இளையராஜா என்றைக்கோ செத்துட்டான்.. நான் பிறந்திருக்கவே கூடாது.. இசைஞானி இப்படி பேச என்ன காரணம்?
சென்னை: இசைஞானி இளையராஜா தமிழ் சினிமா மட்டும் இல்லாமல் மொத்த இந்திய சினிமாவுக்குமே பெருமைமிகு அடையாளம். இவரது இசையால் தான் நான் தினமும் நிம்மதியாக இருக்குறேன், அவரது இசையால் தான் நான் நல்லபடியாக தூங்குகிறேன், உயிருடன் இருக்கிறேன் என்று கூறும் அளவுக்கு இசை ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர். இவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் அளித்த பேட்டியில் பேசியது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக அவர் தான் என்றைக்கோ செத்து விட்டதாகவும், தான் பிறந்திருக்க கூடாது என்றும் கூறியுள்ளார்.
இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான நீதானே என் பொன் வசந்தம் படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்தார். அந்த படத்தின் புரோமோசனுக்காக, இசைஞானி மற்றும் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் கலந்துரையாடுவது போல, இளையராஜாவை கௌதம் வாசுதேவ் மேனன் பேட்டி எடுப்பது போன்ற நிகழ்ச்சி ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்டது. இந்த பேட்டி தொடர்பான வீடியோ இப்போதும் இணையத்தில் உள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

நான் செத்துவிட்டேன்: அந்த பேட்டியில் ,இன்று நீங்கள் சந்தோஷமாகத் தானே இருக்குறீர்கள் என்று கௌதம் வாசுதேவ் மேனன் எழுப்பிய கேள்விக்கு, பலருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் பதில் அளித்தார். அதாவது, " நான் என்னை எப்போதே இழந்துவிட்டேன். இன்னும் சொல்லப்போனால் நான் என்றைக்கோ இறந்துவிட்டேன். ஒரு மனிதனாக நான் கூறுகிறேன், யாராவது நமது தவறுக்கு பெருமைப் படுவார்களா? இந்தத் தவறை நான் செய்யவில்லை. நான் பிறந்தது என்பதைத்தான் தவறு என்கிறேன். என்னைக் கேட்டால் இது தேவையில்லாத பிறப்பு கௌதம். மக்களுக்கு முன்னால் இங்கு வருவது, அமர்வது, லண்டனுக்குச் சென்று இசையமைப்பது இதெல்லாம் எதை அர்த்தப்படுத்துகின்றன.
இசையமைப்பதை நிறுத்திவிடுவேன்: இதை எப்படி என்னால் பெருமையாக உணர முடியும். என் முன்னாலே என்னை பலரும் புகழ்கிறார்கள், அதை என்னால் பொருத்துக் கொள்ளவே முடியவில்லை. எனக்கு தானே தெரியும் என்னை. நான் எவ்வளவு கற்றுக் கொண்டுள்ளேன் என்பது எனக்கு தானே தெரியும். ஆனால் எனக்கு என்ன கிடைக்கிறது பார்த்தீர்களா? இந்த பேரும் புகழும் எப்படி வருகிறது என்றே தெரியவில்லை. எனக்கு இது எல்லாம் எதனால் என்று தெரிய வருகிறதோ, அன்றைய தினத்தில் நான் இசையமைப்பதை நிறுத்திவிடுவேன்" என்று தெரிவித்துள்ளார். இந்த பேட்டி தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

ரசிகர்கள் கமெண்ட்: இந்த வீடியோவுக்கு இணையவாசிகள் தொடங்கி இளையராஜாவின் ரசிகர்கள் வரை பலரும் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து வருகிறார்கள். அதாவது, இளையராஜா கூறுவதைப் புரிந்து கொள்ளவே 100 வருஷம் ஆகும் போலயே என்று ஒருவர் கமெண்ட் போட்டுள்ளார். இன்னொருவர், ஐயா நீ தெய்வம்யா என பகிர்ந்துள்ளார். ஒருவர் எல்லாம் நான் உயிர் வாழவே உங்கள் இசை தான் காரணம் என பதிவிட்டுள்ளார். பலரும் அந்த வீடியோவைப் பகிர்ந்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











