அண்ணாச்சி வீட்டில் ஐக்கி...முதல் வீடியோவிலேயே ராஜுவிற்கு ஆதரவு கேட்ட அண்ணாச்சி

சென்னை : பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி 70 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இதில் பலரையும் கவர்ந்தவராக இருந்தவர்களில் ஐக்கி பெர்ரியும் ஒருவர். தமிழில் ராப் பாடல் பாடி பலரையும் மகிழ்ச்சி வந்தார். வேக்அப் சாங்கிற்கு செமையாக நடனமாடி கலக்கினார்.

ஆரம்பத்தில் பெரிதாக வெளியில் தெரியாமல் இருந்த ஐக்கி, போக போக பாட்டு, நடனம், குறும்புத்தனம், நியாயமான பேச்சுக்களால் பலரையும் கவர்ந்து விட்டார். இரண்டு வாரங்களுக்கு முன் ரம்யா கிருஷ்ணன் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய வாரத்தில் பிக்பாஸ் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

பிஸியான ஐக்கி

பிஸியான ஐக்கி

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிறகு தனது ரசிகர்களை லைவில் சந்தித்து அடிக்கடி பேசி வருகிறார். அதோடு தான் அடுத்தடுத்து மியூசிக் கம்போஸ் செய்யும் வீடியோக்கள், ஃபோட்டோக்களையும் வெளியிட்டு வருகிறார். தொடர்ந்து தனக்கு முன் போட்டியில் இருந்து வெளியேறியவர்களின் வீட்டிற்கு சென்று, அவர்களை சந்தித்து வருகிறார் ஐக்கி.

போட்டியாளர்களுடன் சந்திப்பு

போட்டியாளர்களுடன் சந்திப்பு

இமான் அண்ணாச்சி வீட்டிற்கு சென்று அவரின் குடும்பத்தினரை சந்தித்து விருந்து சாப்பிட்டு விட்டு வந்த ஐக்கி, நமிதா மாரிமுத்து, அபிஷேக் ஆகியோருடன் சேர்ந்து லைவில் ரசிகர்களை சந்தித்து பேசினார். அபிஷேக்குடன் தில்லானா தில்லானா பாடலுக்கு நடனமாடிய வீடியோவையும் வெளியிட்டார். கடந்த வாரம் இசைவாணியையும் சந்தித்து, ஃபோட்டோ வெளியிட்டார் ஐக்கி.

அண்ணாச்சி வீட்டில் ஐக்கி

அண்ணாச்சி வீட்டில் ஐக்கி

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நேற்று வெளியேற்றப்பட்ட இமான் அண்ணாச்சியையும் அவர் வீட்டில் சென்று இன்று சந்தித்துள்ளார் ஐக்கி. அண்ணாச்சி வீட்டில் ஐக்கி இருந்த ஃபோட்டோக்களை இமான் அண்ணாச்சியும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். இதற்கு பலரும் மிஸ் யூ அண்ணாச்சி என கமெண்ட் செய்திருந்தனர்.

லைவில் ஆதரவு கேட்ட அண்ணாச்சி

லைவில் ஆதரவு கேட்ட அண்ணாச்சி

இமான் அண்ணாச்சியுடன் இணைந்து ரசிகர்களை சந்தித்து பேசினார் ஐக்கி. லைவில் பேசிய அண்ணாச்சி, 70 நாட்களாக எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி. இறுதி போட்டி வரை செல்ல நினைத்தேன், நடுவில் சற்று சறுக்கி விட்டது. அதனால் என்ன நான் செய்ய வேண்டியதை தம்பி ராஜு செய்வார். அவருக்கு அனைவரும் ஓட்டளித்து ஆதரவு தாருங்கள்.

இன்னும் பிக்பாஸ் பார்க்கல

இன்னும் பிக்பாஸ் பார்க்கல

இன்னும் நான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் என்னவெல்லாம் காட்டப்பட்டது என பார்க்கவில்லை. பார்த்து விட்டு அவ்வப்போது வீடியோ மூலம் உங்களை சந்தித்து கருத்துக்களை பகிர்ந்து கொள்கிறேன். அனைவரும் சந்தோஷமாக இருங்கள். செய்யும் வேலையை மன நிறைவோடு செய்யுங்கள் என்றார். அப்போது லைவில் கமெண்ட் செய்த ரசிகர்கள் பலர், கப்பை வெல்லவில்லை என்றால் என்ன மக்களின் மனங்களை வென்று விட்டீர்கள் என தெரிவித்தனர். இதை பார்த்து மகிழ்ச்சி அடைந்த அண்ணாச்சி, இதை விட வேறு என்ன வேண்டும். இது தான் பெரிய விஷயம் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X