twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விஜயகாந்த்துடன் சேர மாட்டேன்- கார்த்திக் இந்திய இசைத் துறையின் ராஜாவாக இளையராஜா திகழ்கிறார் என மத்திய செய்தி, ஒலிபரப்புத் துறை மற்றும் கலாச்சாரத் துறைஅமைச்சர் ஜெயபால் ரெட்டி புகழாரம் சூட்டியுள்ளார்.இசைஞானி இளையராஜாவின் திருவாசகம் இசைத் தொகுப்பு சென்னையில் நடந்த வண்ணமிகு விழாவில் வியாழக்கிழமைமாலை வெளியிடப்பட்டது.மியூசிக் அகாடமியில் நடந்த இந்த விழாவின் முக்கிய விருந்தினராக ஜெயபால் ரெட்டி கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் மதிமுகபொதுச் செயலாளர் வைகோ, காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பீட்டர் அல்போன்ஸ், நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த்,இயக்குனர் பாரதிராஜா, கர்நாடக இசை மேதை பாலமுரளி கிருஷ்ணா, பத்திக்கையாளர் என். ராம், இளையராஜாவின் இசைகுருவான தட்சிணாமூர்த்தி சுவாமிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் தொடக்கமாக இளையராஜாவும், அவரது மனைவி ஜீவா இளையராஜாவும் குத்து விளக்கேற்றினர். ராஜாவின் மகள்பவதாரிணி, தாய் மூகாம்பிகை படத்தில் வரும் இளையராஜாவின் பாடலான ஜனனி ஜனனி பாடலைப் பாட நிகழ்ச்சிதொடங்கியது.நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக 3 பேருடைய பேச்சுக்கள் அமைந்தன. ஒருவர் வைகோ, இன்னொருவர் கமல்ஹாசன்,மற்றொருவர் பாரதிராஜா. 3 பேரின் பேச்சுக்களும் அரங்கில் கூடியிருந்தவர்களின் பலத்த கரகோஷத்தை பெற்றன. சூப்பர்ஸ்டார் ரஜினியும், தான் யாருக்கும் சளைக்கவில்லை என்பது போல மிகச் சிறப்பாக பேசி கூடியிருந்தவர்களைகுஷிப்படுத்தினார்.குறிப்பாக வைகோவின் பேச்சில், அப்பழுக்கற்ற, இலக்கிய வாசனை வீசியது, அரங்கில் கூடியிருந்தவர்களை மூச்சு விடாமல்அவரது பேச்சைக் கேட்க வைத்தது. மிகப் பெரிய இலக்கிய சொற்பொழிவையே நிகழ்த்தி விட்டுத் தான் அமர்ந்தார் வைகோ.குறிப்பாக திருவாசகம் குறித்து அவர் விலாவரியாக விளக்கியபோது அத்தனை பேரும் இமை கொட்டாமல், மூச்சு விடக் கூடமறந்து அவரது பேச்சில் லயித்துப் போயினர். அதிலும், திருவாசகம் குறித்து வைகோ சொன்ன பல தகவல்கள், அதற்குஇசையமைத்த தனக்கே தெரியவில்லை என்று பின்னர் இளையராஜா கூறிய போது, வைகோ வெட்கத்தால் இருக்கையில்நெளிந்தார்.மெய்சிலிர்க்க வைத்த வைகோவின் பேச்சு:வைகோ பேசுகையில், தமிழ் இசையாய், தமிழ் பண்ணாக ஒரு மாமேதை பிறப்பார் என்று எண்ணித்தான் ராஜா பிறந்த கிராமம்தனக்கு பண்ணைப்புரம் என்று பெயர் சூட்டிக் கொண்டதோ என்னவோ? நான் சிறையில் அடைபட்டிருந்தேன். அப்போது சிறைக் கதவுகளை ஊடுறுவி ஒரு பாடல் எனது காதுகளை அடைந்து என்னைசிலிர்க்க வைத்தது. அன்னக்கிளியில் வந்த அந்தப் பாடல் யார் எழுதியது, அதற்கு இசையமைத்த இசையமைப்பாளர் யார் என்றுஅறியும் ஆவல் என்னுள் எழுந்து முட்டி மோதியது.கிராமப்புறங்களில், வயல் வெளிகளில் கேட்கும் தெம்மாங்குப் பாட்டைப் போல இருக்கிறதே, இதற்கு இசையமைத்த கைககள்யாருடையது என்று அறிய மிகுந்த ஆவலுற்றேன். அதுதான் இளையராஜாவின் இசைக்கும், எனக்கும் கிடைத்த முதல் அறிமுகம்.அன்று முதல் இன்று வரை நான் இளையராஜாவின் தீவிர ரசிகன். நான் கார்களில் பயணிக்கும்போதும், தனிமையில்இருக்கும்போதும் கேட்கும் பாடல்களில், எண்ணற்றவை எங்கள் தெற்குச் சீமையின் இளையராஜா கொடுத்த அற்புதமானபாடல்கள் தான்.இளையராஜா யாருக்கும் தலை வணங்க மாட்டார். அவரது இசையும் அப்படித்தான். ஒருவரைப் புகழ்ந்தால் அவர்கள் மயங்கிவிடுவார்கள். ஆனால் இளையராஜாவிடம் அது நடக்காது. புகழுக்கு மயங்காதவர் அவர். புகழ் வந்து சேர்ந்தாலும் அதைக்கண்டு அசராதவர் அவர்.திருவாசகத்தில் பத்து பத்தாக 19 பத்துப் பாடல்கள் உள்ளன. அதில் 3 பத்துக்களை மட்டும் ராஜா எடுத்துக் கொண்டுள்ளார்.திருவாசகத்தின் முதல் வரியே நமச்சிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க. ஆனால் ராஜா அதிலிருந்து ஆரம்பிக்கவில்லை.அதுதான் ராஜா, அதுதான் தமிழன். யாத்திரைப் பத்திலிருந்து அவர் ஆரம்பிக்கிறார். பிடித்த பத்தில் முடிக்கிறார். இளையராஜாவின் இசை ஒலி இந்த உலகம் இருக்கும் வரை கேட்டுக் கொண்டே இருக்கும். அவரது திருவாசகம் காலத்தால்அழியாதது, அழிக்க முடியாதது.சில ஆண்டுகளுக்கு முன்பு சிம்பொனி அமைத்து விட்டுத் திரும்பினார் இளையராஜா. உலகமே அறிந்த அந்த உன்னதக்கலைஞனை நமது நாடாளுமன்றம் மூலம் நாடும் அறியட்டும் என்பதற்காக நாடாளுமன்றத்தில் 3 மணி நேரம் ராஜாவைப்பற்றிப் பேசினேன். ஒரு கொரியாக்காரனால் முடியாததை, ஒரு ஜப்பானியனால் முடியாததை, ஒரு சீனாக்காரனால் முடியாததை ஒரு இந்தியன், ஒருதமிழன் நிகழ்த்தியுள்ளான் என்று நான் நாடாளுமன்றத்தில் பேசியபோது, ராஜாவுக்கு பாராட்டுக்களை கைத்தட்டல்களாககுவித்தது நமது நாடாளுமன்றம்.எல்லோரும் இந்த திருவாசகத்தை காசு கொடுத்து வாங்கிக் கேளுங்கள், முறையாக காசு கொடுத்து வாங்கிக் கேளுங்கள்.உன்னதமான இந்த இசையுடன் இளையராஜா நிற்கக் கூடாது என்று பேசினார் வைகோ. சுமார் 1 மணி நேரம் வைகோ பேசினார்.அந்த ஒரு மணி நேரம் வைகோவின் பேச்சில் தெறித்த இலக்கிய சிலாகிப்புகள், விவரிப்புகள் அரங்கத்தில் கூடியிருந்தோரைகுறிப்பாக இளையராஜா மற்றும் ரஜினிகாந்த் ஆகியோரை பிரமிப்பின் உச்சத்திற்கே கொண்டு சென்று விட்டதை அவர்களது முகபாவனைகளே காட்டின.பேசி முடித்து வைகோ சிங்கமென நடந்து இருக்கையில் போய் அமர்ந்தபோது கைத்தட்டல் நிற்க சில நிமிடங்கள் ஆகின.நிகழ்ச்சியில் பாரதிராஜா பேசுகையில், நாங்கள் பிறந்த கள்ளிக்காட்டு மண்ணும், அந்த மேற்குத் தொடர்ச்சி மலைகளும்,வைகையாற்று காற்றும் இன்று இளையராஜாவை ஆசீர்வதித்துக் கொண்டிருக்கின்றன.எங்களது தெற்குச் சீமை கொடுத்த சீதனம் இளையராஜா. மதுரை மண் கொடுத்த அற்புதமான வரம் இளையராஜா. அந்த மண்எத்தனையோ அற்புதமான மனிதர்களை, சிற்பிகளை தமிழகத்திற்குக் கொடுத்துள்ளது. இங்கே வந்தவுடன் கமலிடம் கேட்டேன், என்ன பாட்டு ஏதும் போடலியா என்று. அதற்கு கமல், ரொம்ப அவசியம் என்றார்.இல்லை, கமல், பாட்டு கீட்டு போட்டாதானே ஒரு இதா இருக்கும், பீல் வரும் என்றேன். அதற்கு கமல், ஆமாமா, பாட்டைப்போட்டாலும் நாம என்ன செய்யப் போறோம் என்றார்.ராஜாவின் பாட்டைக் கேட்டால் நமக்கு ஒரு உணர்வு உள்ளிருந்து கிளம்பும். அந்த பீலிங்கை சொன்னால் புரியாது, அனுபவிக்கவேண்டும். அதற்காகத் தான் கமலிடம் அப்படிக் கூறினேன்.மைக் பக்கம் வந்தாலே பயமாக இருக்கிறது. காரணம், நான் காட்டாற்று வெள்ளம் போல, எங்கேயோ ஆரம்பித்து எங்கேயோபோய்த் தொலைத்து விடுவேன். இங்கு வந்து உட்கார்ந்தவுடன், என்னடா பேச என்று இளையராஜாவைப் பார்த்துக் கேட்டேன்.நான் பேச ஆரம்பித்தால் எதையாவது பேசி விடுவேனே என்றேன். அதற்கு ராஜா, இப்போது பேசினாயே இதேபோல பேசிவிட்டு வா என்றார் ராஜா.கிழக்கே போகும் ரயில், எனது இரண்டாவது படம், வெள்ளி விழா நடந்தது. அப்போது எனது தாயார் ஒரு மூலையில் அமர்ந்துவிழாவைப் பார்த்துக் கொண்டிருந்தார். எல்லோரும் என்னைப் புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். ஆனால் எனது தாயாரோஅழுது கொண்டிருந்தார். ஓஹோ, நம்மைப் புகழ்வதைக் கேட்டு ஆனந்தக் கண்ணீர் வடிக்கிறார் போலும் என நான் எண்ணிக்கொண்டேன்.நிகழ்ச்சி முடிந்ததும் ஆமா, எதற்காக அப்படி அழுதே என்று அவரிடம் கேட்டேன். அதற்கு அவர் சொன்னார். யார் யாரோபேசினாங்கப்பா, எனக்கு ஒண்ணும் புரியலே, ஆனா பாரதிராஜா, பாரதிராஜான்னு ஒன் பெயரை சொன்னது மட்டும்கேட்டுச்சுப்பா என்று கூறினாள் அந்தத் தாய். தனது மகன் மேல் அவள் வைத்திருந்த பாசத்தால், அவனது பெயர் மட்டுமேஅவளது காதுகளுக்கு எட்டியது.இன்றும் அப்படித்தான். யார் யாரோ பேசினார்கள். ஆனால் எனது காதுகளில் எதுவுமே கேட்கவில்லை. இளையராஜா,இளையராஜா என்ற பெயர் மட்டுமே எனக்குக் கேட்டது. எனக்கு மட்டுமல்ல இங்கு கூடியிருப்பவர்கள், இந்தத் தமிழக மக்கள்,உலகத் தமிழர்கள் அத்தனை பேருக்கும் அப்படித்தான் இருந்திருக்கும். இளையராஜா, இந்த அற்புதமான நிகழ்வை கண்டு மகிழ உன் தாய் இல்லையே என்று கவலைப்படாதே, இங்கு உன்னைப்பாராட்டிய அத்தனை பேரும் உனக்கு தாய் போலத்தான், இந்தத் தமிழகமே தாயாக இருந்து உன்னை வாழ்த்திக்கொண்டிருக்கிறது.எனக்கும், ராஜாவுக்கும் இடையே 40 ஆண்டு கால நட்பு. அதை ரொம்ப ஆழமாகச் சொல்ல வேண்டுமானால், டிரவுசர் போட்டவயதில், அதிலும் அஞ்சு கிழிசல் இருக்கும், காட்டுப் பகுதியில் நானும், அவனும் காலைக் கடன் கழிக்கப் போகும்காலத்திலிருந்து இருவரும் ஒன்றாக இருந்து வருகிறோம்.அப்போது பேசிக் கொள்வோம், அவர் அந்த மறைவில் இருப்பார், நான் இந்த மறைவில் இருப்பேன். நாம எப்போடாமெட்ராஸுக்குப் போய், சாதிக்கப் போறோம் என்று என்னிடம் கேட்பார். நானும், நாம போவோம்டா, சாதிப்போம்டாஅப்படிம்பேன்.அந்த வயசிலேயே ஒரு கம்பியை எடுத்து கதவு முனையில் கட்டி அதில் மியூசிக் போடுவார் ராஜா. நானும் செஞ்சு பார்த்தேன்,ம்ஹூம், வெறும் சத்தம் தான் வந்தது. அப்புறம் ஒரு நாள் சொன்னேன், நானும் ஒன்ன மாதிரி மியூசிக் போடப் போறேன் என்று.சரின்னு, ஒரு கிதாரை எடுத்துக் கொடுத்தார். அதுல என்னென்னவோ செஞ்சு பார்த்தேன். ஒன்னும் சரிப்படலை.அதாவது எழுதி வைக்கப்பட்டிருக்கிறது. பாரதிராஜா இப்படித்தான், அவன் கதை எழுதி, படத்தை இயக்கிப் புகழ் பெறவேண்டும் என்று எழுதி வைக்கப்பட்டுள்ளது. இளையராஜா இசையில் உச்சத்தை அடைந்து, அவன் மூலம் நமது மண்ணின்வாசனையை அறிந்து கொள்ள எழுதி வைக்கப்பட்டிருக்கிறது.இளையராஜாவை எப்போது கேட்டாலும், அவ்வளவுதான் எல்லாம் முடிஞ்சாச்சு, இந்தப் பிறவி போதும் என்பார். அதெல்லாம்தப்பு. உனக்கு முடிவே கிடையாது. மீண்டும் மீண்டும் மீண்டும் நீ பிறப்பாய், இசை அமைப்பாய், உனக்கு மரணமே கிடையாது.ஆயிரமாயிரம் பிறவிகள் எடுத்து இசையால் எங்களை மகிழ்விப்பாய். அதுதான் உனக்கு எழுதி வைக்கப்பட்டுள்ள விதி என்றுபேசினார் பாரதிராஜா.கமல்ஹாசன் பேசுகையில், என்னையும், ரஜினியையும் இரட்டைக் குழல் துப்பாக்கி என பாரதிராஜா கூறினார். நாங்கள்துப்பாக்கிகள் அல்ல, மாடுகள். வண்டி ஓடிக் கொண்டிருக்கிறது. எங்கள் மீது அமர்ந்து பாலச்சந்தர், பாரதிராஜாபோன்றவர்களும் ஓட்டியுள்ளனர்.தமிழ் உலகுக்கு இளையராஜா ஆற்றியுள்ள இந்த பெரும் சேவை ரொம்பத் தாமதமானது. ஒரு 20 வருடங்களுக்கு முன்பாக, 25கூட இருக்கலாம், 30 ஆக கூட இருக்கலாம், முன்பே செய்திருக்க அவரால் முடியும். சரி, இப்போதாவது வந்ததே என்றுசந்தோஷப்படுவோம்.இறை மறுப்பு கொள்கை உடையவர்களும் கூட மறுக்க முடியாத அருமையான இசைத் தொகுப்பு இது. இந்த சிடியில் வரும் குரல்எனது குரல் போலவே இருக்கிறது. நான் இசைத்தது போலவே ஒரு எண்ணம் வருகிறது. எனக்கு மட்டுமல்ல, உங்களுக்கும்,உலகில் உள்ள தமிழர்களுக்கும் வரும்.இந்த இசையை அனைவரும் கேட்டுப் பார்க்க வேண்டும், அனுபவித்து உணர வேண்டும் என்றார் கமல்.ரஜினி பேசுகையில், சில நாட்களுக்கு முன்பு அமெக்காவிலிருந்து ஒருவர் போன் செய்தார். தனது மகனை சிகிச்சைக்காகசென்னைக்கு அழைத்து வரவுள்ளதாக தெரிவித்தார். சென்னைக்குச் செல்வதாக இருந்தால் ரஜினியிடம் கூட்டிப் போகவேண்டும் என தனது மகன் நிபந்தனை விதிப்பதாகவும் அவர் கூறினார்.அதனால் நான் ஊரில் இருக்கிறேனா என்பதை அறிந்து கொள்ள அவர் போன் செய்துள்ளார். சரி, கூட்டி வாருங்கள் என்றேன்.அவர்களும் வந்தார்கள். எனது வீட்டிற்குள் வந்து அமர்ந்ததும், அந்த சிறுவன் என்னிடம் கேட்டான், ரஜினி எங்கே? என்று.எனக்கு ஒன்னும் புரியவில்லை. நான் தான் ரஜினி என்றேன். அதற்கு அவன் நோ, நோ, நீங்கள் ரஜினியின் தந்தை. நான்ரஜினியைத் தான் பார்க்க வேண்டும் என்றான்.எனக்கு பேஜாராகப் போய் விட்டது. இல்லைப்பா, நான் தான் நிஜமாவே ரஜினி என்றேன். அவனுக்கு கோபம் வந்து விட்டது.ரஜினியைத் தான் நான் பார்க்க வந்தேன். உங்களை அல்ல என்று வேகமாக கூறினான். என்னடா வம்பாப் போச்சு என்று உள்ளேசென்று தலைக்கு டை அடித்து, தாடியை ஷேவிங் செய்து விட்டு புது கெட்டப்புடன் அவன் முன் வந்து நின்றேன். அப்போது தான்அவன் என்னை ரஜினி என்று நம்பினான்.அந்தப் பையனோட பாட்டி என்னிடம் கேட்டார்கள். ஏம்ப்பா கோடி கோடியா சம்பாதிக்கிறே, ஒரு பிளேடு வாங்க முடியாதாஉன்னால். இப்படி தாடியோட இருக்கியே என்று. சரி, சம்பாதிக்கிற பணத்தை எல்லாம் பொண்டாட்டி கிட்ட கரெக்டாகொடுக்கிறியா என்று தொடர்ந்தார். நான் உடனே, பணத்தை பொண்டாட்டி கிட்ட கொடுத்தாலும் ஒன்னுதான், திருப்பதி உண்டியல்ல போட்டாலும் ஒன்னுதான்னுசொன்னேன். ஓஹோ, அதான் நிம்மதியில்லாம எங்கெங்கோ அலையற (இமயமலைக்கு) போல என்று கூறினார். அவர்களதுபேச்சு வெகு எதார்த்தமாக இருந்தது.இதை எதற்காக கூறுகிறேன் என்றால் மனிதனுக்கு ரொம்ப முக்கியமான தேவை அமைதி தான். அந்த அமைதி அவனைத் தேடிவராது, நாம் தான் தேடிப் போக வேண்டும். அமைதி கிடைப்பது ரொம்ப கஷ்டமான காரியம்.எனக்கு திருவண்ணாமலையை அடையாளம் காட்டியது ராஜா தான். அந்த வகையில் அவர் எனக்கு குரு போன்றவர். ஒருவர்நாதத்தை நேசிக்க வேண்டும் என்றால் அவனது (கடவுள்) கடாட்சம் இருக்க வேண்டும். அவன் கொடுத்த பிச்சை தான் இந்தஞானம். அது ராஜாவுக்கு நிறையவே இருக்கிறது.சந்திரமுகி வெற்றி பெற்று இன்னும் ஓடிக் கொண்டிருக்கிறது. 4 வாரங்கள் சந்தோஷமாக இருந்தது. இப்போது போய் விட்டது.சந்தோஷம் என்பது கொஞ்ச நாளைக்குத் தான். கஷ்டமும் கொஞ்ச நாளைக்குத்தான். பின்னர் அதுவும் போய் விடும். பணம், புகழ் இப்படி எல்லாமே வரும், போகும். ஆனால் அமைதி கிடைப்பது ரொம்பக் கஷ்டம். அது கிடைத்து விட்டால்அதைத் தக்க வைப்பது அதை விடக் கஷ்டம். அப்படிப்பட்ட அமைதியைத் தேடித்தான் இளையராஜா இப்போது போய்க்கொண்டிருக்கிறார் என்றார் ரஜினிகாந்த்.அமைச்சர் ஜெயபால் ரெட்டி பேசுகையில், இந்திய இசையின் ராஜாவாக இளையராஜா திகழ்கிறார். அவரது திருவாசகம் இசைத்தொகுப்பு இதுவரை இந்தியாவில் யாரும் செய்யாதது. இந்த முயற்சி மிகவும் அற்புதமாக அமைந்துள்ளது. இதற்கு கிராமி விருதுகிடைக்க வேண்டும். ஆஸ்கர் விருது பெற்ற ஹாலிவுட் இசையமைப்பாளர் ஸ்வார்ட்ஸே இளையராஜாவைப் புகழ்ந்துள்ளார்.இது இந்திய இசைக்குக் கிடைத்த பெருமையாகும்.இந்த இசைத் தொகுப்பில், இந்திய இசையும், மேற்கத்திய இசையும் ஒன்று கலந்து பிரமிப்பூட்டுகிறது. கலாச்சார எல்லையைகடந்து சாதனை படைத்துள்ளார் இளையராஜா என்று புகழாரம் சூட்டினார் ரெட்டி.இறுதியாக இளையராஜா பேசுகையில், கமல் இறை நம்பிக்கை இல்லாதவர். அவரையே இந்த இசை கவர்ந்துள்ளது என்றால்அது இறைவனின் விருப்பம் என்று தான் சொல்வேன். பாரதிராஜா சொன்னார், 3000 பிறவிகள் உனக்கு உண்டு என்று.அதெல்லாம் முடியாது. நீ வேண்டுமானால் பிறந்து விட்டுப் போ, பிரம்மாவாக அவதாரம் எடு. பலருக்கு அவதாரம் கொடு.கடவுளின் அருளால் தான் இந்த முயற்சி பலன் பெற்றது. கடவுள் அருள் தொடர்ந்தால் இன்னும் பல முயற்சிகளுக்கு உருகிடைக்கும் என்றார் ராஜா.திருவாசகம் இசைத் தொகுப்பின் முதல் பிரதியை ஜெயபால் ரெட்டி வெளியிட அதை பாலமுரளி கிருஷ்ணா பெற்றுக் கொண்டார்.அதேபோல மேக்கிங் ஆப் திருவாசகம் தொகுப்பை தட்சிணாமூர்த்தி சுவாமிகள் வெளியிட கமல்ஹாசன் பெற்றுக் கொண்டார்.இளையராஜாவின் திருவாசகம் வெளியீட்டைக் காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அலைகடலென திரண்டு வந்ததால், மியூசிக்அகாடமிக்கு உள்ளேயும், வெளியேயும் கூட்டம் நிரம்பி வழிந்தது. அரங்கம் அமைந்துள்ள டி.டி.கே. சாலையில் போக்குவரத்துஸ்தம்பித்தது.மாலை 6 மணிக்குத் தொடங்கிய விழா இரவு 11 மணி வரை நீடித்தும் கூட்டம் கலையாமல் அப்படியே இருந்ததுகுறிப்பிடத்தக்கது. விழா அழைப்பிதழில் பெயர் இடம் பெறாமல் இருந்தும் கூட ராஜாவின் நிகழ்ச்சி என்பதால் தானாக வந்துகலந்து கொண்டார் ரஜினிகாந்த். விழா முடியும் வரை அமர்ந்திருந்து ராஜாவைக் கெளரவித்தார்.நிகழ்ச்சியை, திருவாசகத்தை உருவாக்க பிளாட்பார்ம் ஆக திகழ்ந்த தமிழ் மையம் அமைப்பின் நிறுவனர் பாதிரியார் ஜெகத்கஸ்பார் தொகுத்து வழங்கினார்.

    By Staff
    |

    இந்திய இசைத் துறையின் ராஜாவாக இளையராஜா திகழ்கிறார் என மத்திய செய்தி, ஒலிபரப்புத் துறை மற்றும் கலாச்சாரத் துறைஅமைச்சர் ஜெயபால் ரெட்டி புகழாரம் சூட்டியுள்ளார்.

    இசைஞானி இளையராஜாவின் திருவாசகம் இசைத் தொகுப்பு சென்னையில் நடந்த வண்ணமிகு விழாவில் வியாழக்கிழமைமாலை வெளியிடப்பட்டது.

    மியூசிக் அகாடமியில் நடந்த இந்த விழாவின் முக்கிய விருந்தினராக ஜெயபால் ரெட்டி கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் மதிமுகபொதுச் செயலாளர் வைகோ, காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பீட்டர் அல்போன்ஸ், நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த்,இயக்குனர் பாரதிராஜா, கர்நாடக இசை மேதை பாலமுரளி கிருஷ்ணா, பத்திக்கையாளர் என். ராம், இளையராஜாவின் இசைகுருவான தட்சிணாமூர்த்தி சுவாமிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியின் தொடக்கமாக இளையராஜாவும், அவரது மனைவி ஜீவா இளையராஜாவும் குத்து விளக்கேற்றினர். ராஜாவின் மகள்பவதாரிணி, தாய் மூகாம்பிகை படத்தில் வரும் இளையராஜாவின் பாடலான ஜனனி ஜனனி பாடலைப் பாட நிகழ்ச்சிதொடங்கியது.

    நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக 3 பேருடைய பேச்சுக்கள் அமைந்தன. ஒருவர் வைகோ, இன்னொருவர் கமல்ஹாசன்,மற்றொருவர் பாரதிராஜா. 3 பேரின் பேச்சுக்களும் அரங்கில் கூடியிருந்தவர்களின் பலத்த கரகோஷத்தை பெற்றன. சூப்பர்ஸ்டார் ரஜினியும், தான் யாருக்கும் சளைக்கவில்லை என்பது போல மிகச் சிறப்பாக பேசி கூடியிருந்தவர்களைகுஷிப்படுத்தினார்.

    குறிப்பாக வைகோவின் பேச்சில், அப்பழுக்கற்ற, இலக்கிய வாசனை வீசியது, அரங்கில் கூடியிருந்தவர்களை மூச்சு விடாமல்அவரது பேச்சைக் கேட்க வைத்தது. மிகப் பெரிய இலக்கிய சொற்பொழிவையே நிகழ்த்தி விட்டுத் தான் அமர்ந்தார் வைகோ.

    குறிப்பாக திருவாசகம் குறித்து அவர் விலாவரியாக விளக்கியபோது அத்தனை பேரும் இமை கொட்டாமல், மூச்சு விடக் கூடமறந்து அவரது பேச்சில் லயித்துப் போயினர். அதிலும், திருவாசகம் குறித்து வைகோ சொன்ன பல தகவல்கள், அதற்குஇசையமைத்த தனக்கே தெரியவில்லை என்று பின்னர் இளையராஜா கூறிய போது, வைகோ வெட்கத்தால் இருக்கையில்நெளிந்தார்.

    மெய்சிலிர்க்க வைத்த வைகோவின் பேச்சு:

    வைகோ பேசுகையில், தமிழ் இசையாய், தமிழ் பண்ணாக ஒரு மாமேதை பிறப்பார் என்று எண்ணித்தான் ராஜா பிறந்த கிராமம்தனக்கு பண்ணைப்புரம் என்று பெயர் சூட்டிக் கொண்டதோ என்னவோ?

    நான் சிறையில் அடைபட்டிருந்தேன். அப்போது சிறைக் கதவுகளை ஊடுறுவி ஒரு பாடல் எனது காதுகளை அடைந்து என்னைசிலிர்க்க வைத்தது. அன்னக்கிளியில் வந்த அந்தப் பாடல் யார் எழுதியது, அதற்கு இசையமைத்த இசையமைப்பாளர் யார் என்றுஅறியும் ஆவல் என்னுள் எழுந்து முட்டி மோதியது.

    கிராமப்புறங்களில், வயல் வெளிகளில் கேட்கும் தெம்மாங்குப் பாட்டைப் போல இருக்கிறதே, இதற்கு இசையமைத்த கைககள்யாருடையது என்று அறிய மிகுந்த ஆவலுற்றேன். அதுதான் இளையராஜாவின் இசைக்கும், எனக்கும் கிடைத்த முதல் அறிமுகம்.

    அன்று முதல் இன்று வரை நான் இளையராஜாவின் தீவிர ரசிகன். நான் கார்களில் பயணிக்கும்போதும், தனிமையில்இருக்கும்போதும் கேட்கும் பாடல்களில், எண்ணற்றவை எங்கள் தெற்குச் சீமையின் இளையராஜா கொடுத்த அற்புதமானபாடல்கள் தான்.

    இளையராஜா யாருக்கும் தலை வணங்க மாட்டார். அவரது இசையும் அப்படித்தான். ஒருவரைப் புகழ்ந்தால் அவர்கள் மயங்கிவிடுவார்கள். ஆனால் இளையராஜாவிடம் அது நடக்காது. புகழுக்கு மயங்காதவர் அவர். புகழ் வந்து சேர்ந்தாலும் அதைக்கண்டு அசராதவர் அவர்.

    திருவாசகத்தில் பத்து பத்தாக 19 பத்துப் பாடல்கள் உள்ளன. அதில் 3 பத்துக்களை மட்டும் ராஜா எடுத்துக் கொண்டுள்ளார்.திருவாசகத்தின் முதல் வரியே நமச்சிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க. ஆனால் ராஜா அதிலிருந்து ஆரம்பிக்கவில்லை.அதுதான் ராஜா, அதுதான் தமிழன். யாத்திரைப் பத்திலிருந்து அவர் ஆரம்பிக்கிறார். பிடித்த பத்தில் முடிக்கிறார்.

    இளையராஜாவின் இசை ஒலி இந்த உலகம் இருக்கும் வரை கேட்டுக் கொண்டே இருக்கும். அவரது திருவாசகம் காலத்தால்அழியாதது, அழிக்க முடியாதது.

    சில ஆண்டுகளுக்கு முன்பு சிம்பொனி அமைத்து விட்டுத் திரும்பினார் இளையராஜா. உலகமே அறிந்த அந்த உன்னதக்கலைஞனை நமது நாடாளுமன்றம் மூலம் நாடும் அறியட்டும் என்பதற்காக நாடாளுமன்றத்தில் 3 மணி நேரம் ராஜாவைப்பற்றிப் பேசினேன்.

    ஒரு கொரியாக்காரனால் முடியாததை, ஒரு ஜப்பானியனால் முடியாததை, ஒரு சீனாக்காரனால் முடியாததை ஒரு இந்தியன், ஒருதமிழன் நிகழ்த்தியுள்ளான் என்று நான் நாடாளுமன்றத்தில் பேசியபோது, ராஜாவுக்கு பாராட்டுக்களை கைத்தட்டல்களாககுவித்தது நமது நாடாளுமன்றம்.

    எல்லோரும் இந்த திருவாசகத்தை காசு கொடுத்து வாங்கிக் கேளுங்கள், முறையாக காசு கொடுத்து வாங்கிக் கேளுங்கள்.உன்னதமான இந்த இசையுடன் இளையராஜா நிற்கக் கூடாது என்று பேசினார் வைகோ. சுமார் 1 மணி நேரம் வைகோ பேசினார்.அந்த ஒரு மணி நேரம் வைகோவின் பேச்சில் தெறித்த இலக்கிய சிலாகிப்புகள், விவரிப்புகள் அரங்கத்தில் கூடியிருந்தோரைகுறிப்பாக இளையராஜா மற்றும் ரஜினிகாந்த் ஆகியோரை பிரமிப்பின் உச்சத்திற்கே கொண்டு சென்று விட்டதை அவர்களது முகபாவனைகளே காட்டின.

    பேசி முடித்து வைகோ சிங்கமென நடந்து இருக்கையில் போய் அமர்ந்தபோது கைத்தட்டல் நிற்க சில நிமிடங்கள் ஆகின.

    நிகழ்ச்சியில் பாரதிராஜா பேசுகையில், நாங்கள் பிறந்த கள்ளிக்காட்டு மண்ணும், அந்த மேற்குத் தொடர்ச்சி மலைகளும்,வைகையாற்று காற்றும் இன்று இளையராஜாவை ஆசீர்வதித்துக் கொண்டிருக்கின்றன.

    எங்களது தெற்குச் சீமை கொடுத்த சீதனம் இளையராஜா. மதுரை மண் கொடுத்த அற்புதமான வரம் இளையராஜா. அந்த மண்எத்தனையோ அற்புதமான மனிதர்களை, சிற்பிகளை தமிழகத்திற்குக் கொடுத்துள்ளது.

    இங்கே வந்தவுடன் கமலிடம் கேட்டேன், என்ன பாட்டு ஏதும் போடலியா என்று. அதற்கு கமல், ரொம்ப அவசியம் என்றார்.இல்லை, கமல், பாட்டு கீட்டு போட்டாதானே ஒரு இதா இருக்கும், பீல் வரும் என்றேன். அதற்கு கமல், ஆமாமா, பாட்டைப்போட்டாலும் நாம என்ன செய்யப் போறோம் என்றார்.

    ராஜாவின் பாட்டைக் கேட்டால் நமக்கு ஒரு உணர்வு உள்ளிருந்து கிளம்பும். அந்த பீலிங்கை சொன்னால் புரியாது, அனுபவிக்கவேண்டும். அதற்காகத் தான் கமலிடம் அப்படிக் கூறினேன்.

    மைக் பக்கம் வந்தாலே பயமாக இருக்கிறது. காரணம், நான் காட்டாற்று வெள்ளம் போல, எங்கேயோ ஆரம்பித்து எங்கேயோபோய்த் தொலைத்து விடுவேன். இங்கு வந்து உட்கார்ந்தவுடன், என்னடா பேச என்று இளையராஜாவைப் பார்த்துக் கேட்டேன்.நான் பேச ஆரம்பித்தால் எதையாவது பேசி விடுவேனே என்றேன். அதற்கு ராஜா, இப்போது பேசினாயே இதேபோல பேசிவிட்டு வா என்றார் ராஜா.

    கிழக்கே போகும் ரயில், எனது இரண்டாவது படம், வெள்ளி விழா நடந்தது. அப்போது எனது தாயார் ஒரு மூலையில் அமர்ந்துவிழாவைப் பார்த்துக் கொண்டிருந்தார். எல்லோரும் என்னைப் புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். ஆனால் எனது தாயாரோஅழுது கொண்டிருந்தார். ஓஹோ, நம்மைப் புகழ்வதைக் கேட்டு ஆனந்தக் கண்ணீர் வடிக்கிறார் போலும் என நான் எண்ணிக்கொண்டேன்.

    நிகழ்ச்சி முடிந்ததும் ஆமா, எதற்காக அப்படி அழுதே என்று அவரிடம் கேட்டேன். அதற்கு அவர் சொன்னார். யார் யாரோபேசினாங்கப்பா, எனக்கு ஒண்ணும் புரியலே, ஆனா பாரதிராஜா, பாரதிராஜான்னு ஒன் பெயரை சொன்னது மட்டும்கேட்டுச்சுப்பா என்று கூறினாள் அந்தத் தாய். தனது மகன் மேல் அவள் வைத்திருந்த பாசத்தால், அவனது பெயர் மட்டுமேஅவளது காதுகளுக்கு எட்டியது.

    இன்றும் அப்படித்தான். யார் யாரோ பேசினார்கள். ஆனால் எனது காதுகளில் எதுவுமே கேட்கவில்லை. இளையராஜா,இளையராஜா என்ற பெயர் மட்டுமே எனக்குக் கேட்டது. எனக்கு மட்டுமல்ல இங்கு கூடியிருப்பவர்கள், இந்தத் தமிழக மக்கள்,உலகத் தமிழர்கள் அத்தனை பேருக்கும் அப்படித்தான் இருந்திருக்கும்.

    இளையராஜா, இந்த அற்புதமான நிகழ்வை கண்டு மகிழ உன் தாய் இல்லையே என்று கவலைப்படாதே, இங்கு உன்னைப்பாராட்டிய அத்தனை பேரும் உனக்கு தாய் போலத்தான், இந்தத் தமிழகமே தாயாக இருந்து உன்னை வாழ்த்திக்கொண்டிருக்கிறது.

    எனக்கும், ராஜாவுக்கும் இடையே 40 ஆண்டு கால நட்பு. அதை ரொம்ப ஆழமாகச் சொல்ல வேண்டுமானால், டிரவுசர் போட்டவயதில், அதிலும் அஞ்சு கிழிசல் இருக்கும், காட்டுப் பகுதியில் நானும், அவனும் காலைக் கடன் கழிக்கப் போகும்காலத்திலிருந்து இருவரும் ஒன்றாக இருந்து வருகிறோம்.

    அப்போது பேசிக் கொள்வோம், அவர் அந்த மறைவில் இருப்பார், நான் இந்த மறைவில் இருப்பேன். நாம எப்போடாமெட்ராஸுக்குப் போய், சாதிக்கப் போறோம் என்று என்னிடம் கேட்பார். நானும், நாம போவோம்டா, சாதிப்போம்டாஅப்படிம்பேன்.

    அந்த வயசிலேயே ஒரு கம்பியை எடுத்து கதவு முனையில் கட்டி அதில் மியூசிக் போடுவார் ராஜா. நானும் செஞ்சு பார்த்தேன்,ம்ஹூம், வெறும் சத்தம் தான் வந்தது. அப்புறம் ஒரு நாள் சொன்னேன், நானும் ஒன்ன மாதிரி மியூசிக் போடப் போறேன் என்று.சரின்னு, ஒரு கிதாரை எடுத்துக் கொடுத்தார். அதுல என்னென்னவோ செஞ்சு பார்த்தேன். ஒன்னும் சரிப்படலை.

    அதாவது எழுதி வைக்கப்பட்டிருக்கிறது. பாரதிராஜா இப்படித்தான், அவன் கதை எழுதி, படத்தை இயக்கிப் புகழ் பெறவேண்டும் என்று எழுதி வைக்கப்பட்டுள்ளது. இளையராஜா இசையில் உச்சத்தை அடைந்து, அவன் மூலம் நமது மண்ணின்வாசனையை அறிந்து கொள்ள எழுதி வைக்கப்பட்டிருக்கிறது.

    இளையராஜாவை எப்போது கேட்டாலும், அவ்வளவுதான் எல்லாம் முடிஞ்சாச்சு, இந்தப் பிறவி போதும் என்பார். அதெல்லாம்தப்பு. உனக்கு முடிவே கிடையாது. மீண்டும் மீண்டும் மீண்டும் நீ பிறப்பாய், இசை அமைப்பாய், உனக்கு மரணமே கிடையாது.ஆயிரமாயிரம் பிறவிகள் எடுத்து இசையால் எங்களை மகிழ்விப்பாய். அதுதான் உனக்கு எழுதி வைக்கப்பட்டுள்ள விதி என்றுபேசினார் பாரதிராஜா.

    கமல்ஹாசன் பேசுகையில், என்னையும், ரஜினியையும் இரட்டைக் குழல் துப்பாக்கி என பாரதிராஜா கூறினார். நாங்கள்துப்பாக்கிகள் அல்ல, மாடுகள். வண்டி ஓடிக் கொண்டிருக்கிறது. எங்கள் மீது அமர்ந்து பாலச்சந்தர், பாரதிராஜாபோன்றவர்களும் ஓட்டியுள்ளனர்.

    தமிழ் உலகுக்கு இளையராஜா ஆற்றியுள்ள இந்த பெரும் சேவை ரொம்பத் தாமதமானது. ஒரு 20 வருடங்களுக்கு முன்பாக, 25கூட இருக்கலாம், 30 ஆக கூட இருக்கலாம், முன்பே செய்திருக்க அவரால் முடியும். சரி, இப்போதாவது வந்ததே என்றுசந்தோஷப்படுவோம்.

    இறை மறுப்பு கொள்கை உடையவர்களும் கூட மறுக்க முடியாத அருமையான இசைத் தொகுப்பு இது. இந்த சிடியில் வரும் குரல்எனது குரல் போலவே இருக்கிறது. நான் இசைத்தது போலவே ஒரு எண்ணம் வருகிறது. எனக்கு மட்டுமல்ல, உங்களுக்கும்,உலகில் உள்ள தமிழர்களுக்கும் வரும்.

    இந்த இசையை அனைவரும் கேட்டுப் பார்க்க வேண்டும், அனுபவித்து உணர வேண்டும் என்றார் கமல்.

    ரஜினி பேசுகையில், சில நாட்களுக்கு முன்பு அமெக்காவிலிருந்து ஒருவர் போன் செய்தார். தனது மகனை சிகிச்சைக்காகசென்னைக்கு அழைத்து வரவுள்ளதாக தெரிவித்தார். சென்னைக்குச் செல்வதாக இருந்தால் ரஜினியிடம் கூட்டிப் போகவேண்டும் என தனது மகன் நிபந்தனை விதிப்பதாகவும் அவர் கூறினார்.

    அதனால் நான் ஊரில் இருக்கிறேனா என்பதை அறிந்து கொள்ள அவர் போன் செய்துள்ளார். சரி, கூட்டி வாருங்கள் என்றேன்.அவர்களும் வந்தார்கள். எனது வீட்டிற்குள் வந்து அமர்ந்ததும், அந்த சிறுவன் என்னிடம் கேட்டான், ரஜினி எங்கே? என்று.எனக்கு ஒன்னும் புரியவில்லை. நான் தான் ரஜினி என்றேன். அதற்கு அவன் நோ, நோ, நீங்கள் ரஜினியின் தந்தை. நான்ரஜினியைத் தான் பார்க்க வேண்டும் என்றான்.

    எனக்கு பேஜாராகப் போய் விட்டது. இல்லைப்பா, நான் தான் நிஜமாவே ரஜினி என்றேன். அவனுக்கு கோபம் வந்து விட்டது.ரஜினியைத் தான் நான் பார்க்க வந்தேன். உங்களை அல்ல என்று வேகமாக கூறினான். என்னடா வம்பாப் போச்சு என்று உள்ளேசென்று தலைக்கு டை அடித்து, தாடியை ஷேவிங் செய்து விட்டு புது கெட்டப்புடன் அவன் முன் வந்து நின்றேன். அப்போது தான்அவன் என்னை ரஜினி என்று நம்பினான்.

    அந்தப் பையனோட பாட்டி என்னிடம் கேட்டார்கள். ஏம்ப்பா கோடி கோடியா சம்பாதிக்கிறே, ஒரு பிளேடு வாங்க முடியாதாஉன்னால். இப்படி தாடியோட இருக்கியே என்று. சரி, சம்பாதிக்கிற பணத்தை எல்லாம் பொண்டாட்டி கிட்ட கரெக்டாகொடுக்கிறியா என்று தொடர்ந்தார்.

    நான் உடனே, பணத்தை பொண்டாட்டி கிட்ட கொடுத்தாலும் ஒன்னுதான், திருப்பதி உண்டியல்ல போட்டாலும் ஒன்னுதான்னுசொன்னேன். ஓஹோ, அதான் நிம்மதியில்லாம எங்கெங்கோ அலையற (இமயமலைக்கு) போல என்று கூறினார். அவர்களதுபேச்சு வெகு எதார்த்தமாக இருந்தது.

    இதை எதற்காக கூறுகிறேன் என்றால் மனிதனுக்கு ரொம்ப முக்கியமான தேவை அமைதி தான். அந்த அமைதி அவனைத் தேடிவராது, நாம் தான் தேடிப் போக வேண்டும். அமைதி கிடைப்பது ரொம்ப கஷ்டமான காரியம்.

    எனக்கு திருவண்ணாமலையை அடையாளம் காட்டியது ராஜா தான். அந்த வகையில் அவர் எனக்கு குரு போன்றவர். ஒருவர்நாதத்தை நேசிக்க வேண்டும் என்றால் அவனது (கடவுள்) கடாட்சம் இருக்க வேண்டும். அவன் கொடுத்த பிச்சை தான் இந்தஞானம். அது ராஜாவுக்கு நிறையவே இருக்கிறது.

    சந்திரமுகி வெற்றி பெற்று இன்னும் ஓடிக் கொண்டிருக்கிறது. 4 வாரங்கள் சந்தோஷமாக இருந்தது. இப்போது போய் விட்டது.சந்தோஷம் என்பது கொஞ்ச நாளைக்குத் தான். கஷ்டமும் கொஞ்ச நாளைக்குத்தான். பின்னர் அதுவும் போய் விடும்.

    பணம், புகழ் இப்படி எல்லாமே வரும், போகும். ஆனால் அமைதி கிடைப்பது ரொம்பக் கஷ்டம். அது கிடைத்து விட்டால்அதைத் தக்க வைப்பது அதை விடக் கஷ்டம். அப்படிப்பட்ட அமைதியைத் தேடித்தான் இளையராஜா இப்போது போய்க்கொண்டிருக்கிறார் என்றார் ரஜினிகாந்த்.

    அமைச்சர் ஜெயபால் ரெட்டி பேசுகையில், இந்திய இசையின் ராஜாவாக இளையராஜா திகழ்கிறார். அவரது திருவாசகம் இசைத்தொகுப்பு இதுவரை இந்தியாவில் யாரும் செய்யாதது. இந்த முயற்சி மிகவும் அற்புதமாக அமைந்துள்ளது. இதற்கு கிராமி விருதுகிடைக்க வேண்டும். ஆஸ்கர் விருது பெற்ற ஹாலிவுட் இசையமைப்பாளர் ஸ்வார்ட்ஸே இளையராஜாவைப் புகழ்ந்துள்ளார்.இது இந்திய இசைக்குக் கிடைத்த பெருமையாகும்.

    இந்த இசைத் தொகுப்பில், இந்திய இசையும், மேற்கத்திய இசையும் ஒன்று கலந்து பிரமிப்பூட்டுகிறது. கலாச்சார எல்லையைகடந்து சாதனை படைத்துள்ளார் இளையராஜா என்று புகழாரம் சூட்டினார் ரெட்டி.

    இறுதியாக இளையராஜா பேசுகையில், கமல் இறை நம்பிக்கை இல்லாதவர். அவரையே இந்த இசை கவர்ந்துள்ளது என்றால்அது இறைவனின் விருப்பம் என்று தான் சொல்வேன். பாரதிராஜா சொன்னார், 3000 பிறவிகள் உனக்கு உண்டு என்று.அதெல்லாம் முடியாது. நீ வேண்டுமானால் பிறந்து விட்டுப் போ, பிரம்மாவாக அவதாரம் எடு. பலருக்கு அவதாரம் கொடு.

    கடவுளின் அருளால் தான் இந்த முயற்சி பலன் பெற்றது. கடவுள் அருள் தொடர்ந்தால் இன்னும் பல முயற்சிகளுக்கு உருகிடைக்கும் என்றார் ராஜா.

    திருவாசகம் இசைத் தொகுப்பின் முதல் பிரதியை ஜெயபால் ரெட்டி வெளியிட அதை பாலமுரளி கிருஷ்ணா பெற்றுக் கொண்டார்.அதேபோல மேக்கிங் ஆப் திருவாசகம் தொகுப்பை தட்சிணாமூர்த்தி சுவாமிகள் வெளியிட கமல்ஹாசன் பெற்றுக் கொண்டார்.

    இளையராஜாவின் திருவாசகம் வெளியீட்டைக் காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அலைகடலென திரண்டு வந்ததால், மியூசிக்அகாடமிக்கு உள்ளேயும், வெளியேயும் கூட்டம் நிரம்பி வழிந்தது. அரங்கம் அமைந்துள்ள டி.டி.கே. சாலையில் போக்குவரத்துஸ்தம்பித்தது.

    மாலை 6 மணிக்குத் தொடங்கிய விழா இரவு 11 மணி வரை நீடித்தும் கூட்டம் கலையாமல் அப்படியே இருந்ததுகுறிப்பிடத்தக்கது. விழா அழைப்பிதழில் பெயர் இடம் பெறாமல் இருந்தும் கூட ராஜாவின் நிகழ்ச்சி என்பதால் தானாக வந்துகலந்து கொண்டார் ரஜினிகாந்த். விழா முடியும் வரை அமர்ந்திருந்து ராஜாவைக் கெளரவித்தார்.

    நிகழ்ச்சியை, திருவாசகத்தை உருவாக்க பிளாட்பார்ம் ஆக திகழ்ந்த தமிழ் மையம் அமைப்பின் நிறுவனர் பாதிரியார் ஜெகத்கஸ்பார் தொகுத்து வழங்கினார்.

      Read more about: ilayarajas
      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X