»   »  பொறுப்பற்ற அரசு... பேராசை கொண்ட தியேட்டர்கள்.. போங்கய்யா நீங்களும் உங்க சினிமாவும்!

பொறுப்பற்ற அரசு... பேராசை கொண்ட தியேட்டர்கள்.. போங்கய்யா நீங்களும் உங்க சினிமாவும்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

எத்தனை மொழிகளில், வித விதமாகச் சொன்னாலும் திரையரங்குகள் டிக்கெட் உயர்த்துவதும் அதை அரசே ஊக்குவிப்பதும் கடைந்தெடுத்த மக்கள் விரோதம்.

சினிமாதானே... பார்க்கலன்னா குடியா முழுகிடும்... கட்டணம் அதிகம்னு நினைச்சா பாக்காம போறதுதானே என்று வழக்கம்போல சிலர் அறிவுஜீவித்தனம் காட்டக்கூடும். இவர்களால் நாட்டுக்கும பிரயோஜனமில்லை, சினிமாவுக்கும் நன்மையில்லை. இவர்களெல்லாம் தியேட்டர் பக்கம் ஒன் போகக் கூட ஒதுங்காதவர்கள்.

Increasing ticket pricess is surely an anti - public

மக்களுக்கு இன்று வெவ்வேறு பொழுதுபோக்குகள் இருந்தாலும், சினிமாதான் பிரதானம். ஊடகங்களில் சினிமா செய்திகளுக்குத்தான் முதலிடம். திருட்டு வீடியோ வந்து சினிமாவை பாதித்தாலும், இன்னும் நாயகர்கள் 40- 50 கோடிகளில் சம்பளம் வாங்கக் காரணம், சினிமா இன்னமும் தன் பிடியை மக்களிடம் இழக்காமல் இருப்பதுதான்.

ஆனால் இனியும் இந்த நிலை தொடரும் என்று சொல்வதற்கில்லை. காரணம், பொழுதுபோக்கின் விலை அதிகரிக்க அதிகரிக்க அது மக்களிடமிருந்து அந்நியமாகிவிடும். தமிழ் சினிமாவை மக்களிடமிருந்து அந்நியப்படுத்தும் வேலையைத்தான் அரசும் திரையரங்க உரிமையாளர்களும் செய்து கொண்டிருக்கின்றன.

சினிமாவுக்கு ஜிஎஸ்டி வரியை விதித்த தமிழக அரசு அதனை மக்களிடமே வசூலித்துக் கொள்ளலாம் என்று கூறிவிட, 18 முதல் 28 சதவீதம் வரை விலையை உயர்த்திவிட்டன தியேட்டர்கள். கூடவே அங்கு வாங்கும் தின்பண்டங்களுக்கும் மனசாட்சியே இல்லாமல் ஜிஎஸ்டி வசூலிக்கிறார்கள். கேட்டால் ஏகத்துக்கும் சண்டை, கைகலப்புதான் மிச்சம்.

இப்போது உள்ளாட்சி வரி விதித்துள்ளது தமிழக அரசு. இந்தத் தொகையை மக்களிடம் வசூலிக்கும் கட்டணத்திலிருந்தே பிடித்து அரசுக்கு செலுத்த வேண்டும் என சொல்லக் கூடத் தோன்றவில்லை இந்த அரசுக்கு. டிக்கெட் விலையை 25 சதவீதம் வரை உயர்த்தி, அதிலிருந்து உள்ளூர் வரியைச் செலத்தலாம் என அரசு அறிவித்த சில நிமிடங்களிலேயே டிக்கெட் விலை மீண்டும் உயர்ந்துவிட்டது.

இத்தனை ஆண்டுகள் வரி விலக்கு என்ற பெயரில் கொள்ளையடித்து வந்தார்கள். வழக்குகூட தொடரப்பட்டது. ஆனால் வரி விலக்கு மக்களுக்கு அல்ல, சினிமாவுக்குத்தான் என்று வம்படியாய்ச் சொல்லி முழுசாக அனுபவித்தனர். இப்போது தங்கள் மீது விதிக்கப்பட்ட வரியை மக்களைக் கட்டச் சொல்கிறார்கள் சினிமாக்காரர்கள்.

அரசும் மக்களுக்கானதாய் இல்லை... சினிமா தியேட்டர்களும் மக்களைப் பற்றி யோசிப்பவர்களாக இல்லை. பலனை விரைவில் தியேட்டர்கள் அனுபவிக்கும்!

English summary
Both the Govt and Theater owners have hiking the ticket prices continuously against the people.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil