Nayanthara: தலைவலியாக மாறிய நயன்தாரா ஆவணப்படம்.. விடாது துரத்தும் வழக்கு.. உயர்நீதிமன்றம் உத்தரவு!

சென்னை: நடிகை நயன்தாரா 'Nayanthara beyond the fairy tale' என்ற ஆவணப்படத்தை தனது பிறந்த நாளில் நெட்ஃப்ளிக்ஸில் வெளியிட்டு இருந்தார். இந்த ஆவணப்படத்தை நெட்ப்ளிக்ஸ் தளம் 25 கோடிக்கு வாங்கி இருக்கும் நிலையில், அந்த ஆவணப்படத்தில் 'சந்திரமுகி' படத்தின் காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியுள்ளதாக படத்தின் பதிப்புரிமை பெற்ற நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

நடிகை நயன்தாரா தனது ஆவணப்படத்தில் நானும் ரவுடி தான் 3 வினாடி காட்சிகளை பயன்படுத்தியதால், நடிகர் தனுஷ் 10 கோடி நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருந்தார். இதற்கு நயன்தாரா, தனுசை கடுமையாக விமர்சனம் செய்து கடிதம் வெளியிட்டு இருந்தார். இது இணையத்தில் கடுமையாக பேசுபொருளானதைத் தொடர்ந்து, ஆவணப்படத்தில் காட்சிகளை பயன்படுத்த தடை விதிக்க கோரி, வொண்டர் பார் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் நயன்தாரா மற்றும் நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் இணைந்து தனுஷூக்கு எதிரான வழக்கை வாதிட்டு வருகிறார். அதில், நயன்தாரா தரப்பில் செல்போனில் இருந்த காட்சிகளை தான் நாங்கள் ஆவணப்படுத்தில் பயன்படுத்தினோம் என கூறிய நிலையில், இந்த வழக்கின் விசாரணை நிலுவையில் ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

Nayanthara documentary case
Photo Credit:

நயன்தாரா ஆவணப்படம்: இதையடுத்து 'Nayanthara beyond the fairy tale' என்ற ஆவணப்படத்தில் 'சந்திரமுகி' படத்தில் இடம் பெற்ற ஒரு சில காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதால், ரூ.5 கோடி நஷ்டஈடு வழங்க கோரி, 'சந்திரமுகி' படத்தின் பதிப்புரிமை பெற்றுள்ள ஏபி இன்டர்நேஷனல் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஆவண பட தயாரிப்பு நிறுவனமான டார்க் ஸ்டூடியோ மற்றும் நெட்பிளிக்ஸ் நிறுவனம் 2 வாரங்களில் பதிலளிக்க நீதிபதி உத்தரவிட்டு இருந்தார்.

உயர்நீதிமன்றம் உத்தரவு: இந்நிலையில, இந்த வழக்கு இன்று நீதிபதி செந்தில்குமார் முன் விசாரணைக்கு வந்த போது, பிரச்சனை தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக டார்க் ஸ்டூடியோ நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் மனுதாரர் தரப்பில் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக எந்த தகவலும் இல்லை எனவும் வழக்கில் இதுவரை பதில்மனு தாக்கல் செய்யவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. விசாரணையில் முடிவில், இந்த வழக்கு தொடர்பாக பதில் மனுத் தாக்கல் செய்ய ஆவணப்படத் தயாரிப்பு நிறுவனமான டார்க் ஸ்டூடியோ நிறுவனத்துக்கு அக்டோபர் 6ம் தேதி வரை அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X