Don't Miss!
- Sports
இந்தியா - ஆஸ்திரேலியா தொடர்.. ரசிகர்களுக்கு பிசிசிஐ தந்த மெகா சர்ஃப்ரைஸ்.. வரலாற்று தொடராக மாறுகிறது
- News
ரயிலில் பயணித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்.. அபாய சங்கிலியை இழுத்து நிறுத்திய பெண்.. காரணம் என்ன?
- Automobiles
டாடா மாருதி ஆட்டம் எல்லாம் இனி குளோஸ்! க்விட் இவி வந்ததும் துண்டை காணும் துணிய காணும்னு ஓட போறாங்க!
- Lifestyle
பளபளப்பான ஜொலிக்கும் சருமத்தை பெற... நீங்க ஏன் இயற்கை பொருட்களை மட்டும் பயன்படுத்தனும் தெரியுமா?
- Finance
எத்தியோப்பியா, கென்யாவோட ஜிடிபி-க்கு சமமான வீழ்ச்சி.. அதானி குழுமத்திற்கு அடிக்கு மேல் அடி!
- Technology
36 லட்ச WhatsApp பயனர்களுக்கு ஆப்பு.! உப்பு தின்னா தண்ணி குடிக்கனும்., தப்பு செஞ்சா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
வெண்பாவின் சூழ்ச்சியில் சிக்கும் பாரதி.. திருமணத்திற்கு ஓகே சொல்லும் ஹீரோ!
சென்னை : விஜய் டிவியின் முக்கியமான சீரியலாக மீண்டும் முன்னேறி வருகிறது பாரதி கண்ணம்மா.
ஒரே மாதிரியான கதைக்களத்துடன் ரசிகர்களை வெறுப்பேற்றி வந்த இந்தத் தொடர் தற்போது பரபரப்பான கட்டங்களுடன் எபிசோட்களை ஒளிபரப்பி வருகிறது.
டிஆர்பியிலும் இந்தத் தொடர் முன்னேறி வருகிறது. இதனிடேயே இந்த வார ப்ரமோ பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
விரைவில் முடிகிறதா பாரதி கண்ணம்மா தொடர்.. நெகிழ்ச்சியான ப்ரமோவை வெளியிட்ட குழு!

பாரதி கண்ணம்மா தொடர்
விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா தொடர் அந்த சேனலின் முக்கியமானத் தொடராக ரசிகர்களை கவர்ந்த காலகட்டம் ஒன்று உண்டு. அந்த நேரத்தில் ரோஷினி ஹரிப்பிரியன் கதையின் நாயகியாக இருந்தார். அப்போது பாரதி, கண்ணம்மாவின் உறவு, பாரதியின் சந்தேகம் என்று அடுத்தடுத்த சிறப்பான எபிசோட்கள் இருந்தது.

வெண்பாவின் சூழ்ச்சி
ஒரு பெண் தனக்கு பிடித்தமானவை அடைய எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்வாளா என்பதை தன்னுடைய அடுத்தடுத்த சூழ்ச்சிகளால் நிரூபித்தார் வெண்பா. பாரதியின் காதலியின் கொலை, பாரதி -கண்ணம்மாவின் பிரிவு உள்ளிட்ட சூழ்ச்சிகளை அரங்கேற்றினார் வெண்பா.

ரசிகர்கள் உற்சாகம்
இதனிடையே தற்போது மருத்துவமனையில் தீவிரவாதிகள், பாரதியை காப்பாற்றும் கண்ணம்மா என கதையில் இருவரும் இணைவார்கள், கதை நிறைவடையப் போகிறது என்று ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். ஆமாம் இந்தக் கதையை விரைவில் நிறைவுக்கு கொண்டு வரவேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

விஷம் குடிக்கும் வெண்பா
இந்நிலையில், தன்னுடைய கர்ப்பத்திற்கு ரோகித்தான் காரணம் என்றும், தன்னை பாரதி திருமணம் செய்துக் கொண்டு, இந்த இழிவிலிருந்து தன்னை காப்பாற்ற வேண்டும் என்றும் வெண்பா, பாரதிக்கு குடைச்சல் கொடுக்கிறார். ஒருகட்டத்தில் விஷமருந்தியதாக மருத்துவமனையிலும் அனுமதிக்கப்படுகிறார்.

வெண்பாவை திருமணம் செய்ய பாரதி சம்மதம்
இதையடுத்து வெண்பாவின் இந்த தொடர் டார்ச்சரிலிருந்து தப்பிக்கும்வகையில், அவரது உயிரை காப்பாற்றும்வகையில் பாரதி, வெண்பாவை திருமணம் செய்ய சம்மதிக்கிறார். கண்ணம்மாவை ஏற்கும் மனநிலைக்கு பாரதி வந்த நிலையில், தற்போது வெண்பாவை திருமணம் செய்ய ஓகே சொன்னது கதையின் ட்விஸ்டாக பார்க்கப்படுகிறது. ஆனாலும் காதோரத்தில் மறுபடியும் முதல்ல இருந்தா என்ற ரசிகர்களின் கதறலையும் கேட்க முடிகிறது.