»   »  ஆயிரம் பட சாதனை... இளையராஜாவுக்கு சென்னையில் பாராட்டு விழா

ஆயிரம் பட சாதனை... இளையராஜாவுக்கு சென்னையில் பாராட்டு விழா

Posted By:
Subscribe to Oneindia Tamil

இளையராஜாவின் 1000 பட சாதனையை முன்னிட்டு இசை நிகழ்ச்சி நடத்தவுள்ளது விஜய் டிவி.

சமீபத்தில் வெளிவந்த தாரை தப்பட்டை, இளையராஜாவின் 1000-வது படம் என அறிவிக்கப்பட்டது. இதனையொட்டி விஜய் டிவிக்குப் பேட்டி அளித்தார் இளையராஜா.

IMM - Vijay TV music concert to honour Ilaiyaraaja

அப்போது, இளையராஜாவின் சாதனையைக் கொண்டாடும் முயற்சியின் தொடக்கம் இது என அறிவித்தது அந்த டிவி. இப்போது அடுத்த கட்டமாக இளையராஜா 1000 என்கிற பெயரில் இசை நிகழ்ச்சி நடத்த முன்வந்துள்ளது விஜய் டிவி.

பிப்ரவரி 27-ம் தேதி சென்னை ஒய்.எம்.சி.ஏ. நந்தனம் மைதானத்தில் இந்த இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியை இவ்விழாவை IMM (இளையராஜா மியூசிக் மேனேஜ்மெண்ட் பிரைவேட் லிமிடெட்) நிறுவனமும், விஜய் தொலைக்காட்சியும் இணைந்து சென்னையில் நடத்த இருக்கிறார்கள்.

இவ்விழாவில் இளையாராஜாவின் பாடல்களை பாடி அவருக்கு காணிக்கையாக சமர்ப்பித்து மகிழ்விக்க ஒட்டு மொத்த திரையுலகம் கூடவிருக்கிறார்கள். மேலும், ரசிகர்கள், இசைக்கலைஞர்கள், நட்சத்திரங்கள் என திரையுலகமே கண்டிராத ஒரு விழாவாக இருக்கும் என்றும் விஜய் டிவி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இவ்விழா குறித்து இளையராஜா, "ஆயிரம் படங்களுக்கு இசை, என்னை பொறுத்தவரையில் ஒரு எண்ணிக்கையே. இதை வைத்து நான் கர்வப்பட முடியாது.

இசை என்னுடைய வாழ்வு, என்னுடைய மூச்சு. என்னுடைய இசை ஒவ்வொரு ரசிகனுடைய வாழ்விலும் ஒரு அன்யோன்யத்தை ஏற்படுத்தியுள்ளது மகிழ்ச்சியே. என்னுடைய ரசிகர்களின் கைதட்டல் தான் எனக்கு பாராட்டு. அது தான் என்னுடைய வாழ்வின் அர்த்தமாகவும் கருதுகிறேன்.

என் இசைக்கு பாராட்டு என்ற போது, எனக்கு அந்த இசை கொடுத்த என் இறைவனுக்கு பாராட்டாக இருக்கும் என்று தான் இந்த வாழ்வில் நான் கலந்து கொள்கிறேன்" என்று தெரிவித்திருக்கிறார்.

English summary
Ilaiyaraaja Music Management and Vijay TV will jointly conduct musical show to honour Maestro Ilaiyaraaja for his rare 1000 movie achievement.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil