பிக் பாஸ் வீட்டில் ஸ்ட்ராட்டஜி மற்றும் குரூபிசம் ஆரம்பிச்சாச்சா? இமான் அண்ணாச்சி சொன்ன நச் பதில்!

சென்னை: இன்னும் ஒரு வாரத்தில் குரூபிசம் இந்த சீசனிலும் ஆரம்பித்து விடும் என இமான் அண்ணாச்சி விவகாரம் கலந்த வேடிக்கையுடன் சொல்லி கமலையே கன்ஃப்யூஸ் செய்து விட்டார்.

அரசல் புரசலாக ஸ்ட்ராட்டஜியை பற்றியெல்லாம் பேசிக்கிறாங்களே சிலர் என கமல் ஆரம்பிக்க யாரெல்லாம் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பீர்கள் என்கிற கேள்வியையும் போட்டியாளர்கள் மத்தியில் பட்டென வைத்து விட்டார் கமல்.

இந்த ஷோவை எல்லாம் இதுக்கு முன்னாடி பார்த்ததே இல்லை என அபிஷேக் ராஜா லேட்டாக சொன்னதை நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் வச்சு விளாசி வருகின்றனர்.

பிக் பாஸ் பார்ப்பீங்களா

பிக் பாஸ் பார்ப்பீங்களா

பிக் பாஸ் நிகழ்ச்சியை போட்டியாளராக கலந்து கொண்ட யாரெல்லாம் பார்த்து இருக்கீங்க என கமல் கேட்க முதல் நபராக இமான் அண்ணாச்சி ஷூட்டிங்கில் பிசியாக இருப்பதால் சில எபிசோடுகள் மட்டுமே பார்த்துள்ளேன் சார் என ஒப்புக் கொண்டார். அவரை தொடர்ந்து சிபி, அக்‌ஷரா, தாமரை செல்வி உள்ளிட்டோர் பார்த்ததே அதிகமாக பார்த்தது இல்லை எனக் கூறினர்.

பொய் சொன்னாரா அபிஷேக்

பொய் சொன்னாரா அபிஷேக்

நல்லா தெரியும் டா பிக் பாஸ் நிகழ்ச்சியை கேமரா வச்சி ஷூட் பண்ணிட்டு இருக்கீங்க என பொதுவெளியில் விமர்சித்த அபிஷேக் ராஜா கடைசியாக கமல் சாரே காண்டாகும் அளவுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியை ஒரு எபிசோடு கூட பார்த்தது இல்லை என சொன்னதை கேட்ட ரசிகர்கள் படத்தையும் இப்படித்தான் பார்க்காமலே ரிவ்யூ பண்ணுவீங்களா அபிஷேக் என கலாய்த்து வருகின்றனர்.

ஸ்ட்ராட்டஜி ஆரம்பம்

ஸ்ட்ராட்டஜி ஆரம்பம்

ஞாயிற்றுக் கிழமை எபிசோடில் போட்டியாளர்கள் போடும் ஸ்ட்ராட்டஜி பற்றி கமல்ஹாசன் பிக் பாஸ் போட்டியாளர்கள் மத்தியில் நேரடியாகவே கேட்க இங்கே ஸ்ட்ராட்டஜியும் குரூபிசமும் ஆரம்பமாகி வருகிறது என்பதை ஐக்கி பெர்ரி மற்றும் பாவனி ரெட்டி எழுந்து நின்று ஓப்பனாகவே சொல்லி விட்டனர்.

திங்கட் கிழமை ஆரம்பிச்சிரும்

திங்கட் கிழமை ஆரம்பிச்சிரும்

ஸ்ட்ராட்டஜி பற்றி பேசாமல் பிக் பாஸ் வீட்டில் நடக்கும் அரசியல் குறித்து பேசிய இமான் அண்ணாச்சியிடம் கமல் கேட்க, இது வரைக்கும் குரூப்பா பேசுறாங்க சார்.. ஆனால், வர திங்கட் கிழமையே குரூப்பிசம் ஆரம்பிச்சிரும் என போகிற போக்கில் பெரிதாக கொளுத்திப் போட்டுவிட்டு போய்விட்டார் அண்ணாச்சி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X