல் வெளியீட்டு விழா
தமிழ்த் திரையுலகின் நடிகர் திலகம் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் சிவாஜி கணேசன். பராசக்தி திரைப்படத்தில் தொடங்கிய சிவாஜியின் திரைப் பயணம் படையப்பா வரை பல பரிமாணங்களைக் கொண்டிருந்தது. ஏராளமான மேடை நாடகங்கள், திரைப்படங்கள் என நடிப்பின் பல்கலைக்கழகமாகவே திகழ்ந்த நடிகர் சிவாஜி கணேசன், கடந்த 2001ம் ஆண்டு காலமானார். இந்நிலையில், அவர் பற்றி அறியப்படாத ஏராளமான தகவல்களை முனைவர் மருது மோகன் நூலாக தொகுத்துள்ளார். 'சிவாஜி கணேசன்' என்ற பெயரில் அவர் எழுதியுள்ள இந்த நூல் வெளியீட்டு விழா சென்னை சேத்துப்பட்டில் நடைபெற்றது.

இளையராஜா, பாரதிராஜா, பாக்யராஜ்
இந்த நூல் வெளியீட்டு விழாவில் இளையராஜா, பாரதிராஜா, பாக்யராஜ், சிவாஜியின் மகனும் நடிகருமான பிரபு, ராம்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இந்தப் புத்தகத்தை இயக்குநர்கள் பாரதிராஜா, பாக்யராஜ் முன்னிலையில் இளையராஜா வெளியிட, சிவாஜி கணேசனின் மகன்களான ராம்குமாரும் பிரபுவும் பெற்றுக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து இந்நிகழ்ச்சியில் பேசிய முனைவர் மருது மோகன், சிவாஜி கணேசன் பற்றி தான் செய்த ஆய்வுகளின் பின்னணியில், சிவாஜி குறித்து அறிந்துகொண்ட ஏராளமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதில், சத்துணவு திட்டத்துக்கு முதன் முதலில் 1 லட்சம் ரூபாய் நிதி கொடுத்தது, யானை மொழி அறிந்த ஒரே நடிகர் சிவாஜி தான் என பல தகவல்கள் இடம்பெற்றிருந்தன.

ரஜினி, கமல் பெயர் இருக்கக் கூடாது
அவரைத் தொடர்ந்து பேசிய இசையமைப்பாளர் இளையராஜா, சிவாஜி கணேசன் குறித்து மிகவும் உருக்கமாகப் பேசினார். அப்போது "குதிரையில் சிவாஜி அண்ணன் அமர்ந்திருப்பது போல் அவருக்கு ஒரு வெள்ளி சிலை பரிசளிக்க வேண்டும் என கேட்டார்கள். அதற்கு ரஜினியும் கமலும் இவ்வளவு தொகை கொடுத்ததாகவும் அவர்கள் சொன்னார்கள். ஆனால், மொத்த தொகையையும் நானே கொடுத்து விடுகிறேன், யார் பெயரும் அதில் இருக்கக் கூடாது எனக் கூறி அதற்கான செலவை நான் மட்டுமே ஏற்றுக் கொண்டேன். இதை தம்பட்டம் அடிப்பதற்காக சொல்லவில்லை. சிவாஜி அண்ணனுக்கு திரையுலகில் யாரும் மரியாதை செய்யவில்லை. எந்த அரசும் அவருக்கு மரியாதை செய்யவில்லை. தனி மனிதனாக நான் மட்டும் தான் செய்தேன்" என பேசினார்.

ஒருநாள் முழுவதும் பேச வேண்டும்
இளையராஜாவின் இந்த உருக்கமான பேச்சு, நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களையும் கண்கலங்க வைத்தது. மேலும் பேசிய இளையராஜா, தமிழ்நாட்டில் உள்ள சிவாஜி கணேசனின் ரசிகர்களை ஒன்று திரட்டி, அவர்களுடன் ஒருநாள் முழுவதும் நடிகர் திலகத்தை பற்றிப் பேச வேண்டும். இதுதான் தனது ஆசை எனவும் கூறினார். இளையராஜா - சிவாஜி கணேசன் கூட்டணியில் வெளியான முதல் மரியாதை படத்தின் பாடல்கள் இன்றளவும் ரசிகர்களின் ஃபேவரைட்டாக உள்ளது. பாரதிராஜா இயக்கிய இந்தப் படம் சூப்பர் ஹிட் அடித்ததும் குறிப்பிடத்தக்கது.