அதிக வரி செலுத்தியவர்கள்...ரஜினிக்கு விருது வழங்கி கெளரவித்த வருமான வரித்துறை

சென்னை : தமிழ் திரையுலகில் டாப் ஹீரோவாக தொடர்ந்து கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கில் ரசிகர்கள் உள்ளனர். சூப்பர்ஸ்டார் என அழைக்கப்பட்ட காலம் போய் தற்போது ரஜினியை அவரது ரசிகர்கள் மட்டுமின்றி திரைத்துறையை சேர்ந்த பலரும் தலைவர் என சொல்ல துவங்கி விட்டனர்.

இவர் நடிப்பில் தற்போது ஜெயிலர் படம் தயாராகி வருகிறது. நெல்சன் இயக்க உள்ள இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. வருகிற ஆகஸ்ட் மாதம் 3-ந் தேதி ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஜெயிலர் படத்தின் முதல் கட்ட ஷுட்டிங்கிற்காக ஐதராபாத்தில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டுள்ளதாகவும், சமீபத்தில் தான் ஜெயிலர் படத்திற்காக டெஸ்ட் ஷுட்டை ரஜினி நிறைவு செய்ததாகவும் சொல்லப்படுகிறது. கையில் ஆயுதத்துடன் இருக்கும் ரஜினியின் க்ளிம்ப்ஸ் விரைவில், அதாவது ஷுட்டிங் துவங்கும் முன் வெளியிடப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.

ஜெயிலர் படத்திற்கு ரஜினியின் சம்பளம்

ஜெயிலர் படத்திற்கு ரஜினியின் சம்பளம்

ஜெயிலர் படத்துக்காக நடிகர் ரஜினிகாந்த் ரூ.150 கோடி சம்பளமாக பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதன்மூலம் தமிழ் திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக ரஜினி விளங்குகிறார். இந்நிலையில், தற்போது நடிகர் ரஜினிகாந்துக்கு வருமான வரித்துறை சார்பில் விருது ஒன்று வழங்கப்பட்டு உள்ளது.

ரஜினிக்கு வருமான வரித்துறை விருது

ரஜினிக்கு வருமான வரித்துறை விருது

வருமான வரி தினமான இன்று,வருமான வரித்துறை சார்பில் விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. இதில் தமிழ்நாட்டில் அதிகபட்சமாக வருமான வரி செலுத்திய நடிகர் ரஜினிகாந்திற்கு விருது வழங்கப்பட்டது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட புதுச்சேரி கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் இந்த விருதை வழங்கினார்.

 ரஜினி சார்பில் பெற்றுக் கொண்ட ஐஸ்வர்யா

ரஜினி சார்பில் பெற்றுக் கொண்ட ஐஸ்வர்யா

நடிகர் ரஜினிகாந்த் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாததால், அவருக்கு பதில் அவரது மூத்த மகள் ஐஸ்வர்யா இந்த விருதினை பெற்றுக்கொண்டார். இந்த விழாவில் பேசிய தமிழிசை, "பிரதமர் மோடியின் தொடர் முயற்சியால், பொதுமக்கள் முறையாக வரி செலுத்த முன்வந்துள்ளதாக தெரிவித்தார். அனைவரும் கண்டிப்பாக அரசுக்கு வரி செலுத்த வேண்டும் என கேட்டுக்கொண்ட அவர், வரி செலுத்தாவிட்டால் நாம் இருப்பதையும் இழந்துவிடுவோம் என பேசினார்.

Recommended Video

Rajini's Kutti Story - நிம்மதியாக இருந்தாதான் Focus-ஆக இருக்க முடியும் - ரஜினிகாந்த்
டிரெண்டிங்கில் அசத்தும் ரசிகர்கள்

டிரெண்டிங்கில் அசத்தும் ரசிகர்கள்

ரஜினிக்கு விருது கிடைத்துள்ளதை கொண்டாடும் விதமாக ட்விட்டரில் #Rajinikanth ஹேஷ்டேக் டிரெண்டாக்கப்பட்டு வருகிறது. இதில் பலரும் ரஜினியை பாராட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X