For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  அதெல்லாம் யார் சொன்னா.. அந்த முடிவுக்கு வாய்ப்பே இல்லை.. இந்தியன் 2 விவகாரம்.. லைகா திட்டவட்டம்!

  |

  சென்னை: நீளும் லாக்டவுனால் கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்தை தயாரிப்பு நிறுவனம் டிராப் செய்யப் போவதாக வெளியான வதந்திகளுக்கு லைகா தரப்பு விளக்கம் அளித்திருக்கிறது.

  எதிர் காலத்தை கனித்த உலகநாயகன் | Kamal Hassan, Vijay Sethupathi | Marudhanayagam

  கத்தி, 2.0, தர்பார், மாஃபியா உள்ளிட்ட பல பெரிய பட்ஜெட் படங்களை கோலிவுட்டில் தயாரித்து வெளியிட்டு வருகிறது லைகா நிறுவனம்.

  இந்தியன் 2 படத்தை லைகா நிறுவனம் பாதியிலேயே நிறுத்தப் போவதாக வெளியாகும் வதந்திகளை லைகா தரப்பு திட்டவட்டமாக மறுத்துள்ளது.

  கலங்க வைக்கும் போட்டோ.. அந்த கேவலமான அனுபவம் எனக்கும் உண்டு.. பிரபல இயக்குநர் உருக்கம்!

  பாட்ஷா வசூல்

  பாட்ஷா வசூல்

  இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா, சுகன்யா, கவுண்டமணி, செந்தில் நடிப்பில் 1996ம் ஆண்டு வெளியான படம் இந்தியன். அதற்கு முந்தைய ஆண்டு வெளியான சூப்பர் ஸ்டார் ரஜினியின் பாட்ஷா படத்தின் வசூலையே பின்னுக்குத் தள்ளி பல விருதுகளை குவித்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.

  இந்தியன் 2

  இந்தியன் 2

  கிட்டத்தட்ட 24 வருடங்கள் கழித்து இந்தியன் படத்தின் 2ம் பாகத்தை லைகா தயாரிப்பில் உலகநாயகனை வைத்து மீண்டும் ஷங்கர் இயக்கி வருகிறார். இந்த படத்தில் காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்த ஆண்டு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. லாக்டவுனால், அடுத்த ஆண்டுக்கு ரிலீஸ் தேதி தள்ளிப் போயிருக்கிறது.

  ஷூட்டிங் ஸ்பாட் விபத்து

  ஷூட்டிங் ஸ்பாட் விபத்து

  இந்நிலையில், இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் சென்னை அருகே பூந்தமல்லியில் உள்ள ஈ-வி.பி பூங்காவில் பிரம்மாண்ட செட் அமைத்து ஷூட்டிங் செய்து வந்தனர். ராட்சத கிரேன் எதிர்பாராத விதமாக அறுந்து விழுந்ததில் துணை இயக்குநர் உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சினிமா துறைக்கே கருப்பு நாளாக அமைந்தது.

  பேரிழப்பு

  பேரிழப்பு

  உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு தொகை, ஷூட்டிங் ஸ்பாட்டில் பணிபுரிபவர்களுக்கு காப்பீடு என லைகா நிறுவனத்துக்கு பல கோடி ரூபாய் இதனால், இழப்பு ஏற்பட்டது. எல்லாத்தையும் விட பேரிழப்பாக இந்தியன் 2 படத்திற்காக உழைத்தவர்களின் மரணம் லைகா நிறுவனத்தையும், கமல்ஹாசனையும், இயக்குநர் ஷங்கரையும் ரொம்பவே பாதித்தது.

  வைரலான வதந்தி

  வைரலான வதந்தி

  கோடம்பாக்கத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை, கோலிவுட்டில் புதிய வதந்தியை கிளப்ப துணையாக அமைந்திருக்கிறது. கொரோனாவில் இருந்து கோலிவுட் மீள நீண்ட நாட்கள் ஆகும் என்றும், இதனால், இந்தியன் 2 படத்தை தயாரிப்பு நிறுவனம் கைவிட திட்டமிட்டுள்ளனர் என்ற தகவல் தீயாய் பரவியது.

  முற்றுப்புள்ளி

  முற்றுப்புள்ளி

  ஆனால், இந்தியன் 2 படத்தை பாதியிலேயே நிறுத்தும் எண்ணம் துளி கூட தங்களுக்கு இல்லை என லைகா தரப்பு விளக்கம் அளித்திருக்கிறது. மேலும், அது முற்றிலும் வதந்தி என்றும், இந்தியன் 2 மட்டுமல்ல, லைகா தயாரிப்பில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தையும் கை விடும் எண்ணம் இல்லை. லாக்டவுன் முடிந்தவுடன் ஷூட்டிங் பணிகள் அசுர வேகத்தில் தொடங்கும் எனக் கூறியுள்ளனர்.

  English summary
  The producers of Kamal Haasan's Indian 2 have clarified that the movie has not been dropped. They shared that the shooting of the film will resume after the lockdown.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X