Bigg Boss: ச்சீ.. அசிங்கம் அசிங்கம்.. கம்ருதீன் எழுதிக்காட்டிய அந்த வார்த்தை.. விளாசும் ஃபேன்ஸ்!
சென்னை: பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி எந்த சீசனிலும் இல்லாத அளவில், இந்த சீசன் கடுமையான விமர்சனத்தை சந்தித்துள்ளது. ஆரம்பிக்கும் போதே போட்டியாளர்கள் சரியில்லை என பலர் விமர்சனம் செய்தனர். பிக் பாஸ் நிகழ்ச்சி குழந்தைகள் பார்க்கக்கூடிய நிகழ்ச்சியாக இல்லை என்று பலரும் புகார் கூறிவந்த நிலையில், விஜய் சேதுபதியே இந்த நிகழ்ச்சியை குழந்தைகள் பார்க்கக் கூடிய வகையில் இல்லை என வெளிப்படையாகவே கூறியிருந்தார்.
அதன் பிறகாவது போட்டியாளர்கள் தங்களை திருத்திக் கொண்டு போட்டியில் கவனம் செலுத்தி விளையாடுவார்கள் என பார்த்தால், அதன் பிறகும் விளையாட்டில் கவனம் செலுத்தாமல் காதல் கன்டென்ட் கொடுப்பதிலேயே அனைவரும் குறியாக இருக்கின்றனர். அதுவும் பார்வதி கம்ருதீனின் காதல் சேட்டைகள் தாங்க முடியவில்லை என இணையவாசிகள் கடுமையாக திட்டி வருகின்றனர்.

பார்வதியின் சேட்டை: பிக் பாஸ் வீட்டிற்கு சென்றதில் இருந்து பார்வதி, திவாகருடன் அண்ணன் அண்ணன் சுற்றி, இருவரும் தனி டீமாக இருந்தனர். ஆனால், கடந்த வாரம், நடந்த டாஸ்கின் போது, பார்வதிக்கும் திவாகருக்கு சண்டை ஏற்பட்டு இருவரின் டீம் பிரிந்தது. அதன் பின் பார்வதி, கம்ருதீன் மற்றும் வினோத்துடன் டீம் போட்டு சுற்றி திரிந்து கொண்டிருந்தார். அதுவரை அரோரா பின்னால் சுற்றிக்கொண்டிருந்த கம்ருதீன் பார்வதியிடம் சிரித்து சிரித்து பேசினார். இருவரும் 'எனக்கு சாப்பிட ரொம்ப பிடிக்கும் என்று' இரட்டை அர்த்தத்தில் பேசியதை பார்த்து பார்வையாளர்கள் கடுமையாக விமர்த்தனர்.
தப்பா தொட்டான்: இதையடுத்து, நேற்று பார்வதி, திவாகரிடம், கம்ருதீன் தொடுவது சரியில்லை, செய்கை சரியில்லை, அவன் அரோராவிற்கும் எனக்கும் ஒரே நேரத்தில் ரூட் விடுகிறான் என்றார். அப்போது திவாகர், ஆமாம் பாரும், அவன் பார்வையே சரியில்லை, நீ வருத்தப்படும் போதெல்லாம், உன்னை கட்டிப்பிடிப்பான் அதில் உண்மை இல்லை என்று திவாகரும் அவர் பங்குக்கு பேசி இருந்தார். இதைப்பார்த்தவர்கள், செய்வதை எல்லாம் செய்து கொண்டு கம்ருதீனை குறை சொல்வது சரியில்லை, ஒரு பெண்ணுக்கு Good touch... எது Bad touch... எது என்று நன்றாக தெரியும். அப்படி இருக்கும் போது கம்ருதீனிடம் நேரடியாகவே சொல்லி இருக்கலாமே என்கின்றனர்.
அசிங்கமான வார்த்தை: இது ஒரு பஞ்சாயத்து என்றால், அதை விட ஒரு அசிங்கத்தை செய்து இருக்கிறார் கம்ருதீன், அதாவது, பார்வதியின் அருகில் அமர்ந்திருந்த கம்ருதீன், கையில் ஹெச் என்று எழுதி காட்டினார். அப்படினா என்ன என்று பார்வதி கேட்க, அக்கம் பக்கம் திரும்பிப் பார்த்துவிட்டு கேமராவுக்கு தெரியாதபடி திரும்பிக் கொண்டு H O என்று எழுதி காட்டினார். இதைப்பார்த்த இணையவாசிகள் ஒருவேலை HOPE என்று எழுதி இருப்பார் என்றனர். ஆனால், அப்படி எழுதுவதாக இருந்தால் எதற்கு கம்ருதீன் அக்கம் பக்கம் திரும்பி பார்க்க வேண்டும், அதுவும் இல்லாம் எதற்கு பார்வதி, வெட்கப்பட்டு சிரிக்க வேண்டும். அப்படி என்றால், கம்ருதீன் HORN என்று எழுதி இருக்கிறார். கடைசியில் Y சேர்த்தால் அசிங்கமான அர்த்தம் வருகிறது. இதைத்தான் கம்ருதீன் எழுதிகாட்டி இருக்கிறார் என இணையத்தில் கடுமையாக இருவரையும் திட்டி தீர்த்து வருகின்றனர். இரண்டு பேருமே சரியில்லை இருவரையும் வெளியில் அனுப்ப வேண்டுமென இணையவாசிகள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











