»   »  தமிழகத்தில் அரசியல்.. ஐதராபாத்தில் 'இந்தியன் 2' ஷூட்டிங் - கமலின் ரெட்டைக்குதிரை சவாரி!

தமிழகத்தில் அரசியல்.. ஐதராபாத்தில் 'இந்தியன் 2' ஷூட்டிங் - கமலின் ரெட்டைக்குதிரை சவாரி!

Posted By:
Subscribe to Oneindia Tamil
இந்தியன் 2 படப்பிடிப்பு ஆரம்பம்- வீடியோ

சென்னை : கமல்ஹாசன் ஒருபுறம் அரசியல் என்ட்ரியை தொடங்கியிருந்தாலும், மற்றொரு புறம் இந்தியன் 2 படப்பிடிப்பு பணிகளிலும் ஈடுபட இருக்கிறார்.

'விஸ்வரூபம் 2' படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இயக்குனர் ஷங்கருடன் 'இந்தியன் 2' படத்தில் இணைந்துள்ளார் கமல்.

'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் தொடங்கவுள்ளது.

கமல்ஹாசன்

கமல்ஹாசன்

தமிழகத்தில் தற்போது சினிமா அரசியல் தலை தூக்கியுள்ளது. ஏற்கெனவே ரஜினிகாந்த் தனது அரசியல் ஆன்மீக அரசியல் என்று அறிவிப்பு வெளியிட்டார். இவரைத் தொடர்ந்து சமீபத்தில், உலகநாயகன் கமல்ஹாசன் மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் கட்சி கொடி, பெயர், சின்னம் ஆகியவற்றை அறிவித்தார்.

தீவிர பணிகள்

தீவிர பணிகள்

இதையடுத்து, கமல்ஹாசன் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். மேலும், நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களை நியமனம் செய்து வருகிறார். இதற்கிடையில், தனது சினிமா பணியிலும் ஈடுபட்டு வருகிறார்.

ஷூட்டிங்

ஷூட்டிங்

'விஸ்வரூபம் 2' படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இயக்குனர் ஷங்கருடன் 'இந்தியன் 2' படத்தில் இணைந்துள்ளார் கமல். இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலும் சிட்டியில் தொடங்கவுள்ளது.

ஷூட்டிங் வேலை தொடக்கம்

ஷூட்டிங் வேலை தொடக்கம்

இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடத்தத் திட்டமிடப்பட்டு அதற்கான பணிகளும் ஆரம்பமாகியுள்ளது. ஏற்கெனவே இப்படம் அரசியல் கதையை பின்னணியாக வைத்து உருவாக்கப்படும் என்று தகவல் வெளியாகியிருந்தது.

சென்சார்

சென்சார்

இதற்கிடையே, சென்சார் அதிகாரிகள் 'விஸ்வரூபம் 2' படத்தை பார்த்து U/A சான்றிதழ் அளித்துள்ளனர். தணிக்கை சான்றிதழ் பெற்றதை அடுத்து இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அநேகமாக தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அரசியலுக்கு வந்தபின்

அரசியலுக்கு வந்தபின்

கடந்த 2015-ம் ஆண்டு வெளியான 'தூங்காவனம்' படத்திற்கு பின்னர் வெளியாகும் கமல்ஹாசன் படம் இதுதான் என்பதால் 'விஸ்வரூபம் 2' படத்தை மிகப்பெரிய அளவில் வரவேற்க கமல் ரசிகர்கள் தயாராகி வருகின்றனர். அரசியலுக்கு வந்தபின் வெளியாகும் முதல் படம் என்பதாலும் அநேக எதிர்பார்ப்பு நிலவுகிறது.

English summary
Kamal Haasan has launched a political party in one hand, but on the other hand he is going to be involved in 'Indian 2' shooting. Kamal is joining 'Indian 2' with director Shankar. The shooting of 'Indian 2 'will begin in Ramoji Rao Film city in Hyderabad.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X