»   »  தமிழ்ப்படங்களை கவிழ்த்து வசூலை வாரிக்குவித்த 'இண்டிபெண்டென்ஸ் டே'

தமிழ்ப்படங்களை கவிழ்த்து வசூலை வாரிக்குவித்த 'இண்டிபெண்டென்ஸ் டே'

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஹாலிவுட் படமான இண்டிபெண்டென்ஸ் டேக்கு முன்னால், அம்மா கணக்கு, மெட்ரோ மற்றும் ராஜா மந்திரி படங்கள் எடுபடவில்லை.

கடந்த வாரம் அம்மா கணக்கு, மெட்ரோ என சிறு பட்ஜெட் படங்கள் மட்டுமே வெளியாகின. பெரிய பட்ஜெட், பெரிய நடிகர்கள் படங்கள் எதுவும் வெளியாகவில்லை.

தற்போது இப்படங்களின் சென்னை வசூல் விவரங்கள் வெளியாகியுள்ளன. அவற்றை இங்கே பார்க்கலாம்.

இண்டிபெண்டென்ஸ் டே

இண்டிபெண்டென்ஸ் டே

ஹாலிவுட் படமான இண்டிபெண்டென்ஸ் டே முதல் வார முடிவில் 81.97 லட்சங்களை வசூலித்து முதலிடத்தில் இருக்கிறது. முதல் வாரத்தில் காஞ்சூரிங் 2 அளவுக்கு வசூலிக்கவில்லை என்றாலும், விரைவில் காஞ்சூரிங் 2 வின் சென்னை வசூலை இப்படம் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அம்மா கணக்கு

அம்மா கணக்கு

தனுஷ் தயாரிப்பில் அமலாபால், ரேவதி, சமுத்திரக்கனி நடிப்பில் வெளியான அம்மா கணக்கு 25.92 லட்சங்களையும், பாபி சிம்ஹாவின் மெட்ரோ 25.15 லட்சங்களை வசூலித்து பாக்ஸ் ஆபீஸில் 2 மற்றும் 3 வது இடங்களைக் கைப்பற்றியுள்ளன.

எனக்கு இன்னொரு பேர் இருக்கு

எனக்கு இன்னொரு பேர் இருக்கு

ஜி.வி.பிரகாஷின் எனக்கு இன்னொரு பேர் இருக்கு 24.63 லட்சங்களை வசூலித்து 4 இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. 2 வாரங்கள் முடிவில் இப்படம் 1.33 கோடிகளை வசூலித்து சாதனை புரிந்துள்ளது.

பைண்டிங் டோரி

பைண்டிங் டோரி

ஹாலிவுட் படமான பைண்டிங் டோரி 18.62 லட்சங்களுடன் 5 வது இடத்தையும், சுந்தர்.சி நடிப்பில் வெளியான முத்தின கத்தரிக்கா 8.87 லட்சங்களுடன் 6 வது இடத்தையும் தக்க வைத்துக் கொண்டுள்ளன.

ராஜா மந்திரி

ராஜா மந்திரி

மெட்ரோ, அம்மா கணக்கு படங்களுடன் வெளியான ராஜா மந்திரி 9 லட்சங்களை மட்டுமே வசூலித்துள்ளது. இதேபோல பாலிவுட் படமான உத்தா பஞ்சாப் 4.83 லட்சங்களை வசூலித்து பாக்ஸ் ஆபீஸில் கடைசி இடத்தைப் பிடித்துள்ளது.

English summary
Independence Day Beats Amma Kanakku, Metro in Chennai Box Office.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil