ராக் வித் ராஜா.. சென்னை தீவுத் திடலில் இளையராஜாவின் இசை கச்சேரி.. உற்சாகத்தில் ரசிகர்கள்!

சென்னை: தமிழ் சினிமாவின் இசை ஜாம்பவான் மேஸ்ட்ரோ இளையாராஜாவின் இசைக்கச்சேரி இன்று சென்னையில் நடைபெறவிருக்கிறது.

70களில் ஆரம்பித்த இசைப் பயணம் 2022லும் அதே உத்வேகத்துடன் இன்னமும் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது.

இசைக்கச்சேரி சென்னையில் நடைபெற உள்ள நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இளையராஜா ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

சென்னையில் இசைக்கச்சேரி

சென்னையில் இசைக்கச்சேரி

இசையரசர் இளையராஜாவின் இன்னிசை கச்சேரி இன்று மார்ச் 18ம் தேதி சென்னை தீவுத்திடலில் நடைபெறுகிறது. அதன் அறிவிப்புடன் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றையும் வெளியிட்டு இளையராஜா தனது ரசிகர்களை நிகழ்ச்சிக்கு வர அழைப்பு விடுத்திருக்கிறார். அதற்கான டிக்கெட் புக்கிங் அசுர வேகத்தில் நடைபெற்று வருகிறது.

ராக் வித் ராஜா

ராக் வித் ராஜா

ராக்கு முத்து ராக்கு பாடலை அப்படியே வரிகளை மாற்றி ராக்கு வித் ராஜா என பாடும் வீடியோவை இளையராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் தற்போது வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளார். இளையராஜாவின் இசைக்கச்சேரியை நேரில் கண்டு ரசிக்க சென்னை ரசிகர்கள் பெரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

டிஎஸ்பி வராரு

டிஎஸ்பி வராரு

புஷ்பா படத்தில் ஓ சொல்றியா, என் சாமி, ஸ்ரீவள்ளி என ஒவ்வொரு பாடல்களையும் வித்தியாசமாக கொடுத்து வேற லெவல் ஹிட் அடித்துள்ள இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இந்த இசை நிகழ்ச்சியில் இளையராஜாவுடன் இணைந்து ஸ்டேஜை தெறிக்க விட காத்திருக்கிறார். நிச்சயம் இந்த இசை நிகழ்ச்சி ரசிகர்களுக்கு செம ட்ரீட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மகன் துபாயில்

மகன் துபாயில்

சென்னையில் இளையராஜா இசை கச்சேரி செய்யும் நிலையில், மகன் யுவன் சங்கர் ராஜா துபாய் எக்ஸ்போ நிகழ்ச்சியில் இசைக்கச்சேரி செய்ய உள்ளார். அதன் அறிவிப்பை சமீபத்தில் யுவன் சங்கர் ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து துபாய் ரசிகர்களை குதூகலப்படுத்திய நிலையில், சென்னை ரசிகர்கள் இளையராஜாவின் இசை மழையில் நனைய இன்று தயாராகி வருகின்றனர்.

மீண்டும் நிகழ்ச்சிகள்

மீண்டும் நிகழ்ச்சிகள்

கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ஏகப்பட்ட இசை கச்சேரிகள், பட விழாக்கள் என எதுவுமே நடைபெறாமல் இருந்த நிலையில், தற்போது மீண்டும் நிகழ்ச்சிகள் தொடங்க ஆரம்பித்து இருக்கின்றன. சீனாவில் மறுபடியும் ஓமிக்ரான் பரவல் அதிகரித்து வரும் நிலையில், மீண்டும் ஒரு லாக்டவுன் இங்கே வரக் கூடாது என அனைத்து மக்களும் வேண்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X