Just In
- 3 min ago
சேலையில் பின்னழகை காட்டி சுண்டி இழுக்கும் தமிழ் நடிகை!
- 19 min ago
2 வருடத்துக்குப் பிறகு ஷூட்டிங்.. இயக்குனர், உதவி இயக்குனர் திடீர் மோதல்.. பிரபல ஹீரோ அப்செட்!
- 23 min ago
ஸ்டைலா கெத்தா மாஸா கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட டிராவலிங் டைரிஸ் புகைப்படங்கள்!
- 37 min ago
லவ்வு கேட்டேன்.. நீங்கல்லாம் 'வச்சுக்கோங்க' வகை.. ஃபேன்ஸ் இல்ல ஃபேமிலி.. டிவிட்டரில் உருகும் பாலாஜி!
Don't Miss!
- Automobiles
உற்பத்தி செலவீனம் அதிகரிப்பு... கார்களின் விலையை அதிரடியாக உயர்த்தியது டாடா!
- News
பழனி, திருச்செந்தூரில் தைப்பூச திருவிழா... பாதையாத்திரையாக வரும் பக்தர்கள் - அரோகரா முழக்கம்
- Sports
ஆல்ரவுண்டர் தேவைதான்.. அதுக்குன்னு இவரேதான் வேணுமா என்ன?.. மோசமான வீரருக்கு குறி வைக்கும் சிஎஸ்கே
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 23.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் தங்களது காதலை வெளிப்படுத்த உதந்த நாளாம்…
- Finance
முதல் பாலிலேயே சிக்சர் அடித்த பைடன்.. அமெரிக்க நிறுவனங்கள் வரவேற்பு..!
- Education
பட்டதாரி இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு! ரூ.1.75 லட்சம் ஊதியத்தில் அரசாங்க வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மே 4-ல் திருவண்ணாமலையில் கூடும் இளையராஜா ரசிகர்கள்!
சென்னை: இளையராஜாவின் யாஹூ குழும ரசிகர்கள் தங்களின் 30வது சந்திப்பை வரும் மே 4-ம் தேதி திருவண்ணாமலையில் நடத்துகின்றனர்.
திருவண்ணாமலை ரமணாஸ்மரமத்துக்கு எதிரில் உள்ள ரமணா டவர்ஸில் இந்த சந்திப்பு நடக்கிறது.

இளையராஜாவின் ரசிகர்கள் யாஹூ க்ரூப்ஸில் 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பித்த குழு இது. இதுவரை பல்வேறு ஊர்களில் ரசிகர்கள் சந்திப்பு நடத்தி, ராஜாவின் பாடல்கள் குறித்து கலந்துரையாடல் நடத்தியுள்ளனர்.
அந்த வகையில் ராஜா ரசிகர்களின் 30வது சந்திப்பு இது. தங்களது குழுவின் 15வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் வகையிலும் இந்த சந்திப்பை நிகழ்த்துகின்றனர்.
வரும் மே 4, ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியிலிருந்து 1 மணி வரை இந்த நிகழ்ச்சி நடக்கிறது.
மறைந்த இயக்குநர் பாலு மகேந்திராவுக்கு மரியாதை செய்யும் வகையில் 'இளையராஜாவும் பாலு மகேந்திராவும்' என்ற தலைப்பில் இந்த நிகழ்ச்சி நடக்கிறது. மூடுபனியில் தொடங்கி தலைமுறைகள் வரை இந்த இரு மேதைகளும் பணியாற்றிய படங்களின் பாடல்கள் பற்றி இந்த சந்திப்பில் கலந்துரையாடவிருக்கிறார்கள்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்புவோர், ilaiyaraajameeting@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் மொபைல் எண்ணைக் குறிப்பிட்டு தங்களின் பங்கேற்பை உறுதிப்படுத்த வேண்டும். இளையராஜா - பாலு மகேந்திரா படங்களிலிருந்து எந்த படம் அல்லது பாடல் குறித்து பேசப் போகிறோம் என்பதையும் இந்த மின்னஞ்சலில் தெரிவிக்க வேண்டும்.
வரும் ஏப்ரல் 30-ம் தேதி, முற்பகல் 11.59 மணியுடன் முன்பதிவு முடிவடைகிறது.
இத்தகவை இளையராஜா யாஹூ குழும ரசிகர்கள் அமைப்பின் நிறுவனரும் ஒருங்கிணைப்பாளருமான டாக்டர் விஜய் வெங்கட்ராமன் தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சி நடக்கும் இடம் - விலாசம்:
Ramana Towers,
10/J/1, Chengam Road,
4th Street,
Opp. Ramanashramam,
Thiruvannamalai - 606 603.
Tamil Nadu, India.
நிகழ்ச்சி நடக்கும் திருவண்ணாமலை, இளையராஜாவின் மனதுக்கு மிக நெருக்கமான இடமாகும். மாதம் ஒரு முறையாவது திருவண்ணாமலை ரமணாஸ்ரமத்துக்குப் போய் தியானம் செய்வது ராஜாவின் வழக்கம்.