»   »  'இந்தியன் 2': ஆரம்பமே அமர்க்களமாக இருக்கே ஆண்டவரே...#Indian2

'இந்தியன் 2': ஆரம்பமே அமர்க்களமாக இருக்கே ஆண்டவரே...#Indian2

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியன் 2 படத்தின் ஆரம்பமே அமர்க்களமாக துவங்கியுள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாஸன் அப்பா, மகன் என்று இரண்டு வேடத்தில் நடித்து சூப்பர் ஹிட்டான இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கிறார்கள்.

இதற்கான அறிவிப்பு பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஃபினாலே நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது.

தைவான்

இந்தியன் 2 படத்தின் அறிமுகம் தைவானில் நடந்துள்ளது. ஹீலியம் பலூனில் இந்தியன் 2 என்று ஆங்கிலம் மற்றும் தமிழில் எழுதி பறக்கவிட்டுள்ளனர். அந்த வீடியோவை ஷங்கர் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

ஷங்கர்

ஷங்கர்

கமல் அரசியலுக்கு வந்துள்ள நேரத்தில் இந்தியன் 2 படத்தில் நடிக்க உள்ளார். 2.0 பட ரிலீஸுக்கு பிறகு இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங்கை துவங்குகிறார் ஷங்கர்.

பிப்ரவரி

பிப்ரவரி

கமல் ஹாஸன் பிப்ரவரி மாதம் 21ம் தேதி தனது கட்சியின் பெயரை அறிவிக்க உள்ளார். ஏப்ரல் மாதத்திற்கு பிறகு அவர் இந்தியன் 2 படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது.

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

இந்தியன் படத்தில் இந்தியன் தாத்தாவாக சும்மாவே அதிரவிட்டார் கமல். இந்நிலையில் அரசியலுக்கு வந்துள்ள அவர் இந்தியன் 2 படத்தில் தெறிக்கவிடுவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

English summary
Director Shankar has posted a video on twitter in which he was seen flying a helium balloon in Taiwan informing the world about the launch of his upcoming movie with Kamal Haasan titled Indian 2.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil