»   »  ஹீரோவுக்கு முன் ஆடையில்லாமல் நிற்கும் என் ஐடியா ஒர்க்அவுட்டாகிடுச்சு: இலியானா

ஹீரோவுக்கு முன் ஆடையில்லாமல் நிற்கும் என் ஐடியா ஒர்க்அவுட்டாகிடுச்சு: இலியானா

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: அந்த காட்சியில் நான் அப்படி நடிப்பேன் என்று நினைக்கவில்லை. ஆனால் அந்த ஐடியா என்னுடையது என்கிறார் இலியானா.

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையாக இருந்த இலியானா மும்பையில் செட்டிலாகி பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். அவர் தற்போது அஜய் தேவ்கனுடன் சேர்ந்து பாத்ஷாஹோ படத்தில் நடித்துள்ளார்.

அதில் ஒரு காட்சியில் அவர் ஆடையின்றி நிற்கிறார். அது குறித்து இலியானா கூறியதாவது,

அஜய் தேவ்கன்

அஜய் தேவ்கன்

அஜய் தேவ்கன் பெரிய நடிகர் என்றாலும் அவருக்கு ஈகோ இல்லை. எங்களுக்கு இடையே பரஸ்பர நம்பிக்கையும், மரியாதையும் உள்ளது. அதனால் அவருடன் நடிப்பதில் சவுகரியமாக உள்ளது.

காட்சி

காட்சி

மிகவும் நெருக்கமான காட்சிகளில் நான் இதுவரை நடித்தது இல்லை. அதே சமயம் முத்தக் காட்சிகளில் நடிக்க மாட்டேன், சில ஆடைகளை அணிய மாட்டேன் என்று நான் கூறியது இல்லை.

ஜாக்கெட்

ஜாக்கெட்

கதை மற்றும் கதாபாத்திரத்திற்க்கு எது தேவையோ அதை செய்கிறேன். பாத்ஷாஹோ படத்தில் ஜாக்கெட்டை கழற்றிவிட்டு நிற்கும் ஐடியா என்னுடையது. நான் இப்படி செய்வேன் என்று நான் நினைக்கவே இல்லை.

நம்பிக்கை

நம்பிக்கை

ஒரு காதலன் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை காட்டவே ஆடையை அவிழ்த்துவிட்டு நின்றேன். அந்த காட்சியை படமாக்கியதும் ஒருவர் ஆடையை எடுத்து வரும் வரை அஜய் எனக்கு பாதுகாப்பாக நின்றார்.

திட்டம்

திட்டம்

ஆடையின்றி நிற்கும் காட்சியை திட்டமிடவில்லை. கடைசி நிமிடத்தில் எனக்கு தோன்றியது. அதை நான் இயக்குனரிடம் கூற அவரும் சம்மதித்தார். காட்சி நன்றாக வந்துள்ளது என்கிறார் இலியானா.

English summary
Actress Ileana said that dropping her jacket in front of Ajay Devgan in her upcoming movie Baadshaho is her idea.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X