Don't Miss!
- News
"புடிங்க அவங்கள.." தமிழக இளைஞர்களை விரட்டியடித்த வடமாநிலத்தவர்! திருப்பூரில் உண்மையில் நடந்தது என்ன
- Sports
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 - இந்திய அணியின் பிளேயிங் லெவன் என்ன? பிட்ச் ரிப்போர்ட்
- Finance
Budget 2023: கல்வித் துறைக்கும், ஹெல்த்கேர் துறைக்கும் முக்கியத்துவம் கிடைக்குமா?
- Technology
திடீர் விலைக்குறைப்பு! கம்மி விலையில் புது Smart Watch வாங்க சரியான நேரம்.. அதுவும் OnePlus வாட்ச்!
- Automobiles
நாடே காத்து கிடந்த எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் தொடக்கம்! விலை இவ்ளோதானா! அதான் எல்லாரும் அலை மோதறாங்க!
- Lifestyle
இந்த இந்திய மசாலா பொருட்கள் உங்க குடலுக்கு பல அதிசயங்களை செய்யுமாம்... அவை என்னென்ன தெரியுமா?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
காசியில் மீண்டும் இளையராஜா கச்சேரி... முதன்முறையாக மேடையில் அரங்கேறும் திருவாசகம்!
வாரணாசி: தமிழ்த் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான இளையராஜா ஆயிரம் படங்களுக்கும் மேல் இசையமைத்துள்ளார்.
சென்னை உட்பட பல பகுதிகளிலும் இசைக் கச்சேரி நடத்தியுள்ள இளையராஜா, கடந்த மாதம் காசியிலும் தனது இசை நிகழ்ச்சியை நடத்தினார்.
இதனைத் தொடர்ந்து நாளை மீண்டும் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி காசி விஸ்வநாதர் ஆலயத்தில் நடக்கவுள்ளது.
இளையராஜா - ரஜினி - வாலி பாடலை கோவிலில் செதுக்கி வைத்துள்ள கதை தெரியுமா?

தமிழ் ரசிகர்களின் இசை வைத்தியர்
அன்னக்கிளி படத்தில் இருந்து தனது இசை பயணத்தை தொடங்கிய இளையராஜா, இதுவரை ஆயிரம் படங்களுக்கும் மேல் இசையமைத்து சாதனை படைத்துள்ளார். தமிழ் மட்டுமின்றி உலகம் முழுவதும் இளையராஜாவின் இசைக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். திரைப்படங்கள் தவிர்த்து திருவாசகம் உள்ளிட்ட பல இசை ஆல்பங்களும் இளையராஜாவின் இசை வார்ப்பில் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளன. இந்நிலையில், கடந்த சில நாட்களாக காசியில் முகாமிட்டுள்ளார் இளையராஜா.

தமிழ்ச் சங்கத்தில் இசை நிகழ்ச்சி
வாரணாசியில் மத்திய அரசின் சார்பில் 'காசி தமிழ்ச் சங்கம்' நிகழ்ச்சி நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக காசியில் பாரதியார் வாழ்ந்த வீட்டில் அவருக்கு சிலையும் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 19ம் தேதி தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் இளையராஜாவின் இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதனை பிரதமர் மோடி உள்ளிட்ட ஏராளமானோர் கண்டு ரசித்தனர். இந்நிலையில் மீண்டும் நாளை (டிச.15) இளையராஜாவின் இசை நிகழ்ச்சி காசி விஸ்வநாதர் ஆலயத்தில் நடக்கவுள்ளது.

முதன்முறையாக திருவாசகம்
காசி விஸ்வநாதர் கோயில் அறக்கட்டளையின் முதன்மை நிர்வாக அதிகாரி சுனில் குமார் வர்மாவின் அழைப்பை ஏற்று இளையராஜா இந்த இசை நிகழ்ச்சியை நடத்துவதாக சொல்லப்படுகிறது. நாளை மாலை 6 மணிக்கு தொடங்கும் இந்த கச்சேரியில், மொத்தம் 16 பாடல்களை இளையராஜா பாடவுள்ளாராம். அங்குள்ள சிவன் சிலை முன்பு நடைபெறும் இந்த இசை நிகழ்ச்சியில், முதன்முறையாக திருவாசத்தில் இடம்பெற்ற 4 பாடல்களை பாடவுள்ளார் இளையராஜா. அதனால், இசை ரசிகர்களிடையே இந்த இசைக் கச்சேரியை காண அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளது.

ஏற்பாடுகள் தீவிரம்
இளையராஜாவின் இசைக் கச்சேரிக்காக காசி விஸ்வநாதர் ஆலயம் சார்பில் ஏற்பாடுகள் மிக தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றன. கோயிலுக்குள் நடக்கும் இந்த இசை கச்சேரியில் சுமார் ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் இருக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளன. பிரம்மாண்டமான மண்டபத்தில் நடக்கும் இளையராஜாவின் இசை நிகழ்ச்சியை காண உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்களும் ரசிகர்களும் காசியில் குவிந்துள்ளனர்.