»   »  குட்டிப் பட்டாளத்தின் ஹீரோவான இமான் அண்ணாச்சி

குட்டிப் பட்டாளத்தின் ஹீரோவான இமான் அண்ணாச்சி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சொல்லுங்கண்ணே சொல்லுங்க மற்றும் குட்டிச்சுட்டீஸ் போன்ற நிகழ்சிகளின் மூலம் பிரபலமான இமான் அண்ணாச்சி தற்போது குட்டிப் பட்டாளம் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக புரோமோஷன் பெற்றிருக்கிறார்.

சென்னைக் காதல் படத்தில் அறிமுகமானவர் இமான் அண்ணாச்சி. தொடர்ந்து கோலி சோடா, காக்கிச்சட்டை மற்றும் புலி போன்ற படங்களில் காமெடியனாகக் கலக்கிய இமான் அண்ணாச்சி தற்போது ஹீரோவாக நடிக்கவிருக்கிறார்.

Imman Annachi Turn as Hero in Kutti Pattalam

வாச்சாத்தி, மரவேட்டை, உயிரோடு கலந்து விடு போன்ற படங்களை இயக்கிய ரவி தம்பி இயக்கும் இந்தப் படத்திற்கு குட்டிப் பட்டாளம் என்று பெயரிடப்பட்டிருக்கிறது.

இந்தப் படத்தில் இமான் அண்ணாச்சியுடன் இணைந்து சுமார் 20 க்கும் மேற்பட்ட குழந்தைகள் நடிக்கவுள்ளனர். குழந்தைகளை மையமாகக் கொண்டு எடுக்கப்படும் இந்த படத்தில் அவர்களை வழிநடத்தி நல்ல வழிக்குக் கொண்டுவரும் அங்கிள் வேடத்தில் இமான் அண்ணாச்சி நடிக்கிறாராம்.

"இன்றைய குழந்தைகள் மத்தியில் சூப்பர் ஸ்டாராக இமான் அண்ணாச்சி திகழ்கிறார். அதனால் குழந்தைகளை மையமாகக் கொண்ட இந்தப் படத்தில் அவரை ஹீரோவாக நடிக்க வைக்கிறோம்".

என்று படத்தின் இயக்குநர் ரவி தம்பி, இமான் அண்ணாச்சியை ஹீரோவாக நடிக்க வைப்பதன் பின்னணி குறித்து கூறியிருக்கிறார்.

ஜனவரி 2016 முதல் தொடங்கப்படும் இந்தப் படத்தின் படப்பிடிப்பானது, சென்னை மற்றும் கொடைக்கானல் பகுதிகளில் நடைபெறவிருக்கிறது.

English summary
Comedian Imman Annachi Now Turn as a Hero in Kutti Pattalam, Directed by Ravithambi. The Normal Shoot of the Film Begins on January 2016.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil