»   »  பப்ளிக் ஃபிகர் தான் பப்ளிக் ப்ராபர்ட்டி அல்ல: அத்துமீறிய ரசிகரை திட்டிய நடிகை

பப்ளிக் ஃபிகர் தான் பப்ளிக் ப்ராபர்ட்டி அல்ல: அத்துமீறிய ரசிகரை திட்டிய நடிகை

Posted By:
Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: அனுமதி இல்லாமல் தோளில் கையை போட்ட ரசிகர் மீது நடிகை வித்யா பாலன் கோபப்பட்டார்.

பாலிவுட்டில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளவர் வித்யா பாலன். அவர் தற்போது பேகம் ஜான் படத்தில் விபச்சார தொழில் நடத்தும் இடத்தின் தலைவியாக நடித்துள்ளார்.

படத்தின் டிரெய்லரை பார்த்தவர்கள் வித்யாவின் நடிப்பை புகழ்ந்துள்ளனர்.

கொல்கத்தா

கொல்கத்தா

வித்யா மற்றும் பேகம் ஜான் படத்தின் இயக்குனர் ஸ்ரீஜித் முகர்ஜி, தயாரிப்பாளர் ஆகியோர் பட வேலை காரணமாக கொல்கத்தா சென்றுள்ளனர். அவர்கள் கொல்கத்தா விமான நிலையத்தில் நின்றுள்ளனர்.

செல்ஃபி

செல்ஃபி

வித்யாவை விமான நிலையத்தில் பார்த்த ரசிகர் ஒருவர் செல்ஃபி எடுக்க விரும்ப அவரும் அனுமதி அளித்துள்ளார். ஆனால் அந்த ரசிகரோ வித்யாவுக்கு மிக அருகில் வந்து நின்றதோடு அனுமதியில்லாமல் அவர் தோளில் கையை போட்டார்.

கோபம்

கோபம்

அனுமதியில்லாமல் தொடுவது சரியில்லை என்று வித்யா அந்த ரசிகரிடம் கூறியுள்ளார். உடனே அந்த ரசிகர் மீண்டும் ஒரு செல்ஃபி எடுக்கிறேன் என்ற பெயரில் வித்யாவை தொட்டுள்ளார்.

வித்யா

வித்யா

சொல்லியும் வேண்டும் என்றே தன்னை தொட்டதால் வித்யா கோபம் அடைந்து அங்கிருந்து சென்றுவிட்டார். நாங்கள் பிரபலங்கள் தான் ஆனால் பொது சொத்து அல்ல என்று வித்யா தெரிவித்துள்ளார்.

English summary
An indecent fan has made Vidya Balan uncomfortable by putting his hands on her shoulder in the name of taking a selfie.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil