மீண்டும் துவங்கும் இந்தியன் 2 ஷுட்டிங்... எப்போ தெரியுமா ?
சென்னை : டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில் கமல் இந்தியன் 2 படத்தில் நடித்து வந்தார். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஷுட்டிங் ஸ்பாட்டில் நடைபெற்ற கிரைன் விபத்தில் தொழிலாளர்கள் 2 பேர் உயிரிழந்ததால், படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
அதற்கு பிறகு கொரோனா, லாக்டவுன் காரணமாக தொடர்ந்து இந்தியன் 2 ஷுட்டிங் துவங்குவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. மீண்டும் ஷுட்டிங் நடத்த அரசு அனுமதி அளித்த போது, ஷங்கர் தனது அடுத்த படங்கள் பற்றிய அறிவிப்பை வெளியிட்டார். இதனால் கடுப்பான லைகா நிறுவனம், இந்தியன் 2 படத்தை முடிக்காமல் மற்ற படங்களை ஷங்கர் இயக்க தடை விதிக்க வேண்டும் என சென்னை மற்றும் ஐதராபாத் ஐகோர்ட்களில் வழக்கு தொடர்ந்தது.

லைகா தொடர்ந்த வழக்கு
தொடர்ந்து லைகா மற்றும் ஷங்கர் இடையே சமரசம் ஏற்படாமல். வழக்கு தொடர்ந்து கொண்டே சென்றது. இதனால் கமல், தேர்தல் வேலைகளை முடித்து விட்டு டைரக்டர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் விக்ரம் படத்தில் நடிக்க தவங்கினார். இதன் படப்பிடிப்பு தற்போது பாதி நிறைவடைந்து விட்டது.

வழக்கு முடித்து வைப்பு
இந்நிலையில் சமீபத்தில் லைகா நிறுவனம் மற்றும் ஷங்கர் தரப்பினர் சமரச பேச்சு நடத்த தயாராக இருப்பதாக தெரிவித்தனர். இதனால் வழக்கை முடித்து வைப்பதாக கோர்ட்டும் தெரிவித்தது. லைகா - ஷங்கர் இடையேயான பிரச்சனை முடிவுக்கு வந்து விட்டதால், விரைவில் இந்தியன் 2 படத்தின் ஷுட்டிங்கை மீண்டும் துவக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

டிசம்பரில் ஷுட்டிங்கா
டிசம்பர் மாதம் முதல் மீண்டும் இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஷங்கரும் தற்போது தெலுங்கில் ராம் சரண் நடிக்கும் ஆர்சி 15 படத்தை இயக்கி வருகிறார். கமல், ஷங்கர் இருவரும் தாங்கள் தற்போது ஈடுபட்டு உள்ள படங்களின் வேலைகளை முடித்த பிறகு இந்தியன் 2 வேலைகளை துவக்குவார்கள் என்றும் கூறப்படுகிறது.

நடிகர்கள் பிஸி
இந்தியன் 2 படத்தில் போலீஸ் வேடத்தில் நடித்த விவேக் உயிரிழந்து விட்டார். மற்ற நடிகர், நடிகைகள் வேறு படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்கள். அதனால் இந்த ஆண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்தியன் 2 படப்பிடிப்பு மீண்டும் துவங்கப்படலாம் என கூறப்படுகிறது.

இவங்களும் இருக்காங்க
இந்தியன் 2 படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் லீட் ரோலில் நடிக்கிறார்கள். பிரியா பவானிசங்கர், டெல்லி கணேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் மிக முக்கிய ரோல்களில் நடிக்கிறார்கள். அனிருத் இசையமைத்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











