»   »  சமூகவலைதளத்தில் பிரபலமாக உலா வரும் வாரிசுகள்... மயிலு மகள் தான் டாப்!

சமூகவலைதளத்தில் பிரபலமாக உலா வரும் வாரிசுகள்... மயிலு மகள் தான் டாப்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: அம்மாக்களைப் பார்த்து அம்மாக்களும், அப்பாக்களைப் பார்த்து அப்பாக்களும் கெட்டது போக இப்போது பிள்ளைகளைப் பார்த்து பிள்ளைகள் கெட்டுப் போக ஆரம்பித்துள்ளனர்.. என்ன புரியலையா... பிரபலங்களின் வாரிசுகள்தான் இந்தக் காலத்து இளைஞர்களுக்கும், இளம் பெண்களுக்கும் ரோல் மாடல்களாகியுள்ளனர்.

ஸ்ரீதேவி மாதிரி அழகாக இருக்க வேண்டும் என்று கொஞ்ச காலத்துக்கு முன்பு வரை இளம் பெண்களாக இருந்தவர்கள் நினைத்து வந்தனர். இப்போது ஸ்ரீதேவி மகளைப் பார்த்து இந்த முன்னாள் இளம் பெண்களின் மகள்கள் வாயைப் பிளந்து வருகின்றனராம்.

டெல்லியைச் சேர்ந்த 12 வயதேயான சோனம் திவாரி என்ற மாணவி, தனக்கு ஸ்ரீதேவி மகள் குஷியைப் போலவே மூக்கு வேண்டும். எனவே அறுவைச் சிகிச்சை செய்ய அனுமதியுங்கள் என்று கேட்டு தனது பெற்றோரை அதிர வைத்துள்ளாராம்.

India's Teens Have New Icons -- Bollywood's High-Flying Star Kids On Instagram

குஷி...

குஷிதான் இன்று சமூக வலைதளத்தில் மிகப் பிரபலமகாக உள்ள வாரிசு ஆவார். இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு 38,000 பாலோயர்கள் உள்லனர். டிவிட்டரில் 2000 பாலோயர்கள் உள்ளனர். இப்போது குஷியும் ஒரு ஸ்டாராகி விட்டார்.. சினிமாவில் நடிக்காமலேயே.

ஜான்வி...

ஏற்கனவே அவரது சகோதரி ஜான்வியும் சமூக வலைதளத்தில் பிரபலமாக உள்ளார். நடிக்க வரப் போவதாகவும் அவர் மீது எதிர்பார்ப்புகள் ஏகமாக உள்ளன. இந்த நிலையில் குஷி படு வேகமாக பிரபலமாகி விட்டார்.

ரசிகர்கள்...

குஷி என்ன செய்தாலும், என்ன படம் போட்டாலும், அதைப் பார்த்து ரசிக்க பெரும் கூட்டம் கூடிக் கிடக்கிறது. எல்லாமே அவரது வயதையொத்தி குட்டீஸ்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் எல்லாம் குஷி என்ன செய்தாலும் அதை பாலோ செய்ய ஆரம்பித்து விடுகின்றனராம்.

எல்லாமே டிரெண்ட் தான்...

அவரது ஹேர்ஸ்டைல், முக அலங்காரம், டிரஸ்ஸிங் என எல்லாமே டிரெண்டாகி வருகிறதாம். யாருமே பார்த்ததும் பிடித்து விடும் வகையில் குஷியின் முகம் உள்ளதாக நீத்தி ஸ்ரீவித்சவா என்ற பெண் (22) கூறுகிறார். இவர் குஷியின் அக்கா ஜான்வியின் ரசிகர் கிளப்பில் உறுப்பினராம்!

பாலோயர்கள் அதிகம்...

என்ன விசேஷம் என்றால் குஷியை விட ஜான்விக்கு பாலோயர்கள் கம்மிதானாம். குஷி அளவுக்கு ஜான்வி தடாலடியாக எதையும் செய்வதில்லை. அமைதியாக வலம் வருபவர் ஜான்வி.

இப்படி தான் இருக்கணும்...

இப்போது உள்ள இளம் பெண்கள் மத்தியில் குஷி போல இருக்க வேண்டும் என்பதே பேச்சாக உள்ளதாம். குஷி பக்கத்தைத் தான் நிறைய பேர் ஆவலுடன் மொய்த்தும் வருகின்றனராம்.

பூஜா பேடியின் மகள்...

ஆனால் குஷி மட்டுமல்ல வேறு சில பிரபல வாரிசுகளும் புகழ் பெற்று தான் காணப்படுகின்றனர். பூஜா பேடியின் 17வயது மகள் ஆலியா எப்ராகிம். பேஸ்புக்கில் பிலரபலமாக வலம் வருபவர். இவரது போஸ்ட்டுகள் எல்லாம் பயங்கரமாக இருக்கும். பட்டையைக் கிளப்பும்.

நடிகர்களின் மகன்கள்...

சங்கி பான்டேவின் மகன் ஆஹான் பாண்டேவுக்கு இன்ஸ்டாகிராமில் 22,000 பாலோயர்கள் உள்ளனர். சைப் அலிகானின் 15 வயது மகன் இப்ராகிம் அலி கானும் பிரபலமாக வலம் வருகிறார்.

அமிதாப் பேத்தி...

அதேபோல அமிதாப் பச்சனின் 17 வயது பேத்தி நவ்யா நந்தனும் ஸ்டைல் ஐக்கான் ஆக மாறி வலம் வருகிறார். இவருக்கு பேஸ்புக்கில் 57,000 பாலோயர்கள் உள்ளனர். டிவிட்டரில் 6000 பாலோயர்கள் உள்ளனர்.

கூட்டம்...

இந்த சின்னஞ் சிறிசுகள் எல்லாம் தெரிந்த விவரஸ்தர்களாக இருப்பதால் இவர்களைச் சுற்றி தனிக் கூட்டம் எப்போதும் ஜே ஜே என்றே காணப்படுகிறது. இவர்களைப் பின்பற்றி நடக்கவும் ஒரு ஆர்வம் காணப்படுகிறது.

ம்ம்... பிள்ளைங்கெல்லாம் வளர ஆரம்பிச்சுட்டாங்க!

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary
    Sridevi's 14-year-old daughter Khushi Kapoor. She's definitely not 'just another Bollywood star's kid'. With 38,000 followers on Instagram and 2,000 followers on Twitter, Khushi, much like her older sister Jhanvi, is now a star in her own right.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more