Don't Miss!
- Lifestyle
உங்களுக்கு இந்த கலர்ல சிறுநீர் வருதா? அது புற்றுநோயோட அறிகுறியா கூட இருக்கலாமாம்...ஜாக்கிரதை!
- News
செயற்கை வைரங்களை உருவாக்க புதிய திட்டம்.. சுங்க வரியும் குறைக்கப்படும்.. நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
- Finance
இயற்கை விவசாயத்தினை மேம்படுத்த பல திட்டங்கள்.. விவசாய ஸ்டார்ட்அப்-களுக்கு சலுகை அளிக்க திட்டம்!
- Technology
மலிவு விலையில் 28 நாட்கள் வேலிடிட்டி உடன் புதிய திட்டத்தை அறிமுகம் செய்து அதிரடி காட்டிய Vodafone Idea!
- Sports
மொத்த ப்ளானையும் மாத்துங்க.. நியூசி, உடனான 3வது டி20 போட்டி.. தினேஷ் கார்த்திக் முக்கிய அறிவுரை!
- Automobiles
இந்த மாதிரி டபுள்-டக்கர் பேருந்து எல்லாம் வந்தா நம்ம சென்னை வேற லெவல் ஆயிடும்!! அதுவும் எலக்ட்ரிக் தரத்தில்...
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
S.P.பாலசுப்ரமணியம் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி...இளையராஜா தலைமையில்
சென்னை : பத்மவிபூஷண்" பாடும் நிலா .S.P.பாலசுப்ரமணியம் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்க வளாகத்தில் 25.09.2021 சனிக்கிழமை இன்று காலை10.30 மணி அளவில் "பத்மவிபூஷண்" "இசைஞானி" இளையராஜா அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
பல பாதிரியார்கள் சொன்ன மனகுமுறல்களே ருத்ர தாண்டவம்...அதிரடி காட்டிய இயக்குனர்
விழாவில் பொதுச்செயலாளர் ஜோனாபக்தகுமார். S.D. , தலைமையேற்க வந்திருக்கும் இசைஞானி அவர்களையும் , மும்பையிலிருந்து இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்த இசையமைப்பாளர் மற்றும் ஒலிப்பதிவாளர் உத்தம்சிங் , சம்மேளன தலைவர் R.K.செல்வமணி , S.P.B குடும்பத்தின் சார்பாக வந்திருந்த இசையமைப்பாளர் .வாசுராவ் அவர்களையும் வரவேற்றார்.

எஸ் பி பி- இசைஞானி நட்பு :
நிகழ்ச்சியில் இசைஞானி பேசும் போது அவருக்கும் S.P.B.கும் உள்ள தெய்வீக நட்பை மற்றும் அவருடன் இருந்த மகிழ்ச்சியான தருணங்களையும் நினைவு கூர்ந்தார் . தலைவர் தினா வந்திருந்த அனைவருக்கும் சங்கத்தின் சார்பாக நன்றியை தெரிவித்தார்.

மனிதத்தன்மை
எஸ் பி பாலசுப்ரமணியம் பாடல்கள் இன்றும் என்றும் ஒலித்துக் கொண்டே இருக்கின்றது .அவரது நினைவு நாளான இன்று பல ஊடகங்கள் பலவிதமான பாடல்களை அற்புதமான பதிவுகளாக எழுதி வருகின்றனர் அவர் பாடிய விதம், பழகிய விதம், மனிதத்தன்மை, இசை மீது கொண்ட ஆர்வம் போன்ற பல விஷயங்களை குறிப்பிட்டு பத்திரிக்கையாளர்கள் மற்றும் ரசிகர்கள் இணையதளத்தில் தொடர்ந்து பேசி வருகின்றனர்.

பாடல்களை பகிர்ந்து
எத்தனை காலங்கள் ஆனாலும் எஸ்பிபி என்கின்ற மிகப்பெரிய ஆளுமையை யாராலும் மறக்கவே முடியாது. அவரை நினைத்து நினைத்து வேதனை படுவதை விட அவரை நினைத்து நினைத்து அவரது பாடல்களை தொடர்ந்து பாடியும் அந்த பாடல்களை மற்றவர்களுக்கு சந்தோஷமாக உற்சாகமாக பகிர்ந்தும் வருகின்றனர்.

பல மாநிலங்களிலிருந்து
பழமொழிகளில் ரசிகர்களைக் கொண்டுள்ள எஸ்பிபி எல்லாத் தரப்பினரையும் மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்திதுள்ளார். ஆகையால் அவருடைய நினைவு தினமான இன்று அவருக்கு பல மாநிலங்களிலிருந்து பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். சென்னையில் இசைஞானி இளையராஜா எஸ்பிபி அவர்களுக்கு கொடுத்த மரியாதை மிகவும் குறிப்பிடத்தக்கது.

இசை மீது காதல்
இளையராஜாவின் இசையில் பல பாடல்கள் எஸ்பிபி பாடியுள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. அவர்கள் இருவருக்கும் உண்டான நட்பு இசை மீது கொண்ட காதல் இருவரும் சேர்ந்து படைத்த படைப்புகள் காலத்தால் அழிக்க முடியாதவை . ஒவ்வொரு ஆண்டும் எஸ்பிபி பற்றி பேசுவது என்பதைத் தாண்டி எஸ்பிபி பாடல்களை கேட்பதும் அவர் நடித்த படங்களை பார்ப்பதும் அவர் வாழ்ந்த வாழ்க்கையை மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக சொல்வதும் ஒரு சிறந்த செயலாகும்.