»   »  "இளையராஜா சவுண்டு சர்வீஸ்".. இசை: கார்த்திக் ராஜா!

"இளையராஜா சவுண்டு சர்வீஸ்".. இசை: கார்த்திக் ராஜா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா அதிக படங்களுக்கு இசையமைப்பதில்லை. மிக மிக செலக்டிவ்வாகத்தான் இசை தருகிறார். அந்த வகையில் தற்போது புதிய படம் ஒன்றில் அவர் கமிட் ஆகியுள்ளார்.

படத்தின் பெயர்தான் மிகவும் சுவாரஸ்யமானது.. இளையராஜா சவுண்டு சர்வீஸ்.. இதுதான் படத்தின் பெயராகும். படத்தின் பெயரைப் பார்த்தாலே தெரியும் இது நிச்சயம் ஒரு வில்லேஜ் சப்ஜெக்ட்தான் என்று.

Ilayaraja Sound Service Movie First Look Poster

படத்தின் ஷூட்டிங் கிட்டத்தட்ட முடியும் தருவாயை நெருங்கி விட்டதாம். விரைவில் கார்த்திக் ராஜா தனது வேலையைத் தொடங்கவுள்ளாராம்.

இளையராஜா சவுண்டு சர்வீஸ் படத்தை இயக்குவது மாத்தளை தம்பி. முற்றிலும் கிராமத்துக் கதை இது. இசைக்கு முக்கியத்துவமானதும் கூட.

கார்த்திக் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். அவர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இசையமைக்கும் படம் இது.

மாணிக்கம் படம் இசையமைப்பாளரான கார்த்திக் ராஜா அதிக படங்களில் இசையமைக்கவில்லை. தனக்குப் பிடித்த படம் என்றால் மட்டுமே ஒப்புக் கொண்டு இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

விரைவில் இப்படம் தொடர்பான முழு விவரமும் வெளியாகுமாம்.

English summary
Ilayaraja Sound Service is an upcoming tamil cinema directed by Maththalai thambi.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil