முதல் சந்திப்பில் பாரதிராஜாவிடம் அதிர வைக்கும் ஒரு கேள்வியை கேட்டிருக்கிறார் ரேவதி

சென்னை: நடிகை ரேவதி கடைசியாக தனுஷ் நடித்திருந்த திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் ஒரு சிறிய காட்சியில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.

80, 90-களில் முன்னணி நடிகையாக இருந்த ரேவதி இன்றுவரை நிலைத்து நிற்கிறார் என்றால் அதற்கு காரணம் இயக்குநர்கள் பாரதிராஜா, பாலச்சந்தர் மற்றும் மணிரத்தினம் இயக்கத்தில் அவர் நடித்ததுதான்.

இந்நிலையில் தனது முதல் படமான மண் வாசனை திரைப்படத்தில் நடந்த பல சுவாரசியமான தகவல்களை ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

கல்லுக்குள் ஈரம்

கல்லுக்குள் ஈரம்

தனது முதல் படமான 16 வயதினிலே மூலமாகவே மொத்த தமிழ்நாட்டையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் பாரதிராஜா. முதல் 5 படங்களில் வெற்றி கண்டவர் ஆறாவதாக நடித்து இயக்கிய கல்லுக்குள் ஈரம் படத்தின் மூலம் முதல் தோல்வியை கண்டார். மண்வாசனை படத்திற்காக முதன்முறையாக ரேவதி பாரதிராஜாவை சந்தித்தபோது, இதற்கு முன் என் படங்களை பார்த்திருக்கிறாயா என்று கேட்டிருக்கிறார். அதற்கு கல்லுக்குள் ஈரம் மட்டும் பார்த்திருக்கிறேன் என்று சொல்ல, உனக்கு வேறு படமே கிடைக்கவில்லையா என்பது போல் பார்த்தாராம்.

முதல் அறை

முதல் அறை

பொதுவாகவே நடிகர் நடிகைகள் சரியாக நடிக்காவிட்டால் அவர்களை பாரதிராஜா அடிப்பார் என ஒரு பேச்சு உண்டு. இதை குறிப்பிட்டு ரேவத்தியிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு, மண் வாசனையில் ஒரே ஒரு காட்சியில் அறை வாங்கினேன். அதுகூட நான் சரியாக நடிக்கவில்லை என்று கோபத்தில் அவர் அறைந்ததாக எடுத்துக் கொள்ளவில்லை. எனக்கு ஊக்கம் அளிக்கும் விதத்தில்தான் அந்த அறை இருந்தது என்று ரேவதி கூறியிருக்கிறார். ஆனால், பாரதிராஜாவிற்கு முன்னரே பாண்டியனிடம் அறை வாங்கினாராம்.

பாண்டியனின் அறை

பாண்டியனின் அறை

ஒரு காட்சியில் பாண்டியன் ரேவதியை அறைய வேண்டுமாம். பாண்டியனுக்கும் அது முதல் படம் என்பதால் இரண்டு மூன்று டேக்குகள் சரியாக அடிக்காததால் கோபமான பாரதிராஜா பாண்டியனுக்கு ஒரு அறை கொடுத்து ஒழுங்காக நடிக்கச் சொன்னாராம். அந்த மொத்த கோபத்தை பாண்டியன் என் மீது காட்டும் வகையில் என்னை ஓங்கி அறைய, அந்தக் காட்சி ஓகே ஆனது. இன்னும் கூட அந்த ஷாட்டை படத்தில் பார்த்தால் அவரது நான்கு விரல்களும் எனது கன்னத்தில் பதிந்திருக்கும். அதனால், பாரதிராஜாவிடம் அடி வாங்குவதற்கு முன்னதாகவே பாண்டியனிடம் அடி வாங்கினேன் என்று ரேவதி கூறியுள்ளார்.

ரேவதியின் சந்தேகம்

ரேவதியின் சந்தேகம்

முதன் முறையாக பாரதிராஜாவை சந்தித்தபோது அவரிடம் ஒரு சந்தேகம் கேட்டுள்ளார் ரேவதி. சினிமாவில் கதாநாயகனும் கதாநாயகியும் கட்டிப்பிடிப்பது போல் காட்சி வருகிறதே, அது பொய் தானே. இருவருக்கும் இடையில் ஒரு தலகாணியை வைத்துக் கொண்டுதானே கட்டிப்பிடிப்பார்கள் என்று ஒரு கேள்வியை கேட்டாராம். பாரதிராஜாவிற்கு என்ன சொல்வதென்று தெரியாமல் சிரித்துவிட்டு, இந்த பெண்ணை எப்படி நடிக்க வைக்க போகிறேன் என்று உடனிருந்தவர்களிடம் கூறியதாக ரேவதி ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X