»   »  ‘ஒரு மெல்லிய கோடு’ மிரட்டும் த்ரில்லர் கதை: மிரண்ட அர்ஜூன், பாராட்டிய இளையராஜா

‘ஒரு மெல்லிய கோடு’ மிரட்டும் த்ரில்லர் கதை: மிரண்ட அர்ஜூன், பாராட்டிய இளையராஜா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சிவப்பு ரோஜாக்கள்' படம் தான் நான் இசையமைத்த முதல் திரில்லர் படம். அந்த வகையில் இந்த 'ஒரு மெல்லிய கோடு' படமும் வெற்றி பெரும் என்று பாராட்டியுள்ளார் இசைஞானி இளையராஜா.

இளைராஜா இசையமைத்துள்ள 1002வது திரைப்படம் ஒரு மெல்லிய கோடு. இது மிரட்டலான திரில்லர் க்ரைம் கதை என்கிறார் இயக்குநர். இந்தப் படத்தின் துவக்கவிழா பூஜை சமீபத்தில் பிரசாத் ஸ்டூடியோவில் நடைபெற்றது.

இதில் நடிகர்கள் நடிகர்கள் அர்ஜூன், ஷாம், பரத், விஜய் சேதுபதி, இசையமைப்பாளர் இளையராஜா, இயக்குனர்கள் எஸ்.பி.ஜனநாதன், கல்யாண் குமார், ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம், தயாரிப்பாளர் தனஞ்செழியன் உள்ளிட்ட எராளமான திரையுலக பிரமுகர்கள் கலந்துக்கொண்டார்கள்.

ஒரு மெல்லிய கோடு

ஒரு மெல்லிய கோடு

ராஜீவ் காந்தி கொலை வழக்கை மையமாக வைத்து 'குப்பி', பெங்க்களூர் காவலர் குடியிருப்பில் நடைபெற்ற கலவரத்தை மையமாக வைத்து 'காதலர் குடியிருப்பு', காவல்துறையிடம் வீரப்பன் பிடிபட்ட சம்பவத்தை மையமாக வைத்து 'வணயுத்தம்' ஆகியப் படங்களை இயக்கிய ஏ.எம்.ஆர்.ரமேஷ், தனது அடுத்தப் படத்திற்கு 'ஒரு மெல்லிய கோடு' என்று தலைப்பு வைத்துள்ளார்.

அர்ஜூன் - ஷாம்

அர்ஜூன் - ஷாம்

இப்படத்தில் அர்ஜுன், ஷாம் ஆகியோர் நாயகர்களாக நடிக்கிறார்கள். ஏற்கனவே 'வணயுத்தம்' படத்தில் இயக்குனர் ஏ.எம்.ஆர்.ரமேஷுடன் கைகோர்த்த அர்ஜூன், இப்படத்தின் மூலம் இரண்டாவது முறையாக அவருடன் இணைகிறார்.

அக்ஷாபட் – மனிஷா கொய்ராலா

அக்ஷாபட் – மனிஷா கொய்ராலா

இப்படத்தில் நாயகியாக அக்ஷாபட் நடிக்கிறார். முக்கிய வேடம் ஒன்றில் மனிஷாகொய்ராலா நடிக்கிறார். மேலும், ரவிகாளே, ஜீன், அருள்மணி ஆகியோரும் நடிக்கிறார்கள்.

இளையராஜா 1002

இளையராஜா 1002

இளையராஜா இசையமைப்பில் உருவாகும் இப்படத்திற்கு சேது ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். கே.வி.கிருஷ்ணா ரெட்டி படத்தொகுப்பு செய்ய, ஆனந்தன் கலையை நிர்மாணிக்கிறார். விட்டால் நடனம் அமைக்க, தயாரிப்பு நிர்வாகத்தை இந்துமதி, தனசே குடப்பூர் ஆகியோர் கவனிக்கிறார்கள்.

த்ரில்லர் படம்

த்ரில்லர் படம்

அக்ஷயா கிரியேசன்ஸ் சார்பில் அண்ணாமலை என்பவர் தயாரிக்கும் இப்படத்தை, எழுதி இயக்குகிறார் ஏ.எம்.ஆர்.ரமேஷ், படம் குறித்து பேசிய அவர், "படு திரில்லர், ஆக்ஷன் படமாக 'ஒரு மெல்லிய கோடு' இருக்கும். விறுவிறுப்பான திரைக்கதை, படம் பார்க்கும் ரசிகர்களை சீட்டின் நுனிக்கே கொண்டு செல்லும் அப்படியொரு காட்சிகள் இருக்கும். மேக்கிங் முதற்கொண்டு அணைத்து விஷயங்களிலும் "ஒரு மெல்லிய கோடு'பாராட்டப்படும் படமாக இருக்கும்." என்றார்.

இளையராஜா வாழ்த்து

இளையராஜா வாழ்த்து

நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட இளையராஜா பேசுகையில், "ஹாலிவுட் படங்களை விட தமிழில் தான் அதிக படங்கள் தயாராகின்றன. நிறைய திறமையான தொழில்நுட்ப கலைஞர்கள் இருப்பது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.

வெற்றிப்படம்

வெற்றிப்படம்

'சிவப்பு ரோஜாக்கள்' படம் தான் நான் இசையமைத்த முதல் திரில்லர் படம். அந்த வகையில் இந்த 'ஒரு மெல்லிய கோடு' படமும் வெற்றி பெரும்." என்றார்.

மிரட்டிய கதை

மிரட்டிய கதை

இயக்குனரிடம் இந்த கதையை கேட்டவுடன் மிரண்டு விட்டேன் என்றார் படத்தின் ஹீரோ அர்ஜூன். அப்படியொரு திரைக்கதை. நான் நடித்த படங்களிலேயே இது மிக முக்கியமான படமாக இருக்கும்." என்றார்.8 வருடம் 8 மாதம் 8மணி நேரத்தில் நடைபெறும் முக்கிய சம்பவம் பற்றிய த்ரில்லர் கதை.

அர்ஜூன் பிட்னஸ்

அர்ஜூன் பிட்னஸ்

படத்துவக்க விழாவில் பேசிய ஷாம் அர்ஜூன் சார் அவருடைய பிட்னஸ் ரொம்ப பிடிக்கும் என்றார். இப்போது ஒரு மெல்லிய கோடு படத்தில் அவருடன் சேர்ந்து ஹீரோவாக நடிக்கிறேன். எங்களுடன், இந்தியன் முதல்வன் படத்தில் நடித்த மனிஷா கொய்ராலா நடிக்கிறார். இளையராஜாவின் இசை படத்திற்கு முக்கிய பலம் என்றார்

English summary
Oru Melliya Kodu Movie Launch on Chennai. Arjun, Shaam, play lead role in Oru Melliya kod movie

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil