»   »  இசையமைப்பாளர் இமான், வில்லன் சிபிராஜுடன் "போக்கிரி ராஜா" வில் களமிறங்கும் ஜீவா...

இசையமைப்பாளர் இமான், வில்லன் சிபிராஜுடன் "போக்கிரி ராஜா" வில் களமிறங்கும் ஜீவா...

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழுக்குஎண் 1 ஐ அழுத்தவும் படத்தின் மூலம் அனைவரையும் தன்னைத் திரும்பிப் பார்க்க வைத்த இயக்குநர் ராம்பிரகாஷ் ராயப்பா, அடுத்து நடிகர் ஜீவாவுடன் கைகோர்க்கிறார்.

ஜீவாவை வைத்து போக்கிரி ராஜா படத்தை இயக்கப் போகும் இவர் இந்த முறை மிகப்பெரிய டீமுடன் களமிறங்கவிருக்கிறார். படத்திற்கு நாயகனாக ஜீவா நாயகியாக ஹன்சிகா நடிப்பது நாம் அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் படத்தின் இசையமைப்பாளர் மற்றும் வில்லன் ஆகிய இருவரையும் சமீபத்தில் உறுதி செய்திருக்கிறார் இயக்குனர் ராம்பிரகாஷ் ராயப்பா.

போக்கிரி ராஜா

போக்கிரி ராஜா

ரஜினியின் மாபெரும் பிளாக்பஸ்டர் படங்களில் ஒன்றான போக்கிரி ராஜா படத்தின் தலைப்பை தற்போது ஜீவா நடிக்கும் புதிய படத்திற்கு தலைப்பாக உறுதி செய்திருக்கின்றனர்.

ஜீவா- ஹன்சிகா

ஜீவா- ஹன்சிகா

முதன்முறையாக இந்தப் படத்தில் ஹன்சிகாவுடன் இணைந்து நடிக்கிறார் ஜீவா. திருநாள், கவலை வேண்டாம் படங்களைத் தொடர்ந்து போக்கிரி ராஜாவாக மாறுகிறார் ஜீவா.

இசையமைப்பாளர் இமான்

ரொமான்ஸ் + காமெடி கலந்து உருவாகும் இந்தப் படத்திற்கு முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான டி.இமான் இசையமைக்கிறார். இந்தத் தகவலை இயக்குநர் ராம்பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து இருக்கிறார்.

வில்லனாக சிபி

வில்லனாக சிபி

இந்தப் படத்தில் ஜீவாவுக்கு வில்லனாக நடிகர் சிபிராஜ் நடிக்கவிருக்கிறார். இதற்காக மிகப்பெரிய தொகை ஒன்று அவருக்கு பேசப்பட்டிருக்கிறதாம். தற்போது ஜாக்சன் துரையில் நடித்துக் கொண்டிருக்கும் சிபி ஜாக்சன் துரையை முடித்து விட்டு, போக்கிரி ராஜாவுடன் விரைவில் இணைந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

சென்னையில் இருந்து

சென்னையில் இருந்து

போக்கிரி ராஜாவின் படப்பிடிப்பை சென்னையில் நடத்த திட்டமிட்டு இருக்கிறார் இயக்குநர் ராம்பிரகாஷ். பி.டி.செல்வக்குமார் தயாரிக்கும் இப்படம் அடுத்த வருட ஆரம்பத்தில் திரைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

போக்கிரிக்கு போக்கிரி ராஜா...

English summary
Ramprakash Rayappa's next film has been titled as Pokkiri Raja and it will have both Jiiva and Hansika in lead roles.The latest update is the director has confirmed on his Twitter page that Imman will be composing the music for the film. Reports also say that Sibiraj is playing a crucial role in the film.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil