தனுஷின் வாத்திக்கு இப்படி ஒரு சோதனையா...திடீரென விலகிய பிரபலம்
சென்னை : நடிகர் தனுஷ் அடுத்து நடித்து வரும் பைலிங்குவல் படமான வாத்தி படத்தில் இருந்து முக்கிய பிரபலம் விலகுவதாக அறிவித்துள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனால் படத்தின் ஷுட்டிங் வேலைகளும் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதாம்.
தனுஷ் தற்போது மாறன், திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். பல மொழிகளிலும் பிஸியாக நடித்து வரும் தனுஷ், சமீபத்தில் 18 ஆண்டுகளுக்கு பிறகு தனது மனைவி ஐஸ்வர்யாவை பிரிய போவதாக அறிவித்தார். இதையே தனுஷ் ரசிகர்களால் ஜீரணிக்க முடியவில்லை.

ஐதராபாத்தில் வாத்தி ஷுட்டிங்
இந்நிலையில் அவரது புதிய படத்திலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. தனுஷ் நடிக்கும் பைலிங்குவல் படத்திற்கு தமிழில் வாத்தி என்றும், தெலுங்கில் சார் என்றும் பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தை தோழி பிரேமா படத்தை இயக்கிய வெங்கி அட்லுரி இயக்கி வருகிறார். இந்த படத்தின் ஷுட்டிங் ஐதராபாத்தில் சமீபத்தில் துவங்கி நடந்து வருகிறது.

முக்கிய பிரபலம் திடீர் விலகல்
வாத்தி படத்தில் ஒளிப்பதிவாளராக தினேஷ் கிருஷ்ணன் பணியாற்றி வந்தார். இந்நிலையில் வாத்தி படத்தில் இருந்து விலகுவதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். அவர் பாதியிலேயே விலகியதற்கு என்ன காரணம் என தெரியவில்லை. ஆனால், எதிர்பாராத விதமாக தனுஷ் நடிக்கும் வாத்தி படத்தில் என்னால் பணியாற்ற முடியவில்லை. விரைவில் Fortune4 Cinemas உடன் இணைவேன் என நம்புகிறேன் என ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

பாதியில் நின்ற ஷுட்டிங்
நாக வம்சி, சாய் செளஜன்யாவின் சித்தாரா என்டர்டைன்மென்ட்ஸ் ஆகியன இணைந்து தயாரிக்கும் இந்த படம் சாமானிய மனிதரின் வாழ்க்கை பயணம் பற்றிய கதையாம். இதில் தனுஷ், காலேஜ் ப்ரொஃபசர் ரோலில் நடிக்கிறாராம். விறுவிறுப்பாக ஷுட்டிங் நடந்து வந்த நிலையில் தினேஷ் கிருஷ்ணா விலகி உள்ளதால், விரைவில் புதிய ஒளிப்பதிவாளர் தேர்வு செய்யப்பட்ட பிறகு ஷுட்டிங் தொடர உள்ளதாம்.
Recommended Video

விலக என்ன காரணம்
ஒளிப்பதிவாளர் தினேஷ் விலகியதற்கு கொரோனா கூட காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இருந்தாலும் அவர் இந்த படத்தில் இருந்து மொத்தமாக விலக என்ன காரணம் என தெரியாமல் அனைவரும் குழம்பிப் போய் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











