Don't Miss!
- Sports
அதனால் தான் அவர் கிங் கோலி.. என்னுடைய 10 வயது உனக்கு தான்.. சுப்மன் கில்லை உற்சாகப்படுத்திய கோலி
- News
ஈரோடு மாநகராட்சியில் குறைகள் இருக்கிறது! ஒளிவு மறைவின்றி ஒப்புக்கொண்ட அமைச்சர் முத்துசாமி!
- Lifestyle
தினமும் ஒரு கையளவு பாதாம் சாப்பிட்டு ஒரு டம்ளர் பால் குடிப்பதால் பெறும் நன்மைகள் குறித்து தெரியுமா?
- Finance
அதானி எண்டர்பிரைசஸ்-க்கு அடுத்த பாதிப்பு.. Dow Jones நிலைத்தன்மை குறியீட்டில் இருந்து நீக்கம்..!
- Technology
iPhone: முழுக்க முழுக்க ஐபோனில் படமாக்கப்பட்ட இந்திய திரைப்படம்; யூட்யூப்பில் வெளியானது!
- Automobiles
மைலேஜில் மாருதியை என்ன சேதினு கேக்க போகும் டாடா கார்கள்! இவ்ளோ சீக்கிரமா இது நடக்கும்னு யாருமே நெனைக்கல!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
பிக்பாஸில் கவனம் செலுத்தும் கமல்ஹாசன்.. இந்தியன் சூட்டிங் பாதிப்பு!
சென்னை : நடிகர் கமல்ஹாசன் விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்த பிராஜெக்ட்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
அடுத்ததாக சிவகார்த்திகேயன் -சாய் பல்லவி ஜோடியாக நடிக்கும் படத்தை தயாரிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.
அதேபோல ஷங்கர் இயக்கத்தில் தற்போது இந்தியன் 2 படத்தின் சூட்டிங்கில் இணைந்துள்ளார்.
பிக்பாஸ்
சீசன்
6
நிகழ்ச்சியை
தொடர்ந்து
பார்க்கலாம்..
கமல்ஹாசன்
வெளியிட்ட
அடுத்த
ப்ரமோ!

கமலின் விக்ரம் படம்
நடிகர் கமல்ஹாசன் 3 ஆண்டுகால இடைவெளிக்கு பிறகு விக்ரம் படத்தில் நடித்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்தப் படம் ரிலீசானது. இந்தப் படம் சர்வதேச அளவில் சிறப்பான விமர்சனங்களையும் வசூலையும் குவித்தது. சர்வதேச பாக்ஸ் ஆபீசில் 420 கோடி ரூபாய்க்கும் அதிகமான வசூலை இந்தப் படம் தாண்டியுள்ளது.

இந்தியன் 2 சூட்டிங்கில் கமல்
இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தின் சூட்டிங்கில் இணைந்துள்ளார் கமல்ஹாசன். கடந்த சில தினங்களுக்கு முன்பு சூட்டிங்கில் கமல் இணைந்த நிலையில், படத்தின் முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட்டன. அவரது கெட்டப்பும் சமீபத்தில் வெளியாகி வைரலானது.

குதிரை சவாரியில் காஜல் அகர்வால்
முன்னதாக இந்தப் படத்தின் சூட்டிங்கில் காஜல் அகர்வால் உள்ளிட்டவர்களும் பங்கேற்ற நிலையில், நேற்றைய தினம் காஜலின் சூட்டிங் நிறைவடைந்தது. சமீபத்தில் அவர் குதிரையில் அமர்ந்தபடி இருந்த காட்சிகளின் வீடியோ வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

கமலின் முதல்கட்ட சூட்டிங் நிறைவு
இன்றைய தினம் கமல்ஹாசன் சம்பந்தப்பட்ட காட்சிகளின் முதல்கட்ட சூட்டிங் நிறைவடையவுள்ள நிலையில், இத்துடன் படத்தின் இந்த ஷெட்யூலுக்கான சூட்டிங் நிறைவு பெற்றுள்ளது. இதையடுத்து இந்தப் படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங் ஒருமாதம் கழித்தே துவங்கும் என்று படக்குழு தரப்பில் அப்டேட் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிக்பாஸ் சீசன் 6 சூட்டிங்கில் கமல்
இந்த இடைப்பட்ட காலகட்டத்தில் நடிகர் கமல்ஹாசன், விஜய் டிவியின் பிக்பாஸ் சூட்டிங்கில் கவனம் செலுத்தவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே ராம்சரணின் ஆர்சி15 படத்தின் சூட்டிங்கில் ஷங்கர் இணையவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் இந்தியன் 2 மற்றும் ஆர்சி15 என இரண்டு படங்களின் சூட்டிங்கிலும் கவனம் செலுத்தவுள்ளார் ஷங்கர்.

அக்டோபர் 9ம் தேதி துவங்கும் பிக்பாஸ் சீசன் 6
பிக்பாஸ் நிகழ்ச்சியின் கடந்த 5 சீசன்களை வெற்றிகரமாக முடித்த கமல்ஹாசன் தற்போது அதன் 6வது சீசனையும் தொகுத்து வழங்கவுள்ளார். இதன் ப்ரமோக்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. வரும் அக்டோபர் 9ம் தேதி இந்த சீசன் துவங்கவுள்ளது. இதற்கான பணிகளில்தான் தற்போது கமல் கவனம் செலுத்தவுள்ளார்.