»   »  தடைகள், வதந்திகளைத் தாண்டி, 'ராஜ டரியலுடன்' ஆரம்பமானது இம்சை அரசன் 24-ம் புலிகேசி!!

தடைகள், வதந்திகளைத் தாண்டி, 'ராஜ டரியலுடன்' ஆரம்பமானது இம்சை அரசன் 24-ம் புலிகேசி!!

Posted By:
Subscribe to Oneindia Tamil

வடிவேலுவுக்கும் சிம்பு தேவனுக்கும் சண்டை, ஷங்கர் அதிருப்தி, படம் ட்ராப், இம்சை அரசன் 4 அவ்ளோதான் என்றெல்லாம் ஏகப்பட்ட செய்திகள்.

ஆனால் அமைதி காத்து வந்தனர் சம்பந்தப்பட்ட மூவருமே.

இந்த நிலையில் இன்று படத்தின் தொடக்கம் குறித்து அதிகாரப்பூர்வமாக இன்று அறிவிப்பு வெளியாகியுள்ளது வடிவேலு ரசிகர்களைக் குஷிப்படுத்தியுள்ளது.

இம்சை அரசன் 23-ம் புலிகேசி

இம்சை அரசன் 23-ம் புலிகேசி

சிம்பு தேவன் இயக்கத்தில் வடிவேலு இரட்டை வேடத்தில் நடிக்க, 2006-ம் ஆண்டு வெளியான படம் இம்சை அரசன் 23-ம் புலிகேசி. இந்தப் படம் பட்டி தொட்டியெங்கும் பட்டையைக் கிளப்பியது.

இரண்டாம் பாகம்

இரண்டாம் பாகம்

இந்தப் படம் வெளியானபோதே, இதன் இரண்டாம் பாகத்தை உருவாக்கப்போவதாக அறிவித்திருந்தார் சிம்பு தேவன். அப்போதே கதையும் தயார் என அறிவித்தார். ஆனால் பல்வேறு காரணங்களால் படம் தொடங்குவது தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது.

11 ஆண்டுகளுக்குப் பிறகு

11 ஆண்டுகளுக்குப் பிறகு

இப்போது 11 ஆண்டுகளுக்குப் பிறகு இம்சை அரசன் 23-ம் புலிகேசிக்கு அடுத்த பாகம் உருவாகிறது. இந்தப் படத்துக்கு இம்சை அரசன் 24-ம் புலிகேசி என தலைப்பிட்டுள்ளனர்.

படப்பிடிப்பு

படப்பிடிப்பு

படத்தை ஷங்கர் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன. சிம்பு தேவன் இயக்குகிறார். ஜிப்ரான் இசையமைக்கிறார். படப்பிடிப்புடன் இன்று தொடங்குகிறது இம்சை அரசன் 24-ம் புலிகேசி.

ரசிகர்கள் குஷி

ரசிகர்கள் குஷி

இந்தப் படம் கைவிடப்பட்டதாக பலரும் கூறி வந்த நிலையில், அட்டகாசமான முதல் தோற்றப் போஸ்டருடன் இம்சை அரசன் 24-ம் புலிகேசி படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது வடிவேலு ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.

English summary
Vadivelu's Imsai Arasan 24-M Pulikesi is starting today

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil