»   »  'பல்லு படாம பார்த்துக்கணும்'... படையெடுக்கும் பலான தலைப்புகள்!

'பல்லு படாம பார்த்துக்கணும்'... படையெடுக்கும் பலான தலைப்புகள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இதுவரை குடும்பத்தை சினிமாவுக்கு கூட்டிப்போக ஒன்றுக்கு நான்கு முறை யோசித்து, நல்ல படமாக இருந்தால் மட்டுமே கூட்டிப் போகலாம் என்று ஒரு நிலை இருந்தது. இனி அந்த கவலையே வேண்டாம் போல... தமிழ் சினிமாவில் வைக்கப்படுகிற டைட்டில்களை குடும்பத்தில் சொன்னாலே நம்மை ச்சீ...பொறுக்கி என்று அடிப்பார்கள்.

நாளை மறுநாள் ஹரஹர மஹாதேவகி என்று ஒரு படம் வெளியாகவிருக்கிறது. படம் முழுக்கவே டபுள் ட்ரிபிள் ஸ்ட்ரெய்ட் மீனிங் வசனங்களாக நிறைந்திருக்கின்றன. அடுத்ததாக இதே இயக்குநர் இதே டீமுடன் 'இருட்டு அறைக்குள் முரட்டுக்குத்து' என்று ஒரு படம் எடுக்கப்போகிறாராம். இது பேய் படமாம். ஓவியாதான் நாயகி.

Increasing double meaning titles in Kollywood

அடுத்து ஓவியா நடிக்கும் இன்னும் ஒரு படத்திற்கு தலைப்பாக 'பல்லு படாம பார்த்துக்கணு'மாம். அதாவது ஸோம்பி எனப்படும் ரத்தக்காட்டேறி வகை படமாம். எனவேதான் இந்த தலைப்பு என்று ஒரு விளக்கம் தருகிறார்கள்.

தலைப்பை விட அதுக்கு ஒரு விளக்கம் கண்டுபிடிக்கிறீங்களே அதுக்கே ஒரு ஆஸ்கர் கொடுக்கலாம் பாஸ்...!

English summary
Due to removal of Tax excemption now a lot of double meaning titles coming in Tamil films.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil