»   »  திருப்பதியில் இளையராஜா..!

திருப்பதியில் இளையராஜா..!

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருப்பதி: இசைஞானி இளையராஜா நேற்று திருப்பதி கோவிலுக்குச் சென்று ஏழுமலையானை வழிபட்டார்.

நேற்று காலை திருப்பதிக்குச் சென்றிருந்தார் இளையராஜா. அங்கு விஐபிகளுக்கான பிரேக் சமயத்தின்போது கோவிலுக்குச் சென்று ஏழுமலையானை வழிபட்டார்.

Ilayaraja visits Tirupathi temple

பக்தர் கூட்டம் அதிகமாக இருக்கும் சமயத்தில் விஐபி அனுமதி ரத்து செய்யப்படும். அந்த சமயத்தில்தான் இளையராஜா சென்றிருந்தார். இருப்பினும் முன்னுரிமை அடிப்படையில் தேவஸ்தானம் அவருக்கு தரிசன ஏற்பாடு செய்திருந்தது.

தேவஸ்தான அதிகாரிகள் இளையராஜாவை வரவேற்று கோவிலுக்குள் அழைத்துச் சென்றிருந்தனர். ஏழுமலையானை மனமுருக வழிபட்ட பின்னர் அங்கிருந்து இளையராஜா புறப்பட்டுச் சென்றார்.

English summary
Maestro Ilayaraja paid a visit to Tirupathi temple yesterday. He was welcomed by the temple officials
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil