Just In
- 2 hrs ago
அம்மாவ பத்தி ஏன் பேசின.. நான் ஒண்ணும் ஸ்கூல் பொண்ணு கிடையாது.. பாலாஜியை வெளுத்து வாங்கிய ஷிவானி!
- 2 hrs ago
தேவி தியேட்டரில் மாஸ்டர் படம் பார்த்த தளபதி விஜய்.. வைரலாகும் வீடியோ.. சந்தோஷத்தில் ரசிகர்கள்!
- 5 hrs ago
தளபதி விஜய்யின் மாஸ்டரை கையில் எடுத்த பிக் பாஸ் நிறுவனம்.. பாலிவுட்டில் ரீமேக் பண்ண போறாங்களாம்!
- 6 hrs ago
ரொம்ப ஹேப்பி.. கேபிக்கு ரியோ மனைவி சொன்ன எமோஷனல் மெசேஜ்.. என்னன்னு நீங்களே பாருங்க!
Don't Miss!
- News
திருவண்ணாமலை திருவூடல் திருவிழா: நந்திக்கு தரிசனம் தந்த அண்ணாமலையார் - சூரியனுக்கும் காட்சி
- Automobiles
எக்ஸ்ட்ரா பம்பர் வரிசையில் அடுத்த அதிரடி! இனி இது இல்லாமல் டூவீலர் ஓட்டி பந்தா காட்ட முடியாது! என்ன தெரியுமா?
- Sports
அடுத்தடுத்த இடத்துல இருக்கற அணிகள் மோதும் 59வது போட்டி... வெற்றி யாருக்கு.. ரசிகர்கள் ஆர்வம்
- Finance
கலவரத்திற்கு முன் பிட்காயின் மூலம் பேமெண்ட்.. அமெரிக்காவில் நடந்த கொடூரம்..!
- Lifestyle
கோதுமை ரவை பாயாசம்
- Education
ரூ.1.13 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா? விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
3 பேரை காவு வாங்கிய இந்தியன் 2.. கறுப்பு வெள்ளை போஸ்டரில் கண்ணீர் அஞ்சலி செலுத்திய லைகா!
சென்னை: இந்தியன் 2 பட ஷுட்டிங் ஸ்பாட்டில் நிகழ்ந்த விபத்தில் ஊழியர்கள் மூன்று பேர் உயிரிழந்ததற்கு லைகா நிறுவனம் கறுப்பு வெள்ளை போஸ்டரில் இரங்கல் தெரிவித்துள்ளது.
ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் ஷுட்டிங் பூந்தமல்லி அருகே நசரத்பேட்டையில் உள்ள ஈபிவி பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. இதற்காக அங்கு பிரத்யோக செட் அமைக்கப்பட்டுள்ளது.
இதில் நடிகைகள் காஜல் அகர்வால், பிரியா பவானிஷங்கர், சித்தார் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். படப்பிடிப்பிற்காக அங்கு உயரமான கிரேன்களில் லைட்டுகள் கட்டப்பட்டிருந்தன.
அதிர்ச்சி.. இந்தியன் 2 படப்பிடிப்பு விபத்தில் இறந்த கிருஷ்ணா கார்ட்டூனிஸ்ட் மதன் மருமகனாம்!

3 பேர் பலி
இந்நிலையில் நேற்றிரவு படப்பிடிப்பின் போது கிரேன் திடீரென சரிந்து விழுந்தது. உதவி இயக்குனர் கிருஷ்ணா, மற்றும் படப்பிடிப்பு ஊழியர்களான 29 வயது மது, 60 வயது சந்திரன் ஆகிய 3 பேர் தலையில் பலத்த காயமடைந்து உயிரிழந்தனர். ஒரு பெண் உட்பட 9 பேர் காயமடைந்தனர்.

சோகம்
காயமடைந்தவர்கள் தண்டலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்தில் 3 பேர் பலியானதற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். திரைத்துறையினரும் இந்த சம்பவத்தால் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

கறுப்பு வெள்ளை போஸ்டர்
இந்நிலையில் இந்தியன் 2 படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனம் கிரேன் விபத்தில் உதவி இயக்குநர் உட்பட 3 பேர் பலியானதற்கு இரங்கல் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கறுப்பு வெள்ளை போஸ்டரை வெளியிட்டு இரங்கலை பதிவு செய்திருக்கிறது லைகா நிறுவனம்.
— Lyca Productions (@LycaProductions) February 19, 2020 |
3 பேரை இழந்திருக்கிறோம்
அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, எங்களுடைய உண்மையான வலியை வார்த்தைகளால் சொல்ல முடியாது. இந்தியன் 2 செட்டில் நேற்று நடந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்திருப்பது மிகவும் வருத்தமளிக்கிறது. கடினமான உழைப்பாளிகள் மூன்று பேரை இழந்திருக்கிறோம்.

3 பேரை இழந்திருக்கிறோம்
அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, எங்களுடைய உண்மையான வலியை வார்த்தைகளால் சொல்ல முடியாது. இந்தியன் 2 செட்டில் நேற்று நடந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்திருப்பது மிகவும் வருத்தமளிக்கிறது. கடினமான உழைப்பாளிகள் மூன்று பேரை இழந்திருக்கிறோம்.

ஆழ்ந்த இரங்கல்
கிருஷ்ணா, உதவி இயக்குநர், சந்திரன், கலை உதவியாளர், மது, புரடெக்ஷன் உதவியாளர் ஆகியோரின் குடும்பத்தினருக்கு எங்களின் ஆழ்ந்த இரங்கல். அவர்களின் ஆன்மா சாந்தியடையட்டும். இவ்வாறு லைகா நிறுவனம் தங்களின் இரங்கல் போஸ்டரில் தெரிவித்துள்ளது.