»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

இசைஞானி இளையராஜா இத்தாலியில் நடந்த விழாவில் தனது இசை நிகழ்ச்சியை நடத்தி கேட்க வந்தவர்களைபரசவசத்தில் ஆழ்த்தினார்.

ஏஞ்சலிகா ஆர்டிஸ்ட் குழு இத்தாலியில் வருடந்தோறும் இசை விழா நடத்தி வருகிறது. உலகம் முழுவதிலும்இருந்து இசைக் கலைஞர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டு கீதங்களை இசைப்பார்கள்.

இந்த விழாவில் இளையராஜாவின் நிகழ்ச்சி நடைபெற வேண்டும் என்று மாசிமோ என்ற இத்தாலிய இசைக்கலைஞர் விரும்பினார். இந்த மாசிமோ 1998ம் ஆண்டு இளையராஜாவின் பாடல்களைக் கேட்ட பின்பு, அவரின்தீவிர ரசிகராக மாறியவராம்.

பின்னர் இணைய தளங்கள் மூலமாக இளையராஜா பற்றிய விவரங்களை சேகரித்த மாசிமோ, சென்னை வந்துஇளைராஜாவைச் சந்தித்தார்.

இத்தாலியில் நடக்கும் இசை விழாவில் நீங்களும் பங்கு பெற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். ஆனால்இளையராஜா ஒப்புக் கொள்ளவில்லை. மாசிமோவும் விடவில்லை. தொடர்ந்து 5 வருடங்களாக வலியுறுத்திவந்தார்.

கடந்த ஜனவரி மாதம் சென்னை வந்த மாசிமோ, கடைசியில் இளையராஜாவின் சம்மதத்தைப் பெற்றுவிட்டார்.இத்தாலியில் மாடனா ஓம்ரா அரங்கில் நடந்த இசை விழாவில் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி முக்கியநிகழ்ச்சியாக இடம் பெற்றது.

பழைய பாடல்களுடன் புதிய பாடல்களையும் கலந்து இளையராஜா நடத்திய நிகழ்ச்சிக்கு சரியான வரவேற்பு.விழா குறித்து இளையராஜா கூறுகையில், நான் இதுவரை எந்த மேடையிலும் இசை நிகழ்ச்சி நடத்தியது கிடையாது.ஆனால் இத்தாலியில் நிகழ்ச்சி நடத்தியபோது கிடைத்த வரவேற்பைக் கண்டபோது நெகிழ்ந்து போனேன் என்றார்.

விரைவில் இந்த நிகழ்ச்சி ஒரு பிரபல தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது.!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil