பிக்பாஸ்-6.. ஜி.பி முத்துவின் அலப்பறை.. பேய்க்கதையா.. ஐயோ இப்ப வேணாம்.. தெறித்து ஓட்டம்!
சென்னை : பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த 9ம் தேதி துவங்கி சிறப்பான வகையில் நடைபெற்று வருகிறது.
இதில் முதல் போட்டியாளராக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த பிரபல யூடியூபர் ஜிபி முத்து அனைவரையும் தொடர்ந்து கவர்ந்து வருகிறார்.
பிக்பாஸ் வீட்டிற்குள் இவரது அடுத்தடுத்த செயல்பாடுகள் அனைவரையும் கவர்ந்து வருகிறது. இவருக்கென்று ரசிகர்கள் தனியாக ஆர்மியையே துவக்கிவிட்டனர்.

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவரும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரம்மாண்ட துவக்கவிழாவுடன் துவங்கி கடந்த இரு தினங்களாக சிறப்பாக நடைபெற்று வருகிறது. முதல் நாளிலேயே கொண்டாட்டங்களுடன் பிக்பாஸ் போட்டியாளர்கள் களமிறங்கினர்.

ஆட்டத்துடன் துவங்கிய நிகழ்ச்சி
ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என நேற்றைய தினம் இவர்களது செயல்பாடுகள் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்திருந்தது. எங்க ஏரியா என்று இவர்கள் ஆட்டம் போட்டாலும் அனைவரும் இணைந்தே இந்த பாட்டிற்கு நடனமாடினர். இந்தப் போட்டியில் முதல் போட்டியாளராக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார் பிரபல யூடியூபர் ஜிபி முத்து.

அறிவுரை வழங்கிய கமல்ஹாசன்
இவரிடம் பேசிய கமல்ஹாசன், இவர் தனது வட்டார வழக்கு சொற்களால் மற்றவர்களை திட்டக்கூடாது என்று பேசினார். ஆனாலும் இவரால் அதை அவ்வளவு சீக்கிரமாக நிறுத்த முடியவில்லை. வடிவேலு பாணியில் ஏ பேப்பயலே என்பன போன்ற வார்த்தைகளை இவர் பயன்படுத்தினார்.

அனைவரையும் கவரும் ஜிபி முத்து
ஜிபி முத்துதான் இந்த நிகழ்ச்சியின் ஹைலைட்டாக தொடர்ந்து இருந்து வருகிறார். பிக்பாஸ் வீட்டிற்குள் முதலில் நுழைந்து, உள்ளே யாருமே இல்லையே, என்றும் உடனடியாக யாரையாவது அனுப்பி வையுங்கள் என்றும் கமலிடம் இவர் கேட்டார். தொடர்ந்து அடுத்தடுத்த போட்டியாளர்கள் உள்ளே நுழைந்தவுடன் அனைவரிடமும் சகஜமாகிவிட்டார்.

மழையில் குத்தாட்டம்
தொடர்ந்து அனைவரிடமும் இணைந்து நடனமாடியது, மழையில் குத்தாட்டம் போட்டது, மற்றவர்களிடம் கள்ளம் கபடமின்றி பேசுவது, நாமினேஷனில், தனக்கு அனைவரையும் பிடித்துள்ளதாக கூறியது என தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார் ஜிபி முத்து. இதையடுத்து அவருக்கு ரசிகர்கள் தனியாக ஆர்மிக்களை துவங்கியுள்ளனர்.

ட்விட்டரில் தொடர் ட்ரெண்டிங்
இதுமட்டுமில்லாமல் ட்விட்டரிலும் இவர் தொடர் ட்ரெண்டிங்கில் உள்ளார். பிக்பாஸ் வீட்டில் மட்டுமில்லாமல் ரசிகர்களையும் கவர்ந்துள்ள ஜிபி முத்து, தனியாக டிக்டாக் செய்கிறார். காலையில் பாத்ரூமில் தன்னுடைய பிள்ளைகளுக்கும் தம்பிகளுக்கும் மெசேஜ் பாஸ் செய்கிறார். அவர்களிடம் சவால் விடுகிறார்.

பேய்க்கதையா.. ஐயோ வேணாம்
தொடர்ந்து கல்யாண சமையல் சாதம் என்று பாட்டு பாடுகிறார். உடனடியாக சக போட்டியாளர், சாப்பிட வருமாறும் இல்லையென்றால் டிபன் தீர்ந்துவிடும் என்றும் கூற, உடனடியாக சாப்பிட ஓடுகிறார். இதையடுத்து இரவில் பேய்க்கதை குறித்து ராம் ஆரம்பிக்க, இல்ல இப்ப வேணாம் காலையில வச்சிக்குவோம் என்று பயத்துடன் ஜிபி முத்து தடுத்ததும் சமூக வலைதளங்களில் பரபரப்பாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











