»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

இசைஞானி இளையராஜாவின் ரசிகர்களின் கூட்டம் சென்னையில் நடைபெறவுள்ளது. சிம்பொனியில் திருவாசகம் இசைக்களஞ்சியம் உருவாக்க காரணமாக இருந்த தமிழ் மையம் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.

மார்ச் 20ம் தேதி சென்னை நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரி வளாகத்தில் மாலை 4 மணிக்கு இக்கூட்டம் நடைபெறுகிறது.நல்லிசைக்கான நண்பர்கள் என்ற பெயரில் இக் கூட்டம் நடைபெறுகிறது.

கூட்டம் குறித்து பாதியார் ஜெகத் கஸ்பார் விடுத்துள்ள அறிக்கை:

நம் இசை நம் மண்ணில் சிறக்க, இசைஞானியின் ரசிகர்களே ஒன்றிணைவோம்.

உயர்ந்த பல இசைக் கலைஞர்கள் நம் மண்ணில் தோன்றியிருக்கிறார்கள். ஒவ்வொருவரும் தனித்துவம் மிக்கவர்கள். இளையதலைமுறை இசையமைப்பாளர்களும் அவ்வப்போது சிறந்த பாடல்களைத் தந்து வருகிறார்கள்.

ஆயினும், ஒரு தலைமுறையின் சகல உணர்வுகளோடும், தனது இசையை ஊடுறுவ விட்டுப் பதிவு செய்தவர் நமது இசைஞானிஇளையராஜா. இசையை இதயத்தின் மொழியாகவும், ஆன்மாவின் கவிதையாகவும் ஆக்கித் தந்தவர்.

அர்த்தமற்ற பாடல் வரிகளுக்குக் கூட இசையமுதம் ஊட்டி ஆலமரமாய் உயர்த்தி, திரைக் காட்சிகளின் சிறுமைகளையெல்லாம்உன்னத இசையால் திரையிட்டு கண்ணியம் காத்த இந்த ஒலியின் ஓவியன் ஒரு வரலாற்ற நிகழ்வு; இறைவன் நமக்களித்த இசைப்பேரருள்.

காதலைப் பாலியல் வெறியாகவோ, மகிழ்ச்சியை வெறியாட்டமாகவோ, துயரத்தை துவண்டு விழச் செய்யும் விரக்தியாகவோமாற்றி இசையை ஒரு போதும் கொச்சைப்படுத்தாத இந்த இசைஞானி மற்றெப்போதையும் விட இப்போது நமக்குத்தேவைப்படுகிறார்.

வக்கிரங்களே வழக்காகவும், சீர்குலைவே புரட்சியாகவும், இரைச்சலே நாதமாகவும் மாறி விட்டிருக்கிற இக்காலத்தில் மீண்டும்ஒரு மெளன வசந்தம், மென்மையான தென்றலும் இங்கு தேவைப்படுகிறது.

திமிறும் உணர்ச்சிகளை ஆற்றுப்படுத்தி, ஆளுமையை நெறி செய்து, ஆத்மாவை வருடும் இசையாக அது வர வேண்டும்.அவ்வாறே தென்றலாய், தேனமுதாய் வருகிறது இசைஞானி இளையராஜாவின் திருவாசகம்.

250க்கும் மேலான கலைஞர்களின் பங்கேற்பில் உருவான இசைஞானி அவர்களின் இந்த திருவாசகம், ஓர் வரலாற்று வாயில்திறப்பு.

இந்த வாய்ப்பினை இசை மறுமலர்ச்சிக்கான வழித்தடமாக மாற்றிக் காட்டுவோம் என்றொரு சங்கல்பமெடுக்க இசைஞானிஅவர்களின் ரசிகர்களையும், கடந்த முப்பது ஆண்டுகளாய், அவர் அள்ளித் தந்த இசைக்குத் தினையளவேனும், நன்றியுணர்வுகொண்டோரையும் , நல் இசை இம்மண்ணில் சிறக்க வேண்டுமென விரும்பும் நல்லவர்களையும் பணிந்து மிக்க மதிப்புடன்அழைக்கிறோம்.

இந்த பிரமாண்ட திட்டத்தை முடிக்க 25 மாதங்கள் தேவைப்பட்டது. ஆயினும், எதிர்காலத்தில் இதேபோன்ற சிறந்த திட்டங்களைமற்றவர்கள் மேற்கொள்ள முன் மாதியாக இசைஞானியின் திருவாசகம் அமையும்.

திருவாசகம் மூலம் பீத்தோவன், மொஸார்ட், சாய்க்கோவ்ஸ்கி போன்ற இசை மேதைகளின் வரிசையில் இளையராஜாவும் இடம்பெறுவார்.

நல்லிசை நண்பர்கள் என்ற பெயரில் ஒன்று கூடவிருக்கிறோம்.சிம்பொனியில் திருவாசகம் தயாக்கப்பட்ட வரலாறும் இந்தஒன்றுகூடலின்போது விவரிக்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் மற்றும் இ-மெயில் முகவரிகள்:

டாக்டர் ஜெகத் கஸ்பார்: iraja2005@!yahoo.co.in, 044- 24672217, 24995078

டாக்டர் ஜே. விஜய் வெங்கட்ராமன்: vijay@ktvr.com

டாக்டர் சங்கர் குமார் (அமெரிக்கா) ommuruga41@yahoo.com

Read more about: chennai jayalalitha nadasha

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil