Don't Miss!
- News
தீவிரவாதம்.. மதமாற்றம்.. முஸ்லீம்கள், கிறிஸ்தவர்களுக்கு எதிராக பாபா ராம்தேவ் சர்ச்சை பேச்சு
- Finance
பிட்ச் கொடுத்த அப்டேட்.. சற்றே நிம்மதியடைந்த அதானி.. ஏன் தெரியுமா?
- Automobiles
பெட்ரோலும் வேணாம் பேட்டரியும் வேணாம் பச்ச தண்ணீல ஓடும் எலெக்ட்ரிக் கார்... ரேஞ்ச் எவ்வளவு தெரியுமா?
- Lifestyle
உங்க துணையிடம் இந்த அறிகுறிகள் இருந்தால் அவங்க பாலியல் அடிமைத்தனத்தின் உச்சத்தில் இருக்கிறார்களாம்... உஷார்!
- Technology
வாஷிங் மெஷின் இருக்குதா? பழுதாகி விடாமல் இருக்க சில எளிய குறிப்புகள்: மிஸ் பண்ணாதீங்க.!
- Sports
"பாகிஸ்தானை பார்த்து காப்பி அடிக்கிறாங்க" ஹர்திக்கின் கேப்டன்சி.. ரமீஷ் ராஜா சுவாரஸ்ய கருத்து!
- Travel
இந்தியாவிலிருந்து இலவசமாக ஹாங்காங்கிற்கு விமானத்தில் செல்ல வேண்டுமா? இப்படி செய்தால் போதும்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
தூங்கும் அசீமை வைத்து காமெடி செய்த அமுதவாணன்.. என்னா வில்லத்தனம்!
சென்னை : பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் அடிதடிகள், வாக்குவாதங்களுக்கு இணையாக சுவாரஸ்யங்களுக்கும் பஞ்சமில்லாமல் காணப்படுகிறது.
நாளின் 24 மணிநேரங்களும் போட்டியாளர்கள் ஒரே இடத்தில் இருப்பதால் ஒருவரையொருவர் வம்பிழுத்தபடிதான் உள்ளனர்.
டாஸ்க்குகளையும் சிறப்பாக முடிக்க இவர்கள் அதிக சிரத்தை காட்டி வருகின்றனர். ஒருவரையொருவர் குற்றம் சாட்டுவதிலும் இவர்கள் சளைப்பை காட்டுவதில்லை.
இரவு பார்ட்டியில் பிக்பாஸ் பிரபலங்கள்..இணையத்தில் தீயாய் பரவும் போட்டோஸ்!

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி
விஜய் டிவியின் முக்கியமான நிகழ்ச்சியாக பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தற்போது களைகட்டி வருகிறது. கடந்த 5 சீசன்களை போலவே ரசிகர்களை கவர்ந்து வருகிறது இந்த நிகழ்ச்சி. 20 போட்டியாளர்களுடன் களமிறங்கிய இந்த நிகழ்ச்சி நித்தம் ஒரு டாஸ்க்குகள், அடிதடி சண்டைகள் என களைகட்டி வருகிறது. அடுத்தடுத்த எலிமினேஷனும் போட்டியாளர்களுக்கு சிறப்பாக பங்கேற்கும் முனைப்பை கொடுத்து வருகிறது.

அதிகமான சுவாரஸ்யங்கள்
இந்த நிகழ்ச்சி குடுமிப்பிடி சண்டை வரை சென்ற நிலையில், நிகழ்ச்சியில் சுவாரஸ்யங்களுக்கும் பஞ்சமில்லாமல் காணப்படுகிறது. கடந்த 58 நாட்களாக இந்த நிகழ்ச்சி தொடர்ந்து வெற்றி நடை போட்டு வருகிறது. அசீம், விக்ரமன், ஆயிஷா, தனலட்சுமி என ரசிகர்களை கவர்ந்த போட்டியாளர்கள், தங்களை முன்னிருத்திக் கொள்ள அதிக மெனக்கெடல்களை செய்து வருகின்றனர்.

அனுசரணையான போட்டியாளர்கள்
ஒருவரையொருவர் குற்றம் சாட்டுவதில் இவர்கள் அதிக கவனத்தை செலுத்தி வருகின்றனர். ஆனால் சாவகாசமாக உட்கார்ந்து பேசும்போது ஒருவருக்கொருவர் அனுசரணையாக நடந்துக் கொள்வதையும் பார்க்க முடிகிறது. இதையொட்டி குழுவான செயல்பாடு காணப்படுவதாகவும் கமெண்ட்ஸ்கள் எழுந்தன.

அசீமை வம்பிழுத்த அமுதவாணன்
நிகழ்ச்சியில் ஒருவரையொருவர் வம்பிழுப்பதையும் தொடர்ந்து காண முடிகிறது. அந்த வகையில் நல்ல ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் அசீமை, அமுதவாணன் வம்பிழுக்கும் வீடியோ வெளியாகி அனைவரையும் கவர்ந்துள்ளது. விழித்திருக்கும்போது அனைவரையும் வம்பிழுக்கும் அசீம், ஆழ்ந்த உறக்கத்தில் அவரையறியாமல் செய்யும் செய்கைகளை அமுதவாணன் அப்படியே செய்துக் காட்டி வம்பிழுக்கிறார். அவரது இந்த வில்லத்தனம் ரசிக்கும்படியாகவே அமைந்துள்ளது.

ரசிகர்களின் விமர்சனங்கள்
இன்றைய தினம் 58வது நாளில் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி நுழைந்துள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு விக்ரமன் மற்றும் ரச்சிதா இருவரும் நிகழ்ச்சி முடிய இன்னும் எத்தனை நாட்கள் உள்ளது என்பது குறித்து விரல்விட்டு எண்ணிய செயல் ரசிகர்களின் விமர்சனங்களுக்கு உள்ளானது. அவர்களுக்கு நிகழ்ச்சி சலிப்பை ஏற்படுத்தியுள்ளதா என்றும் அவர்கள் கேள்வி எழுப்பினர்.