»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

இசைஞானி இளையராஜா, தனது மகள் பவதராணி இசையில் ஒரு பாடலைப் பாடியுள்ளார்.

முதலில் பின்னணி பாடிக் கொண்டிருந்த பவதாரணி இப்போது அப்பாவின் வழியில் இசையமைப்பாளராகிவிட்டார். ரேவதி இயக்கிய மித்ரமை ஃபிரண்ட் என்ற ஆங்கிலப் படத்துக்கு பவாதான் இசையமைத்தார்.

அதைத் தொடர்ந்து தற்போது அமிர்தம் என்ற படத்துக்கு இசையமைத்து வருகிறார். தமிழில் அவர் இசையமைக்கும் முதல் படம் இது. இதில்ஸ்ரீரங்கன் சந்நிதி சேவிப்பதில் நிம்மதி, நின்பாதமே என் கதி என்றும் தொழும் சந்நிதி என்ற பாடலை பா.விஜய் எழுத, அதை யாரைப் பாடவைக்கலாம் என்று யோசித்து யோசித்து இறுதியில் அப்பாவை விட்டு பாட வைக்க தீர்மானித்தாராம் பவதாரணி.


மகளின் இசையில் பாட ராஜாவும் ஒத்துக் கொண்டுவிட, வடபழனி பிரசாத் ஸ்டூடியோவில் ரிகர்சல்.

பா.விஜய், இயக்குனர் கண்ணன் உடனிருக்க, எப்படிப் பாட வேண்டும் என்று அப்பாவுக்கு மகள் சொல்லித் தர அதை மிக கவனமுடன்வாங்கிக் கொண்ட ராஜா,

சரி, பாடுவதில் ஏதாவது குறை தெரிந்தால் உடனே சொல்லு, அப்பாவாச்சேன்னு பார்க்காதே என்று அட்வைஸ் கொடுத்துவிட்டு பாடத்தொடங்கினார்.

பாட்டு முடிந்தவுடன், பவா முகத்தில் சந்தோஷம். நான் நினைச்ச மாதியே பாடிட்டீங்கப்பான்னு என்று சொல்ல, மகளின் சர்டிபிகேட் கிடைத்தமகிழ்ச்சியில், பவதாரணியின் தலையில் கை வைத்து ஆசிர்வதித்துவிட்டுக் கிளம்பிச் சென்றாராம்.

ஏற்கனவே மகன் கார்த்திக் ராஜா இசையில் காதலா காதலா படத்தில் ராஜா பாடியுள்ள ராஜா இப்போது இளைய மகன் யுவன் ஷங்கர்ராஜாவின் கல்யாண ஏற்பாடுகளில் மும்முரமாய் இருக்கிறார்.

இப்போது மலையாளத்தில் பாசிலின் ஒரு படம் உள்பட 4 படங்களுக்கும் கன்னடத்தில் சில படங்களுக்கும்இசையமைத்துக் கொண்டிருக்கிறார் ராஜா.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil