»   »  "யார்கிட்ட கேட்கவேண்டிய கேள்விய என்கிட்ட வந்துகேட்டுட்டு இருக்க?"

"யார்கிட்ட கேட்கவேண்டிய கேள்விய என்கிட்ட வந்துகேட்டுட்டு இருக்க?"

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை வெள்ள நிவாரணம் சார்ந்த விழாவில் கலந்து கொண்ட இளையராஜா, பீப் பாடல் குறித்து கேள்வி கேட்ட செய்தியாளரிடம், யாரிடம் கேட்க வேண்டிய கேள்வியை என்னிடம் கேட்கிறாய் என்று கோபத்தைக் காட்டியதால் சலசலப்பு ஏற்பட்டது.

அனிருத் இசையில் சிம்பு பாடிய பீப் பாடல் கடும் கண்டனங்களையும், எதிர்ப்புகளையும் சந்தித்து வருகிறது. இது தொடர்பாக இருவருக்கும் நேரில் விளக்கம் அளிக்கும் படி தனித்தனியே சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

ILAYARAJA SLAMS A REPORTER!

இந்நிலையில், இன்று சென்னையில் நடந்த சென்னை வெள்ள நிவாரணம் சார்ந்த பாராட்டு விழாவில் இளையராஜா கலந்துகொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது ஒரு செய்தியாளர் பீப் பாடல் குறித்து அவரிடம் கருத்து கேட்டார். இதைக் கேட்டு ஆத்திரமடைந்த இளையராஜா, செய்தியாளரிடம் கோபமாகப் பேசினார்.

அப்போது, இளையராஜா "உனக்கு அறிவு இருக்கா? அந்தப் பிரச்னைக்காகவா வந்துருக்கோம். உனக்கு அறிவு இருக்கா? நான் கேட்குறதுக்குப் பதில் சொல்லு?" என செய்தியாளரிடம் எதிர்கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த அந்த செய்தியாளர் "அறிவு இருந்ததால தான் கேக்குறேன்" என பதிலளித்தார். உடனே இளையராஜா, "அறிவு இருக்குங்குறத எந்த அறிவை வைச்சு கண்டுபிடிக்குற?" என மீண்டும் கேள்வி எழுப்பினார்.

அதற்கு அந்த செய்தியாளர், "ஒரு இசையமைப்பாளர் நீங்க. உங்க துறை சார்ந்து உங்களிடம் கேக்குறதுல என்ன தவறு இருக்கு?" எனக் கேட்டார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர் சுற்றியிருந்தவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தினர். பின்னர் சுதாரித்துக் கொண்ட இளையராஜா, "யார்கிட்ட கேட்கவேண்டிய கேள்விய என்கிட்ட வந்துகேட்டுட்டு இருக்க?" என சிரித்தவாறே கூறினார். இதனைத் தொடர்ந்து நிலைமை அங்கு சகஜமானது.

வெள்ள பாதிப்பையும், அனைவரும் சேர்ந்து செய்யும் நிவாரணப் பணிகளையும் திசை திருப்ப சிலர் செய்த முயற்சியே சிம்பு - அனிருத் விவகாரம் என்று ஒரு பேச்சு அடிபடுகிறது. கிட்டத்தட்ட அது உண்மைதானோ என்று நினைக்க வைத்து விட்டது இளையராஜாவிடம் அந்த செய்தியாளர் கேட்ட கேள்வி.

English summary
Ilayaraja attended an event in Ethiraj College, Chennai today (17th of December) in connection with Chennai flood rehabilitation. Post this event the maestro addressed the media and was spotted losing his cool with a reporter who inquired about the “Beep Song” controversy.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil