»   »  இளையராஜா வாழ்க்கை தொலைக்காட்சி தொடர் ஆகிறது

இளையராஜா வாழ்க்கை தொலைக்காட்சி தொடர் ஆகிறது

Subscribe to Oneindia Tamil

இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு தொலைக்காட்சித் தொடராக ஜெயா டிவியில் ஒளிபரப்பரப்படவிருக்கிறது.

இந்த மெகா தொடரை பிரபல இயக்குநர் பாலா மற்றும் இயக்குநர்கள் அனுமோகன், சரவணபாண்டியன்ஆகியோர் இயக்குகிறார்கள். இத் தொடரில் இளையராஜாவின் குழந்தைப் பருவம் முதல் இதுவரை அவர்வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்மான சம்பவங்கள் தொகுக்கப்படவிருக்கின்றன.

இளையராஜா தேனி மாவட்டம் அல்லி நகரத்தைச் சேர்ந்தவர். சிறு வயது முதலே இசை மீது தீவிர ஆர்வம்கொண்டவர். கடும் முயற்சிக்கும், போராட்டத்திற்கும் பிறகு, அன்னக்கிளி படத்திற்கு இசையமைக்க அவருக்குவாய்ப்பு கிடைத்தது. அப் படம் பெரும் வெற்றியைப் பெறவே, அவருக்கு வாய்ப்புகள் தொடர்ந்து வந்ததன.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளில் 800க்கும் மேற்பட்ட படங்ளுக்குஇசையமைத்திருக்கிறார். இவரின் இசைக்காகவே வெள்ளி விழா கொண்டாடிய படங்கள் எத்தனையோ உண்டு.

ப்ளட் ஸ்டோன் என்ற ஆங்கிலப் படத்துக்கு பின்னணி இசையமைத்து, ஹாலிவுட்டிலும் தடம் பதித்தார். அதன்பின்சிம்பொனி இசை அமைத்து தமிழகத்திற்கு பெருமைத் தேடித் தந்தார்.

இந்தத் தகவல்கள் அனைத்தும் இத் தொடரில் இடம் பெறவிருக்கின்றன. பிரபல படத் தயாரிப்பாளார் ராமநாதன்தயாரிக்கும் இத் தொடர், தமிழ் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ம் தேதி முதல் ஜெயா டிவியில்ஒளிபரப்பாகவிருக்கிறது.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil