»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

வருமான வரி வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று நடிகை ஜெயபிரதா தாக்கல் செய்த மனுவை விசாரிக்கவேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகை ஜெயபிரதா, அவரது சகோதரர்கள் ராஜ்பாபு, ராம்குமார் ஆகியோர் மீது ரூ.3 கோடிக்கு வருமான வரிஏய்ப்பு தொடர்பாக வருமான வரி துறை எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

1985ம் ஆண்டில் தொடரப்பட்ட இந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் இருந்து தன்னைவிடுவிக்க வேண்டும் என்று அதே நீதிமன்றத்தில் ஜெயபிரதா மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவும்நிலுவையில் தான் உள்ளது.

இந் நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜெயபிரதா ஒரு மனு தாக்கல் செய்தார். தன்னுடைய மனுவைஉடனடியாக விசாரிக்கும்படி எழும்பூர் நீதிமன்றத்திற்கு உத்தரவிடும்படி கோரினார். அதை ஏற்று உயர் நீதிமன்றநீதிபதி அக்பர் பாஷா காதிரி, ஜெயபிரதா தாக்கல் செய்த மனுவை உடனடியாக விசாரித்து தீர்ப்பு வழங்குமாறுஎழும்பூர் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டார்.

Read more about: actress, hindi, jayapradha
Please Wait while comments are loading...