கால் உடைந்தது உண்மையா? இந்தியன் 2 விபத்தின் போது சங்கர் எங்கே இருந்தார்? பின்னணி என்ன?

இந்தியன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட கிரேன் விபத்தில் இயக்குனர் சங்கரின் கால் உடைந்ததாக வெளியாகும் செய்திகளுக்கு படக்குழுவை சேர்ந்த சிலர் விளக்கம் அளித்துள்ளனர்.

Recommended Video

Indian 2 படப்பிடிப்பில் கிரேன் விழுந்து விபத்து

சென்னை: இந்தியன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட கிரேன் விபத்தில் இயக்குனர் சங்கரின் கால் உடைந்ததாக வெளியாகும் செய்திகளுக்கு படக்குழுவை சேர்ந்த சிலர் விளக்கம் அளித்துள்ளனர்.

இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் விழுந்து விபத்து ஏற்பட்டது. சென்னை அருகே பூந்தமல்லி நசரத்பேட்டையில் உள்ள தனியார் படப்பிடிப்பு தளத்தில் ராட்சத கிரேன்கள் மூலம் பிரம்மாண்ட செட் அமைக்கும் பணிகள் நடைபெற்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

உதவி இயக்குனர் கிருஷ்ணா, ஆர்ட் உதவியாளர் சந்திரன், தயாரிப்பு உதவியாளர் மது ஆகியோர் இந்த விபத்தில் பலியானார்கள். அதேபோல் இந்த வவிபத்தில் 10 பேர் காயம் அடைந்தனர்.

சங்கர் காயம்

சங்கர் காயம்

இந்த நிலையில் இந்த விபத்தில் இயக்குனர் சங்கரும் காயம் அடைந்தார் என்று செய்திகள் வெளியானது. நேற்று இரவுதான் இந்த விபத்து ஏற்பட்டது. அப்போது படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர் சங்கர் இருந்தார். அவரின் காலிலும் கிரேன் விழுந்துவிட்டது. அப்போது அவருக்கும் காலில் காயம் ஏற்பட்டது. இதனால் அவருக்கு பெரிய அளவில் எலும்பு முறிவு கூட ஏற்பட்டது என்று செய்திகள் வெளியானது.

என்ன செய்திகள்

என்ன செய்திகள்

இந்த நிலையில் இது முழுக்க முழுக்க உண்மை கிடையாது என்று படக்குழு தெரிவித்துள்ளது. நேற்று விபத்து நடந்த போது சங்கர் அந்த இடத்தில் இருந்தார். ஆனால் அவருக்கு பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை. அவர் கிரேன் விழுந்த இடத்திற்கு அருகில் இருந்தார். ஆனால் அவரின் காலில் கிரேன் விழவில்லை. அவருக்கு கால் உடைந்ததாக வரும் செய்திகளில் உண்மை கிடையாது.

ஆனால் உண்மை

ஆனால் உண்மை

அவருக்கு லேசான சிராய்ப்பு காயங்கள் மட்டுமே ஏற்பட்டது. இதனால் பொய்யான செய்திகளை மக்கள் யாரும் நம்ப வேண்டாம். உதவி இயக்குனர்கள் வேறு சிலருக்கு கடுமையாக காயம் பட்டு இருக்கிறது. மொத்தம் 10 பேருக்கு காயம் பட்டு இருக்கிறது. இவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. சிலருக்கு தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று கூறியுள்ளனர்.

படப்பிடிப்பு பாதிப்பு

படப்பிடிப்பு பாதிப்பு

இந்த விபத்தால் படப்பிடிப்பு பாதிக்க வாய்ப்புள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்னும் 2-3 வாரங்களுக்கு படப்பிடிப்பு நடக்க வாய்ப்பில்லை என்கிறார்கள். படத்தின் உதவி இயக்குனர் இறந்தது படக்குழுவை பெரிய அளவில் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. அதேபோல் படத்தின் தயாரிப்பு உதவியாளர் மது இறந்ததும் படக்குழுவை பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X