»   »  விஜய், சூர்யாவை விட விஷால் எந்த வகையில் சிறந்தவர்?: உஷாரா பதில் சொன்ன சமந்தா

விஜய், சூர்யாவை விட விஷால் எந்த வகையில் சிறந்தவர்?: உஷாரா பதில் சொன்ன சமந்தா

Posted By:
Subscribe to Oneindia Tamil
விஷால் பற்றிய கேள்விக்கு நோ கமெண்ட்ஸ் என்று கூறி முடித்த சமந்தா.. ஏன் ??- வீடியோ

சென்னை: விஜய், சூர்யாவை விட விஷால் எந்த வகையில் சிறந்தவர் என்று கேள்விக்கு சமந்தா தெளிவாக பதில் அளித்துள்ளார்.

புதுமுகம் மித்ரன் இயக்கத்தில் விஷால், சமந்தா, அர்ஜுன் உள்ளிட்டோர் நடித்துள்ள இரும்புத்திரை படம் வரும் ஜனவரி மாதம் 26ம் தேதி வெளியாக உள்ளது.

இந்நிலையில் படம் குறித்து சமந்தா கூறியதாவது,

விஷால்

விஷால்

விஜய், சூர்யாவுடன் நடித்திருக்கிறீர்கள். அவர்கள் இரண்டு பேரை விட விஷால் எந்த வகையில் பெட்டர் என்ற கேள்விக்கு, உங்களுக்கு ஹெட்லைன் தேவைனா நான் வேற இன்டர்வியூ தருகிறேன். இந்த கேள்விக்கு நோ கமெண்ட்ஸ்னு சொல்லுவேன் என்றார்.

வாய்ப்பு

வாய்ப்பு

திருமணத்திற்கு பிறகு நடிகைகளுக்கு தென்னிந்திய படங்களில் வாய்ப்பு கிடைப்பது குறைவு. உங்களுக்கு எப்படி என்று கேட்கப்பட்டது. அதற்கு சமந்தா, எதுவுமே மாறவில்லை. கல்யாணமாகி மூன்று நாட்களிலேயே நான் ஷூட்டிங் வந்துவிட்டேன். திருமணமானதால் யாரும் என்னை வித்தியாசமாக பார்க்கவில்லை என்றார்.

வயது

வயது

விஜய், சூர்யாவுடன் நடித்தபோது காலையில் வந்தவுடன் சார், சார் என்று சொல்லிக் கொண்டிருப்பேன். இங்கு விஷால் என்னை விட வயது குறைவானவர் போன்று இருக்கிறார். ஏனென்றால் செட்டில் அவருக்கு அவ்வளவு எனர்ஜி உள்ளது.

பெஸ்ட்

பெஸ்ட்

இரும்புத்திரை படத்தில் விஷாலின் நடிப்பு தி பெஸ்ட் எனலாம். இந்த படம் ஹிட்டாகும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. மித்ரன் புதுமுக இயக்குனர் என்று சொல்லும்படியே இல்லை. அவ்வளவு திறமையானவர் என்றார் சமந்தா.

English summary
Samantha was asked in what way Vishal is better than Vijay and Suriya. She said that she is not going to answer this question. Samantha has paired up with Vishal in Irumbuthirai that is set to hit the screens for republic day.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X