»   »  விஜய்- அட்லீ இணையும் படத்தின் பெயர் "மூன்று முகம்"?

விஜய்- அட்லீ இணையும் படத்தின் பெயர் "மூன்று முகம்"?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அட்லீயின் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் புதிய படத்திற்கு மூன்று முகம் எனப் பெயர் சூட்டத் திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

புலி படத்தைத் தொடர்ந்து அட்லீயின் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் புதிய படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் தொடங்கி வேகமாக நடைபெற்று வருகிறது.

விஜய்க்கு ஜோடியாக சமந்தா மற்றும் எமி ஜாக்சன் இருவரும் நடித்து வருகின்றனர், படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கிறார்.

இந்நிலையில் ரஜினியின் பிளாக் பஸ்டர் படங்களில் ஒன்றான மூன்றுமுகம் தலைப்பை இந்தப் படத்திற்கு சூட்டவிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

விஜய் - அட்லீ

விஜய் - அட்லீ

புலி படத்தைத் தொடர்ந்து விஜய் நடித்து வரும் படத்தை ராஜா ராணி படத்தை இயக்கிய அடலீ இயக்கி வருகிறார். படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா மற்றும் எமி ஜாக்சன் இருவரும் நடித்து வருகின்றனர்.

நட்சத்திரப் பட்டாளம்

நட்சத்திரப் பட்டாளம்

இந்தப் படத்தில் விஜயுடன் இணைந்து பிரபு, ராதிகா சரத்குமார், மகேந்திரன், காளி வெங்கட் ஆகியோர் நடித்து வருகின்றனர். மேலும் ஒரு சிறப்புத் தோற்றத்தில் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் நடிகை சுனைனா ஆகியோரும் தோன்றவுள்ளனர்.

விஜய் 59

விஜய் 59

போக்கிரி மற்றும் ஜில்லா படங்களைத் தொடர்ந்து இந்தப் படத்திலும் விஜய் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இந்தப் படத்தில் கத்தியைத் தொடர்ந்து 2 வது முறையாக மீண்டும் விஜயுடன் ஜோடி சேர்கிறார் சமந்தா. படத்தின் படப்பிடிப்பு ஏறக்குறைய 50% முடிந்து விட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

மூன்றுமுகம்

மூன்றுமுகம்

தற்போது பச்சையப்பன் கல்லூரியில் தீவிரமாக சில காட்சிகளை படம்பிடித்து வருகிறார் இயக்குநர் அட்லீ, இந்நிலையில் படத்தின் தலைப்பை மூன்றுமுகம் என வைத்திருப்பதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அறிவிக்காத பின்னணி

அறிவிக்காத பின்னணி

தலைப்பை இறுதி செய்து விட்டாலும் முந்தைய படங்களின் தலைப்புகளில் ஏற்பட்ட கசப்பால் தலைப்பை இப்போது வெளியே சொல்லவேண்டாம் என்று விஜய் கேட்டுக் கொண்டிருக்கிறார். விஜயின் இந்த முடிவால் தான் படக்குழுவினர் தலைப்பை முறையாக அறிவிக்கவில்லை என்கிறார்கள்.

பொங்கல் விருந்தாக

பொங்கல் விருந்தாக

கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இந்தப் படம் பொங்கல் விருந்தாக திரைக்கு வரவிருப்பது குறிப்பிடத்தக்கது.

பழைய தலைப்புகளில் புதிய படங்கள் வரும் காலமிது....

English summary
The latest reports suggest that the 59th film of "Puli" star Vijay is yet to be titled. It was widely speculated that the film has been named as "Moondru Mugam".

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil